Saturday, July 3, 2010

குழந்தைகளின் உலகம்



                                                                                                                  ஜனவரி - பிப்ரவரி 2006குழந்தைகளின் உலகம் 
சேக்கிழார்

1

எப்போதுமே குழந்தைகள் விரும்பும் பொருட்கள்
மிக உயரத்தில் இருக்கிறது
அவைகளை பற்றி எடுக்க
குழந்தைகள் தங்கள் குதிகாலை உயர்த்தி
வளர வேண்டியிருக்கிறது
சாமர்த்தியமான குழந்தைகள்
நாற்காலிகள் போட்டும்
அப்பாவின் தோளில் அமர்ந்தும்
பொருட்களை எடுத்து விடுகின்றனர்
வெகுசில குழந்தைகளே
கையாலே குச்சியாலே
பொருட்களை தள்ளிவிட்டு எடுத்துக் கொள்ளுகின்றனர்
விளையாடுகின்றனர்
குதூகளிக்கின்றனர்
பிறகு
தாங்கள் விரும்பியெடுத்த பொருளை
யாருக்குமே எட்டாத உயரத்தில்
குழந்தைகளின் உயரத்தில்
ஒளித்து வைக்கின்றனர்.

2

குழந்தைகளோடு விளையாட
பொம்மைகளையே சிபாரிசு செய்யலாம்
என்ன செய்தாலும் அவைதான் மந்தென்றுகிடக்கும்
ஆனால்
குழந்தைகளின் கையில் கொடுக்கப்பட்ட பொம்மைகள்
கண்கள் நோண்டி எடுத்தும்
கழுத்து திருகப்பட்டும்
தலைமுடி அறுத்தெறிந்தும் விடப்படும்
அதைப்பற்றியெல்லாம் நமக்கு கவலை இல்லை
பொம்மைகள் குறித்த கவலை
குழந்தைகளுக்குத்தான்.
'நன்றி: www.keetru.com'
http://keetru.com/unnatham/jan06/chekizhar.php



No comments: