Showing posts with label செய்திகள் NEWS. Show all posts
Showing posts with label செய்திகள் NEWS. Show all posts

Sunday, November 9, 2014

வெற்றிகரமான ஆறாவது ஆண்டில் இந்நேரம்.காம்!

அன்பிற்கினிய வாசக நெஞ்சங்களே!
கடந்த 2009ஆம் ஆண்டு மே முதல் தேதி துவங்கப்பட்ட இந்நேரம்.காம் இணைய தளம், தனது ஐந்தாண்டுப் பயணத்தைப் நிறைவு செய்து ஆறாவது ஆண்டில் தடம் பதிக்கிறது என்பதைப் பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

அரசியல், மதம், பணம் போன்றவற்றிற்குச் சிரம் பணிந்து இரட்டை நிலைபாட்டில் இயங்கி வரும் தமிழக ஊடகங்கள் பெரும்பாலானவற்றுக்கு மத்தியில் இளைஞர்களின் புதிய படைப்பாக உருவானதே இந்நேரம்.காம்.

தமிழர்களுக்கான ஆபாசமில்லாத, நேர்மையான ஊடகம் ஒன்று வேண்டுமென ஏங்கித் தவித்த வாசகர்கள் சிலர் துணிவுடன் முன் வந்து கை கோத்து இயக்குவது "இந்நேரம்.காம்". 2008 ஆம் ஆண்டு வலைப்பூவில் ஆரம்பித்த இப்பயணம், வாசகர்களின் பெருவாரியான வரவேற்பினைத் தொடர்ந்து 2009 ல் டாட் காமாக தனி டொமைன் பதிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது.

Thursday, January 12, 2012

தலிபான்களின் உடல் மீது சிறுநீர் கழிக்கும் அமெரிக்க கடற்படை வீரர்கள் !

 Picture soure

கொல்லப் பட்ட தலிபான் உடல்கள் தரையில் கிடத்தப் பட்டு அதன் மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சி யூ டியூப்பில் வெளியாகியுள்ளது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வீரர்களின் இச்செயலைக் கண்டித்து அமெரிக்க இஸ்லாமிய நல்லுறவு கவுன்சில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனட்டாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. போர் விதிமுறைகளை மீறும் வகையில் அமெரிக்க கடற்ப படை  வீரர்கள் செயல்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கது. அநாகரிகமானது என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வீடியோ காட்சி குறித்தும் அதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் பற்றி தெரிவித்த பெண்டகன் மற்றும் அமெரிக்கக் கடற்ப் படை செய்தித் தொடர்பாளர்கள் ''இந்தக் காட்சியை வீடியோ எடுத்து  இணையதளத்தில் வெளியிட்டது யார்  என்பது தெரியவில்லை.

Wednesday, June 22, 2011

Google translate கூகுளின் தமிழ் சேவை

 அன்பின் தமிழ் நெஞ்சங்களே!

ணினித்துறையில் தமிழர்கள் பலர் இருந்தும் அதிலும் குறிப்பாக Microsoft நிறுவனத்தில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தும் இதுவரை கூகிள் தமிழில் மொழிபெயர்ப்பு வெளியிடாமல் இருந்தது ஆச்சிரியமாகவே இருந்தது, அந்தக்குறையை கூகிள் நிறுவனம் இன்று பூர்த்தி செய்துள்ளது.

ஆங்கிலம், அரபி, ஹிந்தி, உருது போன்ற பல மொழிகளில் உள்ள வலைத்தளங்கள், மற்றும் செய்திகளை ஒரே கிளிக்கில் தெரிந்து கொள்ள இது ஏதுவாக அமையும்.

அதற்கான சுட்டி:


ஆங்கிலம் மற்றும் அரபியில் மொழிமாற்றம் செய்யப்பட்டதின் நகல் இத்துடன் இனைத்துள்ளேன்.
 

by mail from ஹாஜா மொஹைதீன்

Monday, June 20, 2011

டாட் காம் (.COM) ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி!

1980 ஆம் ஆண்டுகளில் அறிமுகமான இணைய தள பெயர்களை தனியாக அடையாளப்படுத்த அவற்றின் இணைய முகவரியின் இறுதியில் .com அல்லது .net மற்றும் .org என்ற மூன்று பெரும்பிரிவுகளாக வகைப்படுத்தி இருந்தனர்.பிறகு 2000 ஆண்டின் தொடக்கத்தில் இணைய தளங்களின் எண்ணிக்கை அசுர வளர்ச்சியடைந்ததால், அவற்றின் பின்னொட்டு (Suffix) அடையாளங்களில் மேலும் சில வகைகளை அறிமுகப்படுத்தினர். குறிப்பாக .cc, .co போன்றவற்றைச் சொல்லலாம்.

மென்மேலும் வளர்ச்சியடைந்த இணையத்தில், முகவரிகளில் நாடுகளின் பெயர்களையும் .in, .us, .de மற்றும் .info, .biz என ஏழுவகைகளுடன் மொத்தம் முன்னூறு வகைப்படுத்தி,இணைய தேடல்வசதி எளிமையாக்கப்பட்டது உலகின் அனேக நாடுகள் தனித்தனி வழங்கிகளில் இணைய சேவையைத் செயல்படுத்தத் தொடங்கிய பின்னர் மேலும் வகைப்படுத்த வேண்டிய தேவை எழுந்ததால் Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) என்ற அமைப்பு மேலும்சில புதிய வகைப் பிரிவுகளை அறிமுகம் செய்ய வேண்டி உருவாக்கப்பட்டது.

Wednesday, October 20, 2010

இத்திஹாத் வழங்கும் இலவச விசா

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரம் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது இத்திஹாத் விமான நிறுவனம். இந்த விமான சேவை நிறுவனம் வாடிக்கையாளரைக் கவரும் வகையில் இலவச விசா வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தியாவின் எந்தப்பகுதியிலும் உள்ள  விமான நிலையத்திலிருந்து அபுதாபி செல்பவர்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் படி இந்தியாவிலிருந்து அபுதாபி செல்பவர்கள் இத்திஹாத் விமானத்தில் பயணச்சீட்டு வாங்கவேண்டும். அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 க்குள் இந்த பயணச்சீட்டை முன்பதிவு செய்ய வேண்டும். பயணத் தேதி அக்டோபர் 20 முதல் டிசம்பர் 15 வரைக்குள் இருக்க வேண்டும்.


14 நாள் விசா மற்றும் 30 நாள் விசா ஆகியவை இந்தச் சலுகையின் படி ஒருவர் பெற்றுக் கொள்ளலாம்.

Wednesday, October 6, 2010

குடிநீர் கிணற்றைக் காணவில்லை - உயர் நீதிமன்றத்தில் விநோத வழக்கு

பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் கிணற்றைக் காணவில்லை என்றும், அந்தக் கிணற்றைக் கண்டுபிடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விநோத வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சின்னுப்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் தனது வக்கீல் ஏ.காஜாமுகைதீன் மூலம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

நிலக்கோட்டை தாலுகா கோம்பைபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்னுப்பட்டியில் 39 சென்டு இடத்தில் பொதுகுடிநீர் கிணறு இருந்து வந்தது. இதை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக கிணற்றை மூடிவிட்டு அந்த இடத்தில் வீடு கட்டி உள்ளனர். அங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து தங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலும் அதே நபர்கள் 49 சென்டு வண்டி பாதையாகிய பொது நடைபாதையை ஆக்கிரமிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த சட்டவிரோத செயலை மறைப்பதற்காக, அதிகாரிகள் துணையுடன் வருவாய் ஆவணங்களை திருத்த முயன்று வருகின்றனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே பொது குடிநீர் கிணற்றை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். பொது குடிநீர் கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பொது பாதையை மக்கள் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் பயன்படுத்தவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் தனது கிணற்றை காணவில்லை, கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது போன்று நடித்து இருப்பார். நகைச்சுவைக்காக அந்த காட்சி உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் உண்மையிலேயே ஒரு கிராமத்தில் குடிநீர் கிணற்றை காணவில்லை என்றும், அதை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 ----------------------------------------------------------------------------------------------------------------


Monday, October 4, 2010

ஆரிய நாகரிகம் மூடநம்பிக்கையை முனைந்து வளர்க்கிறது: கருணாநிதி சாடல்!

தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அண்மையில் பாபர்மசூதி தீர்ப்பைப் பற்றி கூறுகையில்  வரவேற்கத்தக்க தீர்ப்பு என்பதாக முதலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஆரிய நாகரிகத்தை கடுமையாகச் சாடியுள்ளார்.
அந்த அறிக்கையில், "அயோத்தி சம்பந்தமான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து, இரண்டு இந்து அமைப்புகளுக்கும், ஒன்று முஸ்லிம் அமைப்பிற்கும் சமமாக வழங்க வேண்டுமென்று தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.

நீதிபதி சர்மா தனது தீர்ப்பில், 'சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டடம் எழுப்பப்பட்டது. எந்த ஆண்டு என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.
சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ம் ஆண்டில் டிசம்பர் 22ம் தேதி நள்ளிரவில், சிலைகள் வைக்கப்பட்டன. சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் பிறந்த இடமாகக் கருதி, இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளிலிருந்தே, அதை புனிதத் தலமாகக் கருதி, ஆன்மிகப் பயணம் சென்று வருகின்றனர்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ராமர் கிருதயுகத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டது. இப்படி கற்பனைக்கு எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என அறுதியிட்டு உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது,

17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது.
ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, தென்னகத்தை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது.
திராவிட இனத்தின் வரலாறு, நிரல்படுத்தி முறையாக எழுதப்படவில்லை என்றாலும் கூட, லெமூரியா கண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி, சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழ் மொழியைப் பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூலமாக வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்லியல், மொழியியல் வல்லுனர்கள், திராவிட நாகரிகம் குறைந்தது 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த அடிப்படையில், நம்முடைய திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றை தெளிவாக உலகம் அறிந்து கொள்ள முடியும். ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம், அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூட நம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டால் போதும்" என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Sunday, October 3, 2010

டெல்லி காமன்வெல்த் போட்டி: பிரமாண்டமாக தொடங்கியது + காமன்வெல்த் கேம்ஸ் 2010 டெல்லி தீம் சாங் [HD] by A R ரஹ்மான்

புதுடெல்லி: பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகளுடன் டெல்லி காமன்வெல்த் போட்டி தற்போது (இன்று மாலை) தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், இளவரசர் சார்லஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
அனைத்து மாநில கலைஞர்களும் தங்களது பாரம்பரிய இசைக்கருவியை வாசித்து பார்வையாளர்களை அசத்தினர். கண்கவர் வாண வேடிக்கைக்குப் பிறகு வண்ண விளக்குகளுடன் உலகின் மிகப்பெரிய ஹீலியம் பலூன் பறந்தது. அதில், பல்வேறு விளையாட்டுகளைக் குறிக்கும் வகையிலான உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில், 7 வயது சிறுவன் கேஷவ், மிகச்சிறப்பாக தபேளா வாசித்து அனைவரையும் கவர்ந்தான். விழா ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாகவும் அற்புதமாகவும் உள்ளதாக வெளிநாட்டு விருந்தினர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Source: http://www.inneram.comடெல்லி காமன்வெல்த் போட்டி: பிரமாண்டமாக தொடங்கியது
-------------------------------------------------------------------------------------------------------




Friday, October 1, 2010

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு என்பது ஆபத்தானது: கி.வீரமணி


அலகாபாத் தீர்ப்பு குறித்து நாடு அமைதிப்பூங்காவாகவே தொடரவேண்டும், ஒருபோதும் மதவெறி காரணமாக அமளிக்காடாக மாறக்கூடாது என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாபர் மசூதி, ராமர் கோயில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்காக கடந்த 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பு   பரபரப்போடு எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு அலகாபாத் உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகளால் நேற்று  அளிக்கப்பட்டுவிட்டது.


மூன்று நீதிபதிகளும் இணைந்து கருத்திணக்கத்தோடு ஒரே தீர்ப்பாக வழங்கவில்லை. மூவரும் தனித்தனியே எழுதியுள்ளனர். இத்தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள், சட்ட அடிப்படையில் அமைவதைவிட ‘நம்பிக்கை’ நீண்ட காலமாக இருந்து வந்த காரணம் என்பது போன்றவைகளால் அமைந்த விசித்திரத் தீர்ப்பாகும்! வல்லடி வழக்குகளும்கூட! நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு என்பது ஆபத்தானது!


“நம்பிக்கை அடிப்படையில்’’ என்றால், யாரும் எதற்கும் ஆதாரமோ, சான்றோ, சட்ட விதிகளையோ தேடித்தேடி வழக்கின் தீர்ப்பை அமைக்க முடியாது   பெருகும் ஆபத்தான முறைக்கு அது வழிவகுக்கும் அபாயம் உள்ளது. அதற்கு இந்த அலகாபாத் தீர்ப்பு ஓர் ‘அருமையான’ ‘விசித்திர’த் தீர்ப்பு!


இங்கிலாந்து நாட்டு இலக்கியத்தில் ஒரு சொற்றொடரை  கட்டுரைகளில் பயன்படுத்தி பின் அதைப் பிரபலப்படுத்தினார்கள். "Much might be said in both sides" “இரண்டு பக்கங்களிலும் நியாயங்கள் ஏராளம் சொல்லலாம்’’ என்று கூறும் நிலையே அது.


யாரையும் சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைப்பவர்கள் இதுபோன்ற நிலையை பல வாதங்களிலும், வழக்குகளிலும் எடுப்பதுண்டு. அதுபோல்தான் இம்மூன்று தீர்ப்புகளும் அமைந்துள்ளன!


தீர்ப்பு வெளியாகும் முன்பே பாதிக்கப்பட்டவர்கள், இதை ஏற்க இயலாத வழக்காடிகளில் ஒரு சாரார், மேல்முறையீட்டை   அப்பீலை   உச்சநீதிமன்றத்தில் செய்வார்கள்   செய்ய வாய்ப்புண்டு என்று மத்திய அரசு தெளிவாகவே கூறி, யாரும் பதற்றம் அடையாமல் இருந்து, எவ்வித கலவரங்களுக்கும் இடம்தராமல்    சுமுகமான வாழ்வு வாழவேண்டும் என்று அறிவித்து, தக்க முன்னேற்பாடுகளை மும்முரத்துடன் செய்ததால், இந்தியாவின் எந்தப் பகுதிகளிலும்   குறிப்பாக வடக்கே உள்ள பல மாநிலங்கள் உள்பட எங்கும் அமைதி தவழுவது மிகவும் ஆறுதலானது.

தந்தை பெரியாரின் சுயமரியாதை   பகுத்தறிவு மண்ணான தமிழ்நாடு, முன்பு போலவே (1992) அமைதிப் பூங்காவாகவே காட்சியளிப்பது அதிசயம் அல்ல; காரணம், மதவெறி மாய்த்து மனிநேயத்தைக் காத்த திராவிடர் இயக்கத்தின்ஆட்சியாகும்!


புராண கால கற்பனைகளுக்கும், இதிகாச கால நம்பிக்கைகளுக்கும் மதப் பூச்சு பூசப்பட்டதாலேயே வெறும் நம்பிக்கை அடிப்படையில் ராமர் அங்குதான் பிறந்தார் என்றெல்லாம் இதுபோன்ற தீர்ப்புகளில் எழுதப்படுவது, நீதிமன்றங்களை   சட்ட கோர்ட்டுகள் (Courts of Law) என்பதற்குப் பதிலாக, நம்பிக்கை கோர்ட்டுகளாக (Courts of belief and Faith) ஆக்குவதாக அமைந்துள்ளது. இதன் தீய விளைவு நிகழ்காலத்தில் மட்டுமல்ல, வருங்காலத்திலும் நியாய விரோத தீர்ப்புகள், புற்றீசல்கள்போல் கிளம்ப வழிவகுத்து விடும்.

இராமாயணமே 57 இராமாயணங்கள் உள்ள நிலையில், ராமன் பிறந்த இடம், பிரச்சினைக்குரிய அந்த இடம்தான் என்று சொல்வது   நம்பிக்கை அடிப்படையில்தான்   சட்ட சான்றுகள் அடிப்படையில்  அல்ல என்ற நிலையே உள்ளது. எப்படி இருப்பினும், நாடு அமைதிப்பூங்காவாகவே தொடரவேண்டும். ஒருபோதும் மதவெறி காரணமாக அமளிக்காடாக மாறக்கூடாது.

சமாதான சகவாழ்வின் மூலம்தான் நம் நாடு முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண முடியும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு 3 மாதங்கள் அவகாசம் உள்ளது   எனவே, இதற்காக வெற்றிக் கூச்சலோ, தோல்வி மனப்பான்மையுடன் கலவரங்களிலோ எவரும் ஈடுபடுவதோ கூடாது, மீண்டும் சட்டத்தின் ஆளுமையின் இறுதித் தீர்ப்பையே எதிர்பார்ப்போமாக! இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Source : http://www.inneram.com/2010100110934/veeramani-said-verdict-on-faith-is-unreliable

Tuesday, September 28, 2010

முல்லா நஸ்ருதீனும் இங்கிலாந்தைச் சார்ந்த ஆர்தர் லாங்க்ரனும் போட்டி

முல்லா நஸ்ருதீன் 100 வயதினை தாண்டி வாழ்ந்து கொண்டிருகிறார் அவரை பாராட்டி பேட்டி கண்டு வரலாம் என்று ஒரு நிருபர் சென்றார். அதற்கு  முல்லா நஸ்ருதீன் சொன்னார், "எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. மது மங்கை மாமிசம் பக்கம் நெறுங்க .மாட்டேன் மற்றும் நேரத்தில் படுத்து நேரத்தில் எழுந்து விடுவேன்" என்றார் ,இவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது மாடியிலிருந்து ஒர்  ஓசை வந்து கொடிருக்க நிருபர் "அது என்ன   சப்தமாக உள்ளது" என வினவ அதற்கு முல்லா சொன்னார் "ஒன்றுமில்லை எனது   தந்தை ஒரு குடிகாரர் மற்றும் எல்லா  கெட்ட பழக்கமும் அவருக்கு உண்டு அதுதான் இப்போழுது   குடித்து விட்டு  கத்திக்கொண்டிருகிறார் "என்று சொன்னார்.

இது எப்படி இருக்கு!

நாம்  தெரிந்துகொள்ள வேண்டியது நல்ல பழக்கம் மட்டும் நெடு நாள் வாழ  ஒரு காரணம் அல்ல. மற்ற காரணங்களும்   உண்டு  என்பதுதான்.

சரி பின் வரும் புதிய  செய்தி பாருங்கள் .
இதுவரை 2,92,000 சிகரெட் ஊதித் தள்ளியும் உயிரோடு இருக்கும் இங்கிலாந்தைச் சார்ந்த தாத்தா ஒருவர் தனது 100வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஒரு நாளைக்கு ஒருமுறை விஸ்கி குடிக்கும் பழக்கமும் உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆர்தர் லாங்க்ரன் என்ற இவர் (Arthur Langran) இரண்டாம் உலக போரின் போது சிப்பாயாக பணிபுரிந்த போதும் கிரானைட் வெடிவிபத்திலும் ஒருமுறை உயிர் தப்பியுள்ளார்.இரு ஆண்களுக்கு தந்தையான இவர் தனது இருபதாவது வயதில் சிகரெட்டை ஊதி தள்ளும் பழக்கத்தை ஆரம்பித்துள்ளார். தினமும் 10 சிகரெட் ஊதி தள்ளுவது இவரது பழக்கம், மேலும் உறங்குவதற்கு முன் ஒரு 'ரவுண்ட்'  ஸ்காட்ச் விஸ்கியையும் இறக்கி விட்டுதான் படுப்பாராம்.

சிகரெட் தாத்தாவின் சீக்ரெட் "யாரும் செய்ய கூடாது என்று சொல்லும் செயலை செய்வது தான் நான் ”என்று இங்கிலாந்திலுள்ள சன் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்
(செய்தி Source :http://www.inneram.com )
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புகை பிடிக்கும் பழக்கம் இன்று நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கிறது, புகையிலையை பற்ற வைத்து அதன் கடுமையான புகையை உள்ளிழுத்து விடுகிறோம் நுரையிரலில் அதன் கழிவுகள் படிகிறது இதனால் ஏற்படும் விளைவுகளை இன்று மருத்துவம் கூறிக்கொண்டிருக்கிறது. இறைவன் நம்மீது புரிந்திருக்கும் கருணையைப் பாருங்கள், புறவெளியில் காற்றில் வேறு பல வகையான வாயுகளும் அசுத்தங்களும் கலந்திருக்கின்றன் என்பதற்;;காக நமக்கு வேண்டிய ஆக்ஸிஜனை மட்டும் அவற்றிலிருந்து பிரித்தெடுத்து இரத்ததிற்கு கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான நுண்ணிய அறைகள் கொண்ட நுரையிரலை இறைவன் படைத்திருக்கிறான்.

நாம் என்ன செய்கிறோம் புகையிலையின் நச்சு புகையை உள்ளே செழுத்துகிறோம், அந்த நுரையிரல் வாயிருந்தால் நம்மை சபிக்கும் பாவி மனிதனே இதற்காகவா நான் படைக்கப் பட்டேன் என்று கூறும்.

குடிப்பழக்கமும் அது போல் தான் உடலுக்கு தேவையில்லாத திரவத்தை குடலுக்குள் இறக்குகிறோம் இதனால் கல்லிரல் பெருமளவு பாதிக்கப் படுகிறது. உடலில் சர்கரையின் அளவை இரத்ததில் சரியாக வைத்துக் கொள்ளவும், இரத்ததிலிருந்து நச்சுத் தன்மையை நீக்கவும், இரத்த உற்பத்திக்கும் பயன்படும் கல்லீரல் ஒரு கடுந்திரவத்தால் பாதிக்கப் படுகிறது. இது போன்று உடல் உறுப்புகளை சேதப்படுத்த நமக்கு எந்த உரிமையும் இல்லை.

இழப்பதற்கு முன்

Sunday, September 26, 2010

கொண்டலாத்தி -Kondalathi

க்ரியாவின் புதிய வெளியீடு, ஆசையின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு‌ கொண்டலாத்தி
 க்ரியாவின் புதிய வெளியீடும், ஆசையின் இரண்டாவது கவிதைத் தொகுப்புமான‌ கொண்டலாத்தி என்ற‌ புத்தகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் முழுவதும் பறவைகளைப் பற்றியவை. தற்காலத் தமிழ்க் கவிதையில் முழுவதும் பறவைகளைப் பற்றிய கவிதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு வெளியாவது இதுவே முதல்முறை. மேலும் இந்தத் தொகுப்பில் இருபதுக்கும் மேற்பட்ட பறவைகளின் முப்பது வண்ணப் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் புத்தகத்தின் விலை ரூ. 180 (அஞ்சலில் பெறக் கூடுதலாக ரூ.25/. அயல்நாட்டவர்கள் எங்களது இணையதளத்தின் மூலம் www.crea.in பெற்றுக்கொள்ளலாம் ). இந்த மின்னஞ்சலுடன் உள்ள இணைப்பில் கொண்டலாத்தி தொகுப்பிலிருந்து சில பக்கங்களை நீங்கள் படித்துப் பார்க்கலாம்.





க்ரியா வெளியீடுகளை எளிதாகப் பெற க்ரியாவின் இந்தியன் வங்கிக் கணக்கில் நீங்கள் பணம் செலுத்தலாம். விவரங்கள்: 

Bank: Indian Bank
Branch: L.B. Road Branch
Account Name: Cre-A: Publishers
Account No.: 768660941

பணத்தைச் செலுத்திவிட்டுத் தொலைபேசியிலோ அல்லது மின்னஞ்சலிலோ 
விவரத்தைத் தெரியப்படுத்தினால் உடனே  புத்தகத்தை அனுப்பி வைப்பார்கள் .




                                          


குமரேஷ்
நன்றி, வணக்கம்.
க்ரியா
 ஃப்ளாட் எண்: 3, எச்-18
தெற்கு அவென்யூ
திருவான்மியூர்
சென்னை- 600 041
தொலைபேசி: 044-2441 2993
கைபேசி: 9444512885
creapublishers@gmail.com
www.crea.in


எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தி

 ------------------------------------------------------------------------

Saturday, September 25, 2010

ஜெர்மனி இஸ்லாமிய அரசாக மாறும் : ஜெர்மனி அதிபர் மெர்கல்


பெர்லின் : ஜெர்மனியில் முஸ்லீம்கள் அதிகரித்து வருதல் மற்றும் ஜெர்மனியின் சமூக தளத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து ஜெர்மானியர்களுக்கு தெளிவான பார்வை இல்லை என்றும் வருங்காலத்தில் சர்ச்சுகளை விட மசூதிகள் அதிகம் இருக்க போகும் யதார்த்தத்தை ஜெர்மானியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் மெர்கல் கூறியதாக ப்ராங்க்பர்டர் அல்லெஜெமின் ஜெய்துங் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் அவ்வறிக்கையில் மெர்கல் " நிச்சயமாக ஜெர்மனியின் சமூக தளம் மிகப் பெரும் மாறுதலை சந்தித்து வருவதாகவும் இனி வரும் காலங்களில் மசூதிகள் நம் வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். 45 இலட்சம் முஸ்லீம்கள் வாழும் ஜெர்மனியில் சமீபத்தில் திலோ சராஜின் எனும் அரசியல்வாதி முஸ்லீம்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க மறுப்பதாகவும் குழந்தை பிறப்பின் மூலம் தங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதற்கு பதிலளிக்கும் முகமாகவே ஜெர்மனி அதிபரின் அறிக்கை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சுட்டி காட்டுகின்றனர். பிற ஐரோப்பிய தேசங்களை போல் விரைவில் ஜெர்மனியும்  இஸ்லாத்தின் இரும்பு கோட்டையாகும் என்றும் மெர்கல் குறிப்பிட்டார். மெர்கல் சொல்வதை போல் பிரான்ஸில் 20 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 30 % முஸ்லீம்களாகவும் பாரீஸ்போன்ற நகரங்களில் 45% மேலும் உள்ளது. இங்கிலாந்திலும் சுமார் 1000 மசூதிகள் உள்ளதாகவும் அதில் சில சர்ச்சுகளாக முன்னர் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பெல்ஜியத்தில் பிறக்கும் குழந்தைகளில் சுமார் 50 % முஸ்லீம்களாக உள்ளனர். சமீபத்தில் லிபிய அதிபர் கடாபி ஐரோப்பா கத்தியின்றி, தோட்டாவின்றி, தீவிரவாதிகளின்றி விரைவில் இஸ்லாத்தை தழுவும் என்று குறிப்பிட்டதை மேற்காணும் புள்ளிவிபரங்கள் நிரூபிப்பதாக சமூகவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Source இந்நேரம்.காம்ஜெர்மனி இஸ்லாமிய அரசாக மாறும் : ஜெர்மனி அதிபர் மெர்கல்

Thursday, September 9, 2010

இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி

முதலமைச்சர் கருணாநிதி இன்று ரமலான் திருநாள் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச்செய்தியில்,  ’’உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் தமது உடலையும், உள்ளத்தையும் வருத்திக்கொண்டு, கடுமையான நோன்பிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து சகிப்புத் தன்மையோடு அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் பண்புகள் சிறக்க ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும், மன எழுச்சியோடும் கொண்டாடுகிறார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள், “இஸ்லாம்” என்பது ஒரு வாழ்க்கை நெறி என்கிறார். அதாவது. “உரித்தெடுத்த பலாச் சுளையைப் போன்றதுதான் இஸ்லாம்.  இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மார்க்கமாக அமைந்திருக்கிறது.
ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவ தெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துகளில் இருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான்; எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்” என்கிறார்.
இப்படி வாழ்க்கைப் பிரச்சனைகள் அனைத்திற்கும் விடைகூறி வழிகாட்டும் நெறியாகவே அமைந்துள்ள இஸ்லாமிய நெறியைப் பின்பற்றித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவிவாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரும் நலமும் வளமும் எய்தி வாழ வேண்டுமென்பதற்காகத் தமிழக அரசு நபிகள் நாயகம் பிறந்த மீலாது நபி திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கி; உருது பேசும் முஸ்லிம்களைப் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்து; ஓய்வூதியம்பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பதை 2400 வரை உயர்த்தி; உலமா ஓய்வூதியத் திட்டத்தைத் தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டித்து - மாதந்தோறும் 750 ரூபாய் வீதம் ஓய்வூதியம் வழங்கி; உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து உதவிகள் வழங்கி; தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் - 2009 குறித்து, இஸ்லாமிய அமைப்புகள் அளித்த கோரிக்கையை ஏற்று, இஸ்லாமியர்களின் திருமணங்களைப் பதிவு செய்யும் படிவத்தில் தக்க திருத்தங்கள் செய்தும்; உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்துள்ளது உட்படப் பல்வேறு சலுகைகளை நல்கி இஸ்லாமிய சமுதாய மக்களை இந்த அரசு தொடர்ந்து அரவணைத்து வருவதை இந்நன்னாளில் நினைவுகூர்கிறேன்.
இந்த நினைவுகளோடு இஸ்லாம் வலியுறுத்தும் இன்றியமையாக் கடமைகளில் ஒன்றாகிய நோன்புக் கடமையைச் செம்மையாக நிறைவேற்றி, இன்று ரமலான் திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ்சார்ந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
Source : http://www.inneram.com/2010090910503/karunanidi-says-islam-is-like-peeled-jackfruit

Wednesday, August 25, 2010

யூதர்களை அழித்த ஹிட்லர் ஒரு யூதர் ? ஆச்சரியமூட்டும் மரபணு சோதனை முடிவுகள்


லண்டன் : இரண்டாம் உலக போரின் போது யூதர்களை கொன்று குவித்ததாக சொல்லப்படும் நாஜி கட்சியின் தலைவரும் ஜெர்மனியின் அப்போதைய அதிபருமான ஹிட்லரின் முன்னோர்கள் யூத மற்றும் ஆப்பிரிக்க வம்சத்தை சார்ந்தவர்கள் என்ற ஆச்சரியமூட்டும் முடிவுகளை சமீபத்திய மரபணு சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன.

ஜீன் - பால் முல்டர்ஸ் எனும் பத்திரிகையாளர் நியூயார்க்கில் தற்போது வசித்து வரும் ஹிட்லரின் தம்பி மகன் அலெக்ஸாண்டர் ஸ்டூவர்ட் மற்றும் ஆஸ்திரியாவில் வசிக்கும் ஹிட்லரின் மாமா மகன் நார்பர்ட் என்பவரிடமிருந்தும் பெற்ற சாம்பிள்களை வைத்து டி.என்.ஏ எனப்படும் மரபணு சோதனையை நடத்தியதில் இம்முடிவுகள் கிடைத்துள்ளன.
அச்சோதனையில் ஜெர்மனியில் அரிதாக இருக்கும் ஒரு வகை ஒய் க்ரோமஸோம் மூலம் இம்முடிவுக்கு வந்துள்ளனர். இவ்வகை குரோமஸோம்கள் யூத மற்றும் லிபியா, மொராக்கோ போன்ற வட ஆப்பிரிக்க மக்களிடத்தில் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்முடிவு குறித்து கருத்து தெரிவித்த ரோன்னி டெக்கார்ட் எனும் மரபியல் விஞ்ஞானி யூத இனம் ஒரு யூதரின் மூலம் அழிக்கப்பட்டுள்ளது வரலாற்று ஆச்சரியம் என்றும் நிச்சயமாக உலகில் ஆரிய இனமே உயர்ந்தது என்றும் தன்னை அப்படிப்பட்ட பரிசுத்தவானாக நினைத்த ஹிட்லர் இம்முடிவை கேட்டிருந்தால் நிச்சயம் துக்கப்பட்டிருப்பார் என்றார்.
http://www.inneram.com/2010082510275/hitler-is-a-jew-dna-samples-says

Tuesday, August 24, 2010

சைபர் கிரைம் குற்றங்கள் - பொது மக்களுக்கு ரிசர்வ் வங்கி வேண்டுகோள் !


சைபர் கிரைம் என்று சொல்லப்படும் கணினி வழி குற்றங்களில் இருந்து பாதுகாக்க பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனர் கே ஆர் ஆனந்தா கேட்டுக் கொண்டார். சென்னையில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியதாவது :

தற்சமயம் மோசடி செய்பவர்களின் செயலாக்கம் விரிவடைந்துள்ள சூழலில் சான்றிதழ்கள், கடிதங்கள், சுற்றறிக்கைகள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ கடித ஏட்டில் உயர் வங்கி அதிகாரியின் கையப்பம், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை அளித்து பொது மக்களை தங்கள் வலையில் எளிதாக சிக்க வைக்கின்றனர். இத்தகைய வலையில் சிக்கயவர்கள் பணத்தை வங்கியில் செலுத்துகின்றனர். பணம் செலுத்தப்பட்டவுடன்  மோசடியாளர்கள் அந்த பணத்தை கணக்கில் இருந்து எடுத்துவிடுகின்றனர். மேலும் அதிக தொகைகள் பரிவர்த்தனை வரிகள், பதிவுக் கட்டணம் என்ற பெயரில் கேட்கப்படுகின்றன.

இத்தகைய மோசடிகளிலிருந்து பொது மக்களை காப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் மூலமாக தொடர் விளம்பரங்கள் செய்து வருகிறது.

ரிசர்வ் வங்கி தனிப்பட்டவர்களுக்காக வைப்பு கணக்குகளை தொடங்குவதில்லை. அதேபோன்று எந்தவொரு தனிப்பட்ட நபரின் பெயரிலோ அல்லது நிறுவனத்தின் பெயரிலோ கணக்குகளை பராமரிப்பதில்லை. இதுபோன்ற கணக்குகளில் பணம் சேர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி எவ்விதமான சான்றிதழும் அளிப்பதில்லை. பண விநியோகத்திற்கான அதிகாரமும் எந்தவொரு நபருக்கு வழங்குவதில்லை.

இத்தகைய மோசடி திட்டங்களில் சிக்கி பொது மக்கள் பலர் பெரும் தொகைகளை இழந்துள்ளனர். இந்தியாவிற்கு வெளியே இத்தகைய நோக்கத்திற்காக பணத்தை அனுப்புவது, அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டம் 1999-ற்கு எதிரானதாகும். மேலும் ரிசர்வ் வங்கியின் இணையதளம் போலவே போலியான இணையதளத்தையும் உருவாக்கி பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவற்றில் இருந்து பொது மக்களை எச்சரிக்கும் விதத்தில் பத்திரிகை அறிக்கைகள் மற்றும் செய்திகள் மட்டுமின்றி இந்திய அரசுடன் இணைந்து "ஜகோ கிராஹக் ஜகோ"  என்ற நிகழ்ச்சி மூலம் இந்த தகவல்களை விளம்பரப்படுத்தியுள்ளது.

இதுபோன்ற செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் காவல் துறையிடம் புகார் அளிக்க வேண்டும் அல்லது சைபர் கிரைம் குற்றவியல் பிரிவில் தொடர்பு கொண்டு தங்களது புகாரை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு திரு ஆனந்தா தெரிவித்தார்.

YOU TUBE VIDEO - புனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம்

YOU TUBE VIDEO - புனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

செளதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களின்,  புனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம்.

ATKINS -
செளதி யில் காண்டிராக்ட் எடுத்து இருக்கும் கம்பெனியின் செயல் விரிவாக்கத்தை இதோ யூ டியூப் ல் நீங்களும் கண்டு ரசிக்கலாம். (ATKINS CIVIL CONSTRUCTION)
மாஷாஅல்லாஹ் எப்ப‌டியெல்லாம் யோசிக்கிறார்க‌ள். இந்த திட்டத்தின் வீடியோவை பாருங்க‌ள்..ஆச்ச‌ரீய‌ப் ப‌டுவீர்க‌ள்.

மொத்த விரிவாக்கமும் வந்த பின்னர் 5 மில்லியன் மக்கள் ஒரே நேரத்தில் தொழும் வசதி கிடைக்கும் .... மாஷா அல்லாஹ். நினைக்கவே ஆச்சரியம். வீடியோ பார்த்தால் தான் தெரியும். அதன் சொல் விளக்கத்தையும் கேட்டு ரசித்தால் நன்றாக இருக்கும்.

கீழ் உள்ள லிங்கில் கிளிக் செய்து பார்க்கவும், இன்ஷா அல்லாஹ்!

through mail :from Farook Ali

Thursday, August 19, 2010

ஒபாமா முஸ்லீம் என்றே அமெரிக்கர்கள் நம்புவதாக ஆய்வு முடிவுகள் !


வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஓபாமாவின் மன்ஹாட்டன் மசூதி பேச்சிற்க்கு முன்னால் எடுக்கப்பட்ட ஆய்வில் ஒபாமா ஒர் முஸ்லீம் என்பதை நம்பும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறிப்பிட்டதகுந்த அளவில் அதிகரித்து வருவதாகவும் பெரும்பாலானோர் அவரின் மதத்தை குறித்து குழப்பத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஐந்தில் ஒரு அமெரிக்கர் அல்லது 18 சதவிகிதம் அமெரிக்கர்கள் ஒபாமா ஒரு முஸ்லீம் என்றே கூறுகின்றனர். முந்தைய ஆய்வுகளில் வெறும் 11 சதவிகிதத்தினரே அவ்வாறு நம்பினர். ஒபாமா ஒரு கிறிஸ்தவர் என்று கருதுபவர்களின் எண்ணிக்கை 34 சதவிகிதமாக குறைந்து போயுள்ளது.
அது போல் அவரின் மதம் எது என்பது புரியவில்லை என்று சொல்பவர்களின் எண்ணிக்கை 43 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அது போல் அவரின் பேச்சுக்கு பின்னால் டைம் பத்திரிகையால் எடுக்கப்பட்ட ஆய்வில் 24 சதவிகிதம் அவரை முஸ்லீமாகவும் 47 சதவிகிதம் அவரை கிறிஸ்தவராகவும் 24 சதவிகிதம் அவரின் மதம் தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர். அது போல் 61 சதவிகிதம் பேர் மசூதி கட்டப்பட கூடாது என்றும் 26 சதவிகிதம் நபர்கள் மசூதி கட்டப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Source : http://www.inneram.com/2010081910156/obama-is-a-muslim-increasing-number-of-americans-believe

Sunday, August 15, 2010

புனித மிக்க மக்காவில் உலகின் மிகப் பெரிய கடிகாரம் (மணிக்கூண்டு)

புனித மிக்க மக்காவில் உலகிலேயே  மிகப் பெரிய கடிகாரம். (மணிக்கூண்டு)


 



உலகிலேயே   மிகப்பெரிய கடிகாரம் புனித மக்கா நகரில்
நிறுவப்பட்டுள்ளது.

இதற்கான சோதனை ஓட்டம் புனித ரமலான் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து தொடங்குகிறது.

601 மீட்டர் உயரமுள்ள டவரில் பொருத்தப்பட்டுள்ள
இக்கடிகாரத்தின் உயரம் மட்டும் 251 மீட்டராகும்.

இதன் சிறப்பம்சங்கள்:

-இது துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவிற்கு(Bhurj Khalifa) அடுத்து உலகின்
இரண்டாவது உயரமான கட்டிடமாகும்.

-இக்கடிகாரம் லண்டனில் உள்ள பிக் பென்(Big Ben) கடிகாரத்தை விட ஐந்து
மடங்கு பெரியதாகும்.

-இது நான்கு பக்கமும் இயங்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

-இது புனித கஃபதுல்லாவை பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது.

- இஸ்லாமிய பாரம்பரியத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

Thursday, August 5, 2010

வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!

குறை சொல்பவர்களை முடித்துவிட நினைத்தால், ஜனநாயகத்தில் என்ன நியாயம் இருக்கிறது? ஒருவருக்கு வயதாக; வயதாக முதிர்ச்சியாக வேண்டும். சின்ன மனிதனாகக் கூடாதுஎன  முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் முன்னணி பிரமுகருமான ஈ வி கே எஸ் இளங்கோவன் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசின் 75 சதவீத மானியத்தில் நிறைவேற்றப்படும் வீட்டு வசதி திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' என, பெயர் வைப்பதா' எனவும் அவர் வினா விடுத்தார். ஈரோட்டில் நடந்த மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில், முன்னாள் மத்திய இணையமைச்சர் இளங்கோவன் உரையாற்றினார். அப்போது .
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களே முழுமையாக செயல்படுத்தப்படுகின்றன. சில திட்டங்களில் மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் பங்களிக்கிறது. குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்தில், ஒரு வீட்டுக்கு 45 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. தமிழக அரசு, 15 ஆயிரம் ரூபாய் தான் வழங்குகிறது. ஆனால், இத்திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' என பெயர் வைத்துள்ளனர். இதுஎன்ன நியாயம்? இதை கேட்டால் பொல்லாப்பும், கோபமும் வருகிறது. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சியை நடத்துகின்றனர். தமிழகத் தில் 234 தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு எத்தனை சீட் வேண்டும் என, குழந்தையிடம் கேட்டால் கூட கூறிவிடும். தி.மு.க.,வுக்கு ஆதரவளிக்கும் 36 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லை. ஆனால், 15 எம்.பி.,க்களை வைத்து மத்தியில் ஐந்து மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். இதில் யார் தியாகி என்றால், காங்கிரஸ் தான்
எங்கள் தயவில் ஆட்சி செய்பவர்கள் சுகபோகமாக வாழ்கின்றனர். எங்களுக்கு கோவிலில் தர்மகர்த்தா வேலை கூட கிடைப்பதில்லை. அதிகாரிக்காக, காங்., பெண் எம்.எல்.ஏ., வீட்டை இடித்து "சீல்' வைத்தனர். இதை தட்டிக் கேட்க ஆளில்லை. அந்த வீடு, "எப்படியோ' சம்பாதித்து கட்டியதல்ல. அவரது பரம்பரை சொத்து. இதை நான் கேட்டால் மோசமானவன் என்கின்றனர். ஏமாந்தால் எல்லாவற்றையும் சுருட்டிவிட வேண்டும் என, நினைக் கின்றனர். "108' இலவச ஆம்புலன் சுக்கு மத்திய அரசு பணம் கொடுப் பது, சாதாரண மக்களுக்கும் தெரியும்.மாநில அரசின் திட்டமாக இருந் தால், ஆம்புலன்சில் முதல்வர், துணை முதல்வர் படங்களை வைத்துவிடுவர். முதல்வரை சந்திக்க இரண்டு முறை நேரம் கேட்டேன். அவர் நேரம் ஒதுக்கவில்லை.
குறை சொல்பவர்களை முடித்துவிட நினைத்தால், ஜனநாயகத்தில் என்ன நியாயம் இருக்கிறது? ஒருவருக்கு வயதாக; வயதாக முதிர்ச்சியாக வேண்டும். சின்ன மனிதனாகக் கூடாது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய, 40 ஆண்டுகளாக நாங்கள் காத்திருக்கிறோம். இன்னும் எங்களால் காத்திருக்க முடியும். உங்களால் பதவி இல்லாமல் இருக்க முடியுமா? ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கூலியாக 100 ரூபாய் வழங்குவதற்கு பதில், 70 முதல் 80 ரூபாய் தான் வழங்குகின்றனர். அரசுக்கு வேண்டியவர்கள் தான் இதை செய்கின்றனர். தமிழகத்தில் மக்கள் நல்ல ஆட்சியை எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.இளங்கோவனின் அதிரடி பேச்சு திமுக  மற்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source : http://www.inneram.com/201008059804/the-old-man-should-not-be-silly-evks-talk-abt-karunaa

Tuesday, August 3, 2010

பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!

இப்ராஹீம்

அமெரிக்க அதிபர் "பராக் ஹுசைன் ஒபாமாவுடன்" விவாதம் செய்ய நான் ஆவலாக உள்ளேன் என ஈரான் அதிபர் "அஹ்மத் நிஜாத்" கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்: "நான் ஒபாமாவை சந்திக்க விரும்புகிறேன். நான் வரும் செப்டெம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்க்காக அமெரிக்கா வருகிறேன்.
அந்நேரம் நான் அங்கு பராக் ஒபாமாவை சந்தித்து அவருடன் உலக பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில்: உலகளாவிய ஊடகங்களுக்கு மத்தியில் இவ்விவாதம் நடைபெறவேண்டும் எனவும், யாருடைய கருத்தை மக்கள் அதிகம் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை பார்க்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்". இவ்வாறு அஹ்மத் நிஜாத் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
ஈரான் மீது பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழைப்பு கொடுக்கும் ஒபாமாவிற்க்கு அஹ்மத் நிஜாத் விவாதத்திற்க்கு அழைப்பு கொடுத்திருப்பது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.inneram.com/201008039738/ahmed-nijad-want-debit-to-obama