Wednesday, October 31, 2018

ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின் திருத்தோழர்கள்-(4)

அண்ணல் நபி(ஸல்) அவர்களைத் தொடக்க காலத்திலேயே நம்பி இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றவர்கள்,அந்த அடிப்படையில் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள்,அவர்களுடைய அன்றாட வாழ்விலும் பணியிலும் தொடர்புடையவர்கள், அபிஸீனியாவுக்கு இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட புலப்பெயர்ச்சியில்(ஹிஜ்ரத்தில்) இடம்பெற்றவர்கள், அகபா’வில் உடன்படிக்கை செய்துகொண்டவர்கள்;

அண்ணல் நபி(ஸல்) அவர்களுடன் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள், புலம்பெயர்ந்து வந்த தியாகிகளைத் தங்கள் சகோதரர்களாக ஏற்றுக் கொண்ட மதீனாவைச் சேர்ந்த அன்ஸாரிகள், அண்ணல் நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் நடைபெற்ற எல்லாப் போர்களிலும் படைத் தலைவர்களாகவும் போர்வீரர்களாகவும் பங்கு பெற்றவர்கள்,அந்தப் போர்களில் தம்முடைய இன்னுயிரைத் தியாகம் செய்து ஷஹீதுகளாக ஆன சற்றேறத்தாழ 255 பேர்கள்,ஹுதைபிய்யாவில் மேற்கொள்ளப்பட்ட இறைவிருப்ப உடன்பாட்டில்(பையத்துல் ரிழ்வானில்) பங்குபெற்றவர்கள்;

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் தூதர்களாக,செயலாளர்களாகப் பொறுப்பு வகித்தவர்கள், அல்லாஹ் அருளிய வேத வெளிப்பாட்டை-வஹியை- எழுத்து வடிவில் பதிவு செய்தவர்கள், அண்ணல் நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினர், மக்கா வெற்றிக்கு முன்னர்வரை இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றவர்கள்,எனச் சிறப்பிடம் பெற்று முன்னணியில் திகழ்ந்தவர்கள்தாம் திருத்தோழர்களாக, தோழியர்களாக- ‘ஸஹாபாப் பெருமக்கள்’ என்று மிக்க மிகுந்த கண்ணியத்தோடு அழைக்கப்படுவதற்கு முன்னுரிமை பெற்றவர்கள் ஆவர். ஸஹாக்கள் வரலாறு என்பதும் இத்தகைய திருத்தோழர்களின் வரலாற்றையே குறிக்கும்.

சமய, சமுதாய அமைப்புகளுக்கு ஏற்றவாறு புராண,இதிஹாஸ, வரலாற்று நாயகர்கள் மக்களால் வழிகாட்டிகளாகக் கொள்ளப்படு கின்றனர். முஸ்லிம்களைப் பொருத்தவரை அண்ணல் நபி(ஸல்) அவர்களை அடுத்து, அவர்களே உவந்துகொண்ட ஸஹாபாப் பெருமக்கள்தாம் வாழ்வில் நினைவு கூர்ந்து பின்பற்றத் தக்க வரலாற்று நாயகர்களாகத் திகழ்ந்து வருகின்றனர்!

இத்தகைய மகத்துவம் மிக்க மாமணிகளை - ஸஹாபாப் பெருமக்களை- மனமறிந்து மலினப்படுத்துவதற்கு ஷைத்தானால் கூடத் துணிய முடியுமா?

(இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்,அறிவோம்)

ஸஹாபாக்கள் என்றால் யார்?

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் திருத்தோழர்கள்-(4)
-----------------------------------------------------------------------------------

--- ஏம்பல் தஜம்முல் முகம்மதுYembal Thajammul Mohammad

No comments: