Monday, October 8, 2018

சந்தன தமிழறிஞர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத்


ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் என்னும் இயற்பெயர் கொண்ட தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் மார்க்க மேதை அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) ஜெய்னப் பீவி தம்பதியினருக்கு மகனாக 4-10-1926-ல் காரைக்காலில் பிறந்தார்.

அரபி, தமிழ் , உர்தூ மொழி களில் புலமை மிக்க வராகவும், இஸ்லாமிய மார்க்க அறிஞரா கவும் விளங்கிய அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) அவர்கள் அருள்மறையாம் திருக்குர் ஆனை தமிழில் மொழி பெயர்த்து புகழ் பெற்றவர்.

தீன் திருத்தென்றல் தமது தந்தைக்கு துணை புரிந்த தனையனாக நின்றவர் தான் நமது அருமைத் தலைவராக திகழ்ந்த சிந்தனைச் செம்மல் சிராஜுல் மில்லத்.

கல்வியும் - இதழியல் துறையும்

1950-ம் ஆண்டு திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பு பணி முழுமை பெற்றவுடன் ஏழ்மை சூழலில் தனது இளமை கல்வி சிறகை விரித்தார்.


திருச்சி பாலக்கரை மஜ்லிஸுல் உலமா பள்ளி யில் 3- ம் வகுப்பு வரையிலும்,காரைக்கால் முஸ்லிம் வித்யாசங்க கலா சாலை உயர்நிலைப் பள்ளி யில் 4-ம் வகுப்பு முதல்
7-ம் வகுப்பு வரை,

பின்னர் சென்னை புதுக்கல்லூ ரியில் இண்டர் மீடியட், சென்னை மாநில கல்லூரியில் இஸ்லாமிய வரலாறு மற்றும் கலாசார பாடங்களில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

கல்லூரிகளில் பயின்ற காலம் அவரை சாதனை யாளராக உருமாற்றம் செய்தது.

எந்த கல்லூரியில் பட்டம் பெற்றாரோ அதே கல்லூரியின் ஆட்சி மன்ற குழு தலைவராக 1964 முதல் 1978 வரை பதவியில் பரிணமித்தார்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது 1954ம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று ‘மணிவிளக்கு’ என்ற மாத இதழை தொடங்கினார்.

பின்னர் 1969-ல் ‘அறமுரசு’, 1970-ல் ‘கிரசன்ட் ஆங்கில வார இதழ்’,

1-6.-87 முதல் மணிச்சுடர் நாளிதழ் ஆகியவற்றை தொடர்ந்து நடத்தினார். இவைகளில் தற்போது
மணிச்சுடர் நாளிதழ் மட்டும் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கிறது.

இதற்கு முன் 1940-ம் ஆண்டில் காரைக்காலிருந்து நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப், பக்கர் ஆகியோருடன் இணைந்து ‘பால்யன், முஸ்லிம் லீக், கதம்பம், இளம்பிறை’ -என்ற பெயர்களில் இதழ்களை நடத்தினார்.

1959 ஜூலை 2-ம் தேதி நர்கீஸ் பானுவுடன் நிக்காஹ் நடைபெற்றது.

இவர்களுக்கு அப்துல் ஹமீது பாகவி, அப்துல் ஹக்கீம், அப்துல் வஹாப் என்ற 3 ஆண் பிள்ளைக ளும், ராபியத்துல் அலவியா, ஃபாத்திமா சுஹரா ஆகிய பெண் பிள்ளைகள் ஆவர்.

இவர்களில் இரண்டா வது புதல்வர் அப்துல் ஹக்கீம் 25-8-2009அன்று காலமாகி விட்டார்.

1959 முதல் 1962 வரை சென்னை மாநகராட்சியின் கல்வி குழு தலைவராகவும்,

1964 முதல் 1970 வரை அண்ணாமலை பல்கலைக் கழகம் செனட் சபை உறுப்பினராகவும்,

1976 முதல் 1979 வரை சென்னை பல்கலைக் கழக சிண்டிகேட் செனட் அகாடமிக் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

1964 முதல் 1978 வரை தென்னிந்திய முஸ்லிம் கல்வி
சங்கம் மற்றும் புதுக் கல்லூரி ஆட்சி மன்ற தலைவராகவும்,

1970-ல் தமிழநாடு முஸ்லிம்
கல்வி நிறுவன சங்கங்கள் (ஓமியட்) ஆகியவைகளின் தலைவராகவும் பதவி வகித் தார்.

அரசியல் களம்

1958-ல் சென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாள ராகவும்,

1959- ம் ஆண்டு சென்னை துறைமுகம் தொகுதி சென்னை மாநகராட்சி உறுப்பினராக வும்
தனது பொது வாழ்வில் அரசியல் பயணத்தை தொடங்கி

பின்னர் 1964 முதல் 1976 வரை நாடாளு மன்ற மேலவையில் முஸ்லிம் லீக் உறுப்பினராக வும், தலைவராகவும் விளங்கினார்.

1980 முதல் 1984 வரை வேலூர் தொகுதியிலிருந்து எம்.பி யாக தேர்ந்தெடுக்கப் பட்டு

1989 முதல் 1994 வரை மீண்டும் அதே தொகுதியின் உறுப்பி னராகவும் பணியாற்றினார்.

1984 முதல் 1989 வரை சென்னை திருவல்லிக் கேணி தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினராக பணி யாற்றி அனைவரின் பாராட் டையும் பெற்றார்.

1996-ம் ஆண்டு தமிழக அரசின் பிற்பட்டோர் சிறுபான்மையினர் வளர்ச்சிக் கழக தலைவராக பணி வகித்தார்.

1975-ம் ஆண்டு முதல் மரணிக்கும் வரை தாய்ச்சபை இந்திய யூனிய ன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு தலைராகவும், தேசிய பொதுச் செயலாளராகவும் பணியாற்றி பெருமை சேர்த்தார்

வேலூர் தொகுதி எம்.பி.யாக இருந்தபோது ஜலகண்டே ஸ்வரர் ஆலயத்தில் இந்துக்கள் சமய வழிபாடு செய்ய அனுமதி பெற்றுத் தந்தார்.

திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த போது அத் தொகுதியில் உள்ள பார்த்தசாரதி கோவில் குளத்தை தூர்வாரி செப்பனிட்டு இந்துக்களின் பாராட்டை
பெற்றார்.

சிராஜுல் மில்லத்துக்கு 11 வயது இருக்கும் போது, திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு பணிக்கு தமது தந்தை அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) அவர்களு டன் கொழும்பு சென்றிருந்த சமயம் அங்கு இவ்விருவருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் மகனார் அப்துல் ஸமதை மேடைஏற்றி பேசச்செய்தார் அல்லாமா. அவரது கன்னிப்பேச்சை அங்கிருந்த அறிஞர்கள் பாராட்டிய போது அல்லாமா
அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) அவர்கள் பெருமையோடு ஆனந்த கண்ணீர் சிந்தினார்கள்.

அன்று தொடங்கிய மேடைப் பேச்சு பின்னர் இந்தியாவின் பிற பல தேசிய தலைவர்களையும் பாராட்டை ப்பெறும் வணணம் தொடர்ந்தது
தலைவர்களையும் பாராட்டை ப்பெறும் வணணம் தொடர்ந்தது

தலைவர்களின் பாராட்டு

1948ல் முத்துராமலிங்க தேவர் திருமகனாருடைய சொந்த ஊரான பசும்பொன் அருகில் உள்ள கமுதியில் தேவர் அய்யா தலைமையில் நடந்த மீலாது விழாவில் சிராஜுல் மில்லத் தின் பேச்சை கேட்டு மகிந்த தேவர் கூறினார்:

அப்துஸ் ஸமத் போன்ற இளைஞர்கள் நாடாளுமன்றத் தில் இடம் பெற வேண்டும்’ என்று வாழ்த்தினார்.

அப்துஸ் ஸமதைப் போல் நல்ல தமிழில் என்னால் பேச முடியாது என்று மூதறிஞர் ராஜாஜி அவர்கள் சொல்லிய துண்டு.

மேடைத் தமிழில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணாவே , அப்துஸ் ஸமத் சாஹிபின் அழகிய தமிழ் பேச்சில் மயங்கியதுண்டு.

மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழுரை
வழங்கியதுண்டு.

பாராளுமன்றத்தின் நட்சத்திர பேச்சாளர் அப்துஸ் ஸமது என்றார் மறைந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி.

அப்துஸ் ஸமது போன்றவர்கள் மீண்டும் நாடாளு மன்றத்திற்கு வர வேண்டும் என்றார் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி.

கொஞ்சும் தேன் தமிழில் உரையாற்றும் சந்தனத் தமிழ் அறிஞர் சிராஜுல் மில்லத்தை பாராட்டாத தலைவர்களோ, பத்திரிகைகளோ இல்லை.

அரசியலில் அற்புத சக்தி

பேரறிஞர் அண்ணாவை கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதெ மில்லத் அவர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும், தி.மு.க - முஸ்லிம் லீக் அரசியல் கூட்டணி ஏற்பட வழிவகுத்த பெருமையும் சிராஜுல் மில்லத் அவர்களுக்கு உண்டு.

இரு துருவங்களாக இருந்த பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி ஆகியோரை சந்திக்க வைத்து புதிய கூட்டணி உருவாக வழித்தடம் அமைத்தவர் இவர்.

இந்த கூட்டணி ஏற்பட்ட பிறகே ஆட்சி பிடிக்கும் பாதைக்கு தி.மு.க. வெளிச்சம் கண்டது என
பத்திரிகைகள் எழுதின.

மிசா காலத்தில் பட்ட காயத்தால் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வரவே வராது என்று கூறப்பட்ட கால கட்டத்தில் டெல்லியில் முகாமிட்டு தி.மு.க. - காங்கிரஸ் உறவை மீண்டும் உண்டாக்கி சினம் கொண்டு சீறி வரும் பகையை கூட குணங்கொண்ட இனிய நட்பாக மாற்றி ‘நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!’ என்று இந்திரா அம்மையாரை
கலைஞர் வரவேற்று பேசுகின்ற மனப்பக்குவத்தை ஏற்படுத்திய ஒரு அறிவுமிக்க அரசியல்
சாணக்கியராக திகழ்ந்தவர். தலைவர் சிராஜுல் மில்லத் என்றால் அது மிகையல்ல!

‘இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி’ - என்ற சுலோகத்திற்கு சொந்தக்காரர்.

புனித ஹஜ்ஜின் போது சவூதி மன்னர் பைஸல் தலைமையில் கஃபாவின் உட்புறத்தை கழுவிய பாக்கியம் பெற்றவர். இறைமுன் அன்றி எவர் முன்னும் தலைகுனியாத தலைவர்.

புகழின் உச்சிக்கு சென்று சிகரம் தொட்டவர். மதங்களை கடந்து எல்லோர் மனதிலும் தனி இடமும், தடமும் பதித்தவர். பழகுவதற்கு இனிமையானவர்.

இளையவர்களை கண்டால் ‘தம்பி’ என்று அழைத்து அன்பைப் பொழிபவர்.

பேச்சாளராக - எழுத்தாளராக - இதழியல் ஆசிரியராக - தலைவராக இருந்து தனி சிறப்பை பெற்றவர்.

அவரை தழுவுகின்ற எத்தனையோ தோல்விகளை கண்டு அவர் சளைத்ததில்லை.

துளைத்து நின்ற எத்தனையோ விமர்சன அம்புகள் அவரை களைப்படையச் செய்ததில்லை.

உலமாகள் வழங்கிய ‘சிராஜுல் மில்லத்’ பட்டம்
1977-ல் தமிழக மாநில உலமாகள் ஒருங்கிணைந்து ஒளிவிளக்கு என்னும் சிராஜுல் மில்லத் என்ற சிறப்புப் பட்டத்தை தலைவருக்கு சூட்டி மகிழ்ந்தார்கள்.

அந்த ஒளிவிளக்கு தமிழகத்தின் எல்லையை தாண்டி இந்தியாவை கடந்து உலக நாடுகள் பலவற்றிலும் ஒளிர்ந்தது. உலக நாடுகளை இருமுறை வலம் வந்தவர் சிராஜுல்மில்லத்.

வரலாறு படைத்த தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களை 11-4-1999 அன்று வல்லஅல்லாஹ் தன் பக்கம் அழைத்துக் கொண்டான்.

மறைந்தாலும் மக்கள் மனதில் மணம் வீசும் தலைவராக நினைவு அலைகளில் ஒரு சகாப்தமாக வாழ்கிறார்
வாட்சப்பில் வந்தது

No comments: