Sunday, October 28, 2018

பயமுறுத்தும் மழைக்கால குழந்தை நோய்கள்!

Vavar F Habibullah
எங்களது அகத்திய முனி
குழந்தைகள் மருத்துவமனை
இப்போது குழந்தை
நோயாளிகளால்
நிரம்பி வழிகிறது.
மதியம் 2 மணி வரை
ஒபி யில் 75 குழந்தைகளை
பரிசோதித்தத நான், ஐந்து
குழந்தைகளை மட்டுமே ரிஸ்க்
என்பதால் அட்மிட் செய்தேன்.

காய்ச்சல், இருமல் சளி
ஜலதோஷம், தலைவலி
மூச்சுத் திணறல், வயிற்று
போக்கு, வாந்தி,வயிற்று வலி
உடல் வலி,சோர்வு.....


சாதாரண மழைக்கால ஃபுளு
காய்ச்சல் அறிகுறிகள் தான்
இவை. இந்த காய்ச்சல்
வகைகளை முறையான
சோதனைகளுக்கு பிறகு
தான் பன்றி காய்ச்சலா
அல்லது டெங்குவா என்று
கண்டறிய இயலும்.
கண்டறிந்தபின் முறையாக
சிகிச்சை அளித்தால் நோய்
குறைந்து விடும்.அந்த நோய்
வகை இல்லை என்றால் பயப்பட
அவசியம் இல்லை.
ஐந்து வயதுக்குட்பட்ட
குழந்தைகளையும்,
அறுபது வயதுக்கு மேற்பட்ட
வயோதிகர்களையும், கர்ப்பிணி
பெண்களையும் இந்த நோய்
சற்று பயமுறுத்தும்.எனவே
அதிக கவனம் தேவை.

வீடு உட்பட சுற்றுச் சூழல்
சுத்தமாக இருப்பது அவசியம்.
தும்மலில், இருமலில் நோய்
கிருமிகள் பிறரை விரைந்து
தொற்றிக் கொள்ளும்.

எடுத்தவுடன் ஆண்டிபயாடிக்
அவசியம் இல்லை.காய்ச்சல்
தடுப்பு மருந்து கொடுக்கலாம்.
கண்ட மருந்துகளை கடைகளில்
வாங்கி குழந்தைகளுக்கு
கண்டிப்பாக கொடுக்கக் கூடாது.
தொடர் காய்ச்சல் இருந்தால்
குழந்தை நல மருத்துவரை
அணுகுவது நலம் பயக்கும்.

நோய் வரும் முன்பே ஃப்ளு
காய்ச்சலை தடுக்கும் ஃப்ளு
தடுப்பூசிகளை வேண்டுமானால்
மருத்துவமனை சென்று
மருத்துவர் ஆலோசனை பெற்று
குழந்தைகளுக்கு போடுவது
நலம் பயக்கும்.

சற்று சூடு படுத்திய காய்கறி
உணவு வகைகள், நல்ல சூப்
போன்றவை சற்று வளர்ந்த
குழந்தைகளுக்கு நல்லது.
குளிர்ந்த உணவு வகைகளை
தவிர்ப்பது அவசியம்.

மூன்று நாட்களுக்கு மேல்
குழந்தைக்கு காய்ச்சல்
இருந்தால் மேலும் யோசனை
செய்யாமல் நல்ல மருத்துவரை
நாடுவதும் நல்ல சிகிச்சை
தொடர்வதும் நன்மை பயக்கும்.

ஃப்ளு காய்ச்சலுக்கு கை மருந்து
நிச்சயம் பலன் தராது.அது போல்
சிறு காய்ச்சல் தானே என்று
அலட்சியம் கொள்வது
சரியில்லை.அதுவும்
குழந்தைகள் விசயத்தில்
பெற்றோர் சற்று அலர்டாக
இருப்பது சாலச் சிறந்தது.

Vavar F Habibullah

No comments: