Tuesday, October 16, 2018

மதமா இல்லை மார்க்கமா

by. dr. habibullah


அருள் தந்தை
குரூஸ் ஹிரோனிமஸ்
ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியின்
முகவரி.தத்துவ மேதையான இவர்
ஒரு தேர்ந்த தமிழ் அறிஞர்.
அகத்திய முனி குரூப்
மருத்துவமனைகளின் தலைவர்.
கம்பேரேடிவ் ரிலிஜியன் பற்றிய
தெளிந்த ஞானம் கொண்டவர்.
என்னிடம் தனிப்பட்ட முறையில்
மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர்.

ஒரு முறை என்னை அழைத்த
அவர், இஸ்லாம் மதம் பற்றி சற்று
சொல்லுங்க டாக்டர்...என்றார்.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்
பற்றி எனக்கு தெரியும். அந்த
மதத்தின் குறிக்கோள்..அது
பற்றி சற்று சொல்லுங்கள்...




நான் சொன்னேன்...
மக்கா மாநகரம் முகமது நபி
பிறந்த காலத்தில் ஒரு சிலை
வணக்க பூமியாக இருந்தது.
கஃபா ஆலயத்தை சுற்றிலும்
365 சிலைகள் இருந்தன.
தினமும் மக்கள் ஒரு சிலையை
வணங்கி வந்தனர்.கஃபா
ஆலயத்தை ஆண்களும்
பெண்களும் நிர்வாணமாக
வலம் வந்து பூஜை செய்தனர்.
சிலை வணங்கும் குடும்பத்தில்
பிறந்த முகமது நபி இந்த
மக்கள் மத்தியில் ஒரே இறைக்
கொள்கையை போதித்தார்.சிலை
வணக்கம் தவறு என்று வாதித்தார்.

அவரது நெருங்கிய உறவினர்கள்
தான் அவரது இந்த கொள்கையை
எதிர்த்து போர் புரிந்தனர்.பல
போர்கள் நிகழ்ந்தன.முடிவில்
அவரது கொள்கைகள் முழு
அரபகத்தையும் வெற்றி கொண்டன.
வெற்றி நாயகனாக மக்கா நகரில்
வலம் வந்த போதும் தன் மக்களை
பார்த்து அவர் அமைதியாக சொன்னார்...
“எனது மார்க்கத்தில் கட்டாயம் இல்லை.உங்களுக்கு உங்கள்
வழி...எனக்கோ எனது வழி.”

சரி...
முகமது நபியின் படங்கள்,
நினைவு சின்னங்கள் ஏன் இல்லை!

உருவமற்ற இறைவனை வணங்க
சொன்ன அவருக்கும் உருவப்
படங்கள் இல்லை ஃபாதர்...
ஒரு நிகழ்வை நான் உங்களுக்கு
சொல்கிறேன்..ஃபாதர்...

மதினாவில்,அவர் இல்லத்தில்
முகமது நபி இறந்து விட்டார்
என்று செய்தி வருகிறது...
முகமது இறந்து விட்டார் என்று
எவரேனும் சொன்னால் அவரது
தலை உடலில் இருக்காது...
அங்கு வந்த அவரது நண்பர்
உமர் கர்ஜிக்கிறார்.
முகமது நபிக்கு மரணம் வராது
என்றே உமர் நம்பினார்.
இதை அறிந்த நபியின்
மூத்த நண்பர் அபுபக்கர்
அங்கு விரைகிறார்.
மிகவும் உறுதியான குரலில்
அபுபக்கர் பேசினார்.

யார் முகமதை வணங்கி
வந்தீர்களோ அவர்களுக்கு
சொல்கிறேன்..
முகமது இறந்து விட்டார்...
யார் இறைவனை
வணங்கி வருகிறீர்களோ
அவர்களுக்கு சொல்கிறேன்
அந்த இறைவனுக்கு
மரணமில்லை.
முகமது நபி ஒரு இறைத் தூதர்
தான்.அவருக்கும் மரணம் உண்டு

எவ்வளவு பெரிய மகானாக
இருந்தாலும் மனிதன் கடவுள்
நிலைக்கு உயர இயலாது என்பது
தான் இஸ்லாத்தின் அடிப்படை
கொள்கை ஃபாதர்...

முகமது நபிக்கு பிறந்த நாள்
கூட கொண்டாடுவது இல்லையா!
ஃபாதர் கேட்டார்.
இல்லை ஃபாதர்...அவர் பிறந்த
அரேபியாவில் கூட அவர் பிறந்த
நாளுக்கு அரசு விடுமுறை
கிடையாது.
I think it is the best religion
அந்த பெரிய மனிதர் பெருமையாக
சொன்னார்...best followers ஆக
இருந்தால் மட்டுமே இது சாத்தியம்
என்பது எனது நம்பிக்கை.
dr.habibullah
Vavar F Habibullah

No comments: