Wednesday, October 10, 2018

மதபோதகரிடம் ஒரு மாணவன் கேட்டான்

மதபோதகரிடம் ஒரு மாணவன் கேட்டான் ஏன் முந்தி காலத்தில் வாழ்ந்த மக்கள் ஏன் நம்மை விட அதிக காலம் உயிர் வாழ்ந்தனர் ?. அதற்கு அந்த மதபோதகர் பதில் சொன்னார் அவர்கள் அவ்வளவு காலம் வாழக்கூடாது என்பது அவர்களுக்கு தெரியாது அதனால்தான் என்றார் மதபோதகர்.

இந்த கேள்வியை உள் வாங்கி கொண்டு உங்கள் வாழ்க்கையே நினைத்து பாருங்கள். அறுபதுக்கும் எழுபதற்க்கும் மத்தியில் உள்ள வயதுதான் உங்கள் வாழ்க்கை. இதில் அதி சீக்கிரத்தில் வாழவேண்டிய நீங்கள் ஏன் வாழவில்லை ?.


ஒவ்வொருவருக்கும் வெற்றிகரமான வாழ்க்கை, மகிழ்ச்சியான குடும்ப சூழல், நிறைந்த பொருளாதாரம், வாழ்க்கையிடமிருந்து ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள் அது தேவையும் கூட ஆனால் ஒருசிலருக்கு தான் கிடைக்கிறது பலபேருக்கு கேள்விகள் மட்டுமே மீதம். வாழ்க்கை ஏமாற்றத்துடனே முடிந்தது விடுகிறது. ஒருசிலரைப் பாருங்கள் அவர்களின் வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, செல்வங்கள் நிறைந்ததாக இருக்கிறது. பலரின் வாழ்க்கையை பாருங்கள் அவர்கள் பல வழிகளில் முயன்று வாழ்க்கையில் ஏழ்மை, விரக்தி, நோய், குடும்பம் சுற்றி இருப்பவர்களுடன் சண்டை சச்சரவு, உயராத வாழ்க்கை. ஏன்னென்று உங்களுக்கு தெரியுமா ?.

உங்கள் குடும்ப சூழல் மூலமாக, உங்களை சுற்றி உள்ள நன்பகள் மற்றும் பலரின் மூலமாக உங்களுக்கு பயிற்றுவிக்க பட்ட வாழ்க்கையே தான் இப்போது நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது. நீங்கள் பிறந்ததிலிருந்து இருபது வருடங்களாக அல்லது தற்போதுள்ள வயது வரை. உங்கள் குடும்பத்தார்கள், உறவுக்காரர்கள் நன்பர்கள் எதிர்மறையான பேச்சுகளை உங்களை பேசுவது திட்டுவது, உதாரணமாக இது முடியாது, அது சாத்தியமில்லை, இது நடக்காது, வேலை கிடைக்காது, பணம் சம்பாதிப்பது சாத்தியம் இல்லை, இந்த நோய் குணமாகாது, செல்வங்கள் செல்வந்திரருக்கு மட்டுமே சாத்தியம், இதைப் பற்றி கவலைப் பட வேண்டும், அதைப் பற்றி கவலைப் பட வேண்டும் இப்படி பல...

இப்படியே பற்றிவிக்க பட்ட உங்கள் வாழ்க்கை அப்படிதான் இருக்கும். ஏனென்றால் ஆரம்பமாக எதையுமே அப்படியே நம்புகின்ற, ஏற்றுக் கொள்கின்ற உங்கள் மூலை, மனம் உங்களை அதுபோலவே விரும்ப வைத்து இதனையே உங்களுக்கு உங்கள் வாழ்க்கையாக தருவது மட்டுமல்ல வாழவு வைத்து விடும்.

அதனால்தான் நீங்கள் எவ்வளவோ முன்னேற முயன்றாலும் அதற்கான முயற்ச்சி இருக்கும் ஆனால் உங்கள் உள்ளுக்குள் இப்படி பேசிக்கொண்டு இருப்பீர்கள் என்னால் முடியாது. இது உங்கள் சுய பேச்சாகவே இருக்கும் அந்த சுய பேச்சு இந்த வடிவிலும் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, பயம், விரக்தி, கோபம், பொறுமை இன்மை, வெறுப்பு, கவலை, முன்னேற பயம் இன்னும் சொல்லப்போனால் செல்வத்தையும் செல்வந்திரகளையும் பார்த்தாலே பயம், பணம் தவறு செய்ய வைத்து விடும், பணக்காரர்கள் எப்பவுமே தவறு செய்யக்கூடியவர்கள் என்று.
இப்போது சொல்லுங்கள் நீங்கள் இந்நிலையில் இருக்கும்போது எப்படி உங்களால் வெற்றிப் பெற முடியும்.

இறைவன் குர்ஆன் மூலம் உங்களுக்கு கூறுகிறான் உங்கள் சுய பேச்சை உங்களுக்கு நல்லதாக பேசுங்கள் உதாரணமாக நான் நன்றாகவே இருக்கிறேன். உங்கள் வாழ்க்கை மாறு நான் மாற்றுவேன் என்கிறான்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ‏
(ஆகவே,) நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள்.

يُّصْلِحْ لَـكُمْ اَعْمَالَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا‏
அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்களுடைய குற்றங்களையும் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகின்றாரோ அவர் நிச்சயமாக மகத்தான பெரும் வெற்றியடைந்துவிட்டார்.
(அல்குர்ஆன் : 33:70,71)

மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
மேலப்பாளையம்
திருநெல்வேலி

No comments: