Thursday, October 25, 2018

அறியாத அறிவு

dr habibullah
dr habibullah

அறிவு - அறியாமை
இது பற்றி சற்று விளக்கமாக
சொல்லுங்ககள் குருவே
சூபி ஞானி
இமாம் கஸ்ஸாலியிடம்
அவரது சீடர்கள் கேட்டனர்.

இமாம் கஸ்ஸாலி
நிதானமாக சீடர்களிடம்
பேச துவங்கினார்....
அறிவையும் அறியாமையையும்
நான்காக வகைப் படுத்தலாம்


முதல் வகை
அறிந்தவர்....!
எல்லாம் நன்கு தெரிந்தவர்.
தான் அறிந்தவர்
என்பதை
தெளிவாக தெரிந்தவர்.

கற்றாலும்
கற்றது கைமண் அளவு
என்ற உண்மை உணர்ந்தவர்
பெருமை பாராட்டாதவர்
ஞானிகள் இந்த வகை.

இரண்டாம் வகை
அறியாதவர்.....!
ஒன்றும் தெரியாதவர்.
தனக்கு ஒன்றும் தெரியாது
என்பதையும் தெளிவாக
தெரியாதவர்.

அறிஞர் போல் பேசி
தான் ஒரு அறிவிலி
என்பதை நிரூபிப்பவர்.
ஏமாற்றும் பேர்வழி இவர்கள்.
தனக்கு எதுவும் தெரியாது
என்பதை நன்கு அறிந்தும்
தேவை இல்லாமல் எல்லாம்
தெரிந்தது போல் நடிப்பவர்கள்.
வீண் வம்பு செய்பவர்கள்.
தேவையற்ற வாதம் புரிபவர்கள்.
மொத்தத்தில் வீணர்கள்.
வாய் சொல்லில் வீரர்கள்.

மூன்றாம் வகை
அறிந்தவர்....!
எல்லாம் நன்கு தெரிந்தவர்.
என்றாலும்
தான் அறிந்தவர் தானா
என்பது பற்றி தெளிவான
அறிவு இல்லாதவர்.

அறிவு ஞானம் மிக்கவர்கள்
இவர்கள். அறிவு இருந்தும்
அவையடக்கம் கருதி
வாய் பொத்தி மெளனியாக
ஒன்றும் தெரியாதவர் போல்
காட்சி அளிப்பவர்கள்.
தங்கள் அறிவு பற்றிய போதிய
தெளிவு இல்லாதவர்கள்.
இதனால் அவையில்
நாவடக்கம் பேணுபவர்கள்.
வாய் இருந்தும் ஊமைகள்.

நான்காம் வகை
அறியாதவர்....!
உண்மையில்
தனக்கு எதுவும் தெரியாது
என்பதை
தெளிவாக அறிந்தவர்.

தெரியாது என்று சொல்ல
மிகுந்த தைரியம் வேண்டும்.
பாமர மக்களான இவர்கள்
திறந்த புத்தகம் போன்றவர்கள்.
யார் வேண்டுமானாலும் எதை
வேண்டுமானாலும் எழுதலாம்.
எதையும் யார் சொன்னாலும்
உண்மை என்று நம்புபவர்கள்.
வேடிக்கை மனிதர்களான
இவர்கள் எளிதில் உணர்ச்சி
வயப்படுபவர்கள்.

He knows and knows
that he knows
He knows not and knows not
that he knows not
He knows and knows not
that he knows
He knows not and knows
that he knows not.
dr habibullah

No comments: