Tuesday, October 30, 2018

டாக்டர் அன்சாரி


எனது நண்பரும் உறவினருமான
டாக்டர் அன்சாரி, நேற்று மாலை
தன் குடும்பத்துடன் எனது
நாகர்கோவில் வீட்டிற்கு
வருகை புரிந்தார்.
அமெரிக்காவின்
சவுத் கரோலினா மாநிலத்தில்
புகழ் பெற்ற
Gastro enterologist
ஆக இவர் திகழ்கிறார்.



சிறிது நேரமே தங்கி இருந்த
அவரிடம் சில நோயாளிகளின்
எம்ஆர்ஐ ரிப்போர்ட் பற்றி அவரது
ஆலோசனைகளை கேட்டேன்.
மருத்துவ ஆய்வுகளை மட்டும்
வைத்தே நோயின் தன்மைகளை
யும் தொடர வேண்டிய சிகிச்சை
முறைகள் பற்றியும் அவர் விளக்கிய
விதம் குடல் இரைப்பை பற்றிய
துறையில் அவர் பெற்றிருந்த
மிக நுண்ணிய நிபுணத்துவத்தை
அறிய உதவியது.

ஒரு நோயாளியை பற்றி...
நோயாளியை பார்க்காமலே
அவர் கூறிய கருத்துக்களையே
நோயாளியை முழுக்க
பரிசோதித்து பார்த்த
தமிழகத்தின் மிக சிறந்த
குடல் இரைப்பை நிபுணர்
இன்று என்னிடம் சொல்லி
இருப்பது என்னை மிகவும்
வியக்க வைத்தது.

டாக்டர் அன்சாரியின் மூத்த
மகன் தான் அமெரிக்காவின்
பிரபல ஹாலிவுட் நடிகர்
அஜீஸ் அன்சாரி.
அண்மையில் ஹாலிவுட்டின்
மிக உயர்ந்த விருதான
கோல்டன் குளோப் விருது
இவர் கதாநாயகனாக நடித்த
மாஸ்டர் ஆஃப் நன்
Master of None
திரைப்படத்துக்கு வழங்கப்பட்ட
செய்தி இந்தியாவுக்கு...
குறிப்பாக தமிழக மக்களுக்கு
கிடைத்த பெருமை என்றே
சொல்ல வேண்டும்.

டாக்டர் அன்சாரியின்
மனைவி மற்றும் நடிகர்
அஜீஸ் அன்சாரியின் தாயார்
நாகர்கோவிலை சார்ந்த
பிரபல சட்ட வல்லுநர்
பக்ருதீன் ஆதம்
அவர்களின் மகள் என்பது
குறிப்படத் தக்கது.

No comments: