Tuesday, October 23, 2018

கில்லாடி மருத்துவர்கள்


டாக்டர்கள் பலவகை
புத்தக மேதைகளாக சிலர் 
பிராக்டிகல் ஸ்கில்ஸில் 
நிபுணர்களாக சிலர் 
டேலண்ட்டில் மிகைத்தவர் சிலர் 
டெக்னிக்ஸில் வல்லவர் சிலர் 
டிரிக்ஸ் கலை வல்லுநர் சிலர் 
டேக்டிக்ஸில் சிறந்தவர் சிலர்

படிக்கும் காலங்களில்....
லைப்ரரியிலேயே வாழ்வார் சிலர் 
வார்டிலேயே குடியிருப்பார் சிலர் 
தியேட்டரே கதி என்பார் சிலர். 
பின்னாளில்...
பேராசிரியர் ஆவதும்
தேர்ந்த மருத்துவர் ஆவதும் 
சகல கலா வல்லவர் ஆவதும் 
கற்ற அல்லது பெற்ற திறமைகள் 
அடிப்படையில் தான் நிகழ்கிறது.


எம்பிபிஎஸ். முடித்த கையோடு
பணியில் குதிக்கும் ஹவுஸ் சர்ஜன் 
களின் திறமை அலாதியானது.
இவர்கள் தான் உண்மையில் 
கில்லாடி டாக்டர்கள்.இவர்கள்
இல்லை என்றால் மருத்துவமனை 
கள் அத்தனையும் முடங்கி விடும்.
இளம் கன்று பயம் அறியாது என்பது 
போல் எந்த கேஸையும் டென்சன் 
இல்லாமல் அணுகும் முறையில் 
இவர்கள் வல்லவர்கள்.இரவும்
பகலும் மருத்துவமனையிலேயே
வாசம் என்பதால் நோய் அறிந்து
சிகிச்சை அளிப்பதில் நிபுணர்கள்.

எவ்வளவு பெரிய விஐபி ஆக
இருந்தாலும் துணிச்சலாக 
அட்டண்ட் செய்வதும் நோய் 
பற்றிய பேசிக் ஹிஸ்டரி 
ரிகார்ட் செய்வதும்..
கன்ஸர்ண்ட் ஸ்பெசலிஸ்ட் டுக்கு
இன்ஃபார்ம் பண்ணி வார்டுக்கு வர
வைப்பதும் இவர்கள் தான்.

சூப்பர் ஸ்பெசலிஸ்ட்கள் முழு 
நேரமும் மருத்துவமனையில் 
இருப்பதில்லை.எமர்ஜன்சி 
வார்டு, முழு நேரமும் இவர்கள் 
கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.
இப்போது கூட பன்றி காய்ச்சல் 
டெங்கு காய்ச்சல் போன்றவற்றை
மிக திறமையாக கையாள்பவர்கள்
இந்த எம்பிபிஎஸ் டாக்டர்கள் தான்.

90 சதவீத நோய்களுக்கு சிறந்த 
சிகிச்சை அளிக்க எம்பிபிஎஸ் 
டாக்டரால் முடியும்.சில நோய்க்கு 
மட்டுமே சூப்பர் ஸ்பெசலிஸ்ட்கள் 
தேவைப் படுகிறார்கள்.அந்த
நோய்களையும் இவர்கள் தான் 
கண்டறிந்து சிபாரிசு செய்கிறார்கள்.

மருத்துவத்தில் நாகர்கோவில் 
நகரம் மிகவும் புகழ்பெற்ற இடம். 
அந்த காலங்களில்...
நாகர்கோவில் நகரில் எம்பிபிஎஸ் 
படித்த டாக்டர்களே எல்லா நோய்க்
கும் சிகிச்சை அளித்தனர்.
ஸ்பெசலிஸ்ட்கள் மிகவும் அபூர்வம்.
டாக்டர் மத்தியாஸ் அளவுக்கு அவர் 
பிள்ளைகள் இல்லை.கோபால
பிள்ளை,தேரூர் டாக்டர்,டாக்டர்
ஜெயஹர்,ஜோசையா எல்லாம் 
வெறும் எம்பிபிஎஸ் டாக்டர்களே.
வெறும் ஜிசிஐம் படித்த டாக்டர் 
நாயுடு தான் அன்று பிரபல 
மகப்பேறு நிபுணர்.

சென்னை போன்ற பெரிய நகரில் 
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கூட 
இன்றும் எம்பிபிஎஸ் டாக்டர்களை 
தான் தங்கள் குடும்ப டாக்டர்களாக 
தேர்வு செய்கின்றனர். அவர்கள் 
மீது அவ்வளவு நம்பிக்கை.
நமதூர் மக்களுக்கு மட்டும் 
எம்பிபிஎஸ் என்றால் சற்று 
அலர்ஜி தான்.

FRCOG படித்த டாக்டர் 
சார்லஸை மகப்பேறு நிபுணர்
என்று நம் மக்களுக்கு முதலில் தெரியவில்லை.FRCS படித்த
டாக்டர் ஹைமாவதியை 
மகப்பேறு நிபுணர் என்று நம் 
மக்கள் நினைத்தார்கள்.எனது
நண்பர் டாக்டர் ராமன் DM
cardiology முடித்த பின் நமது 
ஊரில் ஒரு ஹார்ட் கிளினிக்
துவங்கினார்.எம்டி யை டிஎம்
என்று மாற்றி எழுதி இருக்கிறார்
என்று நமது மக்கள் கிண்டல் 
செய்தார்கள்.அன்று ஊரை 
விட்டு ஓடிப்போனவர் தான்.
இன்று மஸ்கட் நகரில் புகழ்பெற்ற 
கார்டியாலஜிஸ்ட் இவர் தான்.
அரச குடும்ப டாக்டர் இவர்.

எனது டாக்டர் நண்பர் ஒருவர் 
புனித மக்கா நகரில் ஸ்பெசல்
பிரேயர் ஒன்றை நிகழ்த்துவார்.
அவரிடம் அது பற்றி வினவினேன்
அவர் சொன்னார்.... 
இறைவா நோயைக் கொடு
குற்றம் இல்லை.அதோடு எனக்கு 
ஒரு நல்ல டாக்டரையும் கொடு. 
a super prayer for all of us 
dr habibullah

No comments: