Thursday, November 1, 2018

ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின் திருத்தோழர்கள் -3

திருத்தோழர்கள் ஏவாத நன்மையும் இல்லை;தடுக்காத தீமையும் இல்லை. தமக்கே பாதகம் ஏற்பட்ட நிலைகளில் கூடத் தம்முடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, மனசாட்சியைப் புதைத்துவிட்டு, தன்னலம் பேணுபவர்களாக இல்லாமல் நீதியை நிலைநாட்டிய வேதவீரர்கள் என்னும் வியப்பிற்குரியவர்கள் அவர்கள்! எனவேதான் வாழ்வின் எல்லாத் துறைகளையும் பற்றிய சட்டங்களும் உலகத்திற்குக் கிடைக்க அவர்கள் காரணமானவர்களாக இருக்கிறார்கள்.


அண்ணல் நபி(ஸல்) அவர்களின் திருத்தோழர்களான ஸஹாபாப் பெருமக்கள் இல்லையேல், உலகத்திற்குத் திருக்குர்ஆன் கிடைத்திருக்காது; நபி(ஸல்) அவர்களின் நன்னய நடைமுறைகளான “சுன்னா” எனும் ஈருலக வாழ்க்கைக்கும் ஏற்ற இனிய நெறிமுறைகள் கிடைத்திருக்க மாட்டா; நாமெல்லாம் முஸ்லிம்களாக ஆகியிருக்க முடியாது; உலகில் இன்று 170 கோடிக்கும் அதிகமானவர்களாக முஸ்லிம்கள் பெருகி இருக்க இயலாது;57 முஸ்லிம் நாடுகளும் உருவாகி இருக்க மாட்டா. உலகில் வேகமாக வளரும் (the fastest-growing religion in the world) மார்க்கமாக இஸ்லாம் ஆகி இருக்கவும் முடியாது.

இந்த அளவுக்கு உலக வரலாற்றில் வெற்றிகரமான தாக்கங்களை ஏற்படுத்திய ஸஹாபாப் பெருமக்கள் என்னும் சிறப்புக்கு யாரெல்லாம் உரியவர்கள்?

அண்ணல் நபி(ஸல்) அவர்களை, அவர்களுடைய வாழ்நாளிலேயே நேரில் கண்டு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றவர்கள் சுமார் 5,00,000பேர் ஆவர். அவர்கள் மக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட போது அவர்களுடன் ஹஜ் செய்தவர்கள் சுமார் 1,44,000பேர் ஆவர்.(1,24,000பேர் என்றும் கூறுவர்). இவர்கள் அனைவருமே ஸஹாபாக்கள் என்று கூறப்படுவது ஒரு பொதுவான மரபாக இருக்கிறது. எனினும் குறிப்பாகவும் சிறப்பாகவும் ஸஹாபாப் பெருமக்கள் என்று இஸ்லாமிய வரலாற்றில் ஏற்றிப் போற்றப்படுபவர்கள் யாவர் தெரியுமா?

(இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்,அறிவோம்)

--- ஏம்பல் தஜம்முல் முகம்மதுYembal Thajammul Mohammad
ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின் திருத்தோழர்கள்-(4)
ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின் திருத்தோழர்கள் -1

No comments: