Friday, October 26, 2018

இரத்த பந்தம்

dr.habibullah
ஹிந்து உயர்க்குல பிராமண
பெண்மணிக்கு ஒரு முஸ்லிம்
எப்படி சகோதரனாக முடியும்!
எனது வாழ்வில் நிகழ்ந்த மிகவும்
நெகிழ்ச்சியான சம்பவம் இது.

அப்போது நான் மதுரை மருத்துவ
கல்லூரியில் குழந்தை மருத்துவ
துறையில் பிஜி படித்து கொண்டு
இருந்த நேரம்.எனது பேராசிரியர்
டாக்டர் ஜெ.விஸ்வநாதன்
அவர்களின் மனைவி தான்
அந்த பெண்மணி ஆவார்.


(DR.JV என்ற ஜெ.விஸ்வநாதன்
அந்த காலத்தில் பிரபல
குழந்தைகள் மருத்துவ
பேராசிரியர்.அகில இந்திய
அகடமி ஆஃப் பீடயாட்ரிக்ஸ் தலைவர்.அவர்எழுதிய புத்தகம்
தான் இன்றும் பல பதிப்புகளுடன்
வெளி வந்து மருத்துவ
மாணவர்களின் பாட நூலாக
உள்ளது)

பேராசிரியர் மனைவி என்னை
அவரது வீட்டில் நிகழ்ந்த
ஒரு ஸ்பெசல் பங்சனுக்கு
எனது பேராசிரியர் மூலம்
அழைப்பு விடுத்திருந்தார்.

நான் சென்ற போது வீட்டு
வாசல் வரை வந்து வரவேற்று
வரவழைத்து தம்பி என
பாசமாக அழைத்து அரவணைத்து,
தன் பெற்றோர், உற்றார் மற்றும்
சுற்றத்தார் முன் இவன் தான்
என் தம்பி டாக்டர்.அபிபுல்லா.
என்று அறிமுகம் செய்த போது
அதுவும் அவர்களது பூஜை அறை
வாசல் அருகில் நின்று...
நான் சற்று தடுமாறித்தான்
போனேன்.

யூ நோ...
இவன் உடலில் ஓடும்
இரத்தமும் என் இரத்தமும்
ஒன்று... இதை சொல்லும்
போது அவர் அழுது விட்டார்.
என் கண்களும் கலங்கி
விட்டது.

அவரது ஒட்டு மொத்த
உறவினர்களும் பிராமண
உயர் அதிகாரிகள், நீதியரசர்கள்
உட்பட பலர் கைதட்டி தங்கள்
மகிழ்ச்சியை பகிர்ந்ததுடன்
என்னை வெகுவாக பாராட்டி
மகிழ்ந்தனர்.அந்த நிகழ்ச்சியை
எனக்கு வேண்டித் தான்
பேராசிரியர் குடும்பத்தினர்
நடத்தி மகிழ்ந்தனர்.

பேராசிரியரின் மனைவியார்
ஒரு நோயாளியாகவே இருந்தார்.
இரத்த சோகை நோயும் சேரவே
உடனடியாக இரத்தம் தேவை
பட்டது.அப்போது இரத்த
வங்கிகள் இப்போது போல்
இல்லை.இரத்தம் கொடுக்கவும்
எவரும் முன் வருவதில்லை.

மிகவும் மன வருத்தத்தில்
இருந்த பேராசிரியர் எனது
இரத்த வகை அவரது மனைவிக்கு
ஒத்து போகும் வகை என்று அறிந்த
போது மிகவும் சந்தோஷம் அடைந்தார்.

என்றாலும் என்னிடம்
துணிந்து கேட்க தயங்கினார்.
நான் ஆர்வத்துடன் முன் வந்த
போது அழுது விட்டார்.அவர்
சொன்னார்....என் குடும்பத்தை
சார்ந்தவர்களே இரத்தம் தர
தயங்கிய போது....நீ தருவதற்கு
ரெடியாகி விட்டாய்...

ஆறு மாதங்களுக்கு பிறகு..
மீண்டும் பேராசிரியர்
மனைவிக்கு இரத்தம்
தேவை பட்டது. அப்போதும்
நான் தான் கொடுத்தேன்.

தம்பி எல்லாம் இருக்கிறது
என் உடலில் இரத்தம் தான்
இல்லை.இதை கடன் தருவார்
எவரும் இல்லை.ஆனால் நீயோ
தானமாக தருகிறாய்.என்னால்
திருப்பித் தர முடியாதை நீ
எனக்கு தருகிறாய்.....!

இரத்த பந்தத்தால் நான் அவரது
சகோதரர் என்றே அவர் மனப்
பூர்வமாக நம்பினார்.அவர்கள்
வீட்டு பூஜை அறைக்குள்ளும்
என்னை வர அநுமதித்தார்.
இரத்தம் ஜாதி மதம் இனம்
பார்ப்பது இல்லை.

Vavar F Habibullah
https://nidurseasons.blogspot.com/search?q=Vavar+F+Habibullah

No comments: