Thursday, October 4, 2018

இறைநேசர்கள் ஒரு சகாப்தம்!!!!

இறைநேசர்கள் ஒரு சகாப்தம்!!!!

பல்க் நாட்டில் அரசாட்சி செய்து கொண்டிருந்த அந்த அரசர் அரசு வேலையை முடித்துக்கொண்டு ஓய்வெடுப்பதற்காக தன் அறையை நோக்கி சென்ற அப்பொழுது அந்த அறையை பராமரித்துக் கொண்டிருந்த ஒரு பணிப்பெண் சற்று அயர்ந்து அந்த கட்டிலில் தூங்கி விட்டார் .இதனை பார்த்த அந்த அரசர் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னுடைய கட்டிலில் படுத்து உறங்குவாய் என்று சவுக்கால் அந்தப் பெண்ணை அடித்தார்.
வலி தாங்கமுடியாமல் அந்தப் பணிப்பெண் நான் சற்று நேரம் தூங்கியதற்கு எனக்கு இப்படி தண்டனை தருகிறீர்களே!

நீங்கள் தினந்தோறும் இந்த கட்டிலில் தான் படுத்து உறங்குகிறார்கள் அப்படியென்றால் உங்களுக்கு எவ்வளவு பெரிய தண்டனை காத்திருக்கிறது.என்று அந்தப் பணிப்பெண் கூறினார்.

இந்த வார்த்தையை கேட்ட அந்த அரசர் பெரும் அதிர்ச்சியானார் பிறகு அவர்கள் அந்த கட்டில் தூக்கம் இல்லாமல் அங்குமிங்கும் புரண்டு கொண்டிருந்தார்

அப்போது "உப்பரிகையின் முகட்டின்மேல் ஏதோ! தடதடவென்று நடமாடும் ஒலி கேட்டது அந்த அரசர் யார் என்று வினவினார்கள்".
அப்பொழுது பதில் வந்தது" உமக்கு அறிமுகம் ஆனவர் தான் "அப்பொழுது
அரசர் கூறினார் யாராக இருந்தாலும் சரி அர்த்த இராத்திரியில் அங்கு என்ன வேலை என்று ஆங்காரத்துடன் பதில் கூறினார் அப்பொழுது பதில் ஒளி வந்தது

" என் ஒட்டகத்தை காணவில்லை அதனை நான் இங்கு தேடுகிறேன் என்ற பதில் வந்தது அதைக் கேட்ட அரசர் என் உப்பரிகையின்மேல் முகட்டில மேய வந்தது நீர் வந்து இங்கே தேடுவதற்கு என்று கடுப்புடன் அரசர் பதில் கூறினர்
அப்பொழுது பதில் வந்தது"

"ஒ!மறதியாளரே! நீர் என்ன உன்னையும் உன் நிலைமையையும் மறந்துவிட்டு பேசுகின்றீர்கள். நீர்! பொற்கட்டிலில் மேல் மேல் விரிக்கப்பட்ட மலர் மஞ்சத்தில் மீது படுத்துக்கொண்டு இறைவனைத் தேடிக் கொண்டிருக்கும் போது நான் மட்டும் ஏன் காணாமல் போன என் ஒட்டகத்தை இங்கு வந்து தேடக் கூடாதா? என்ற பதில் வந்தது அதைக் கேட்ட அரசர் என்ன என்பது பதில் கூறத் தெரியாமல் திகைத்தார்கள்.

அதனை மறப்பதற்காக தன் சகாக்களுடன் காட்டில் வேட்டையாடச் சென்றார் அப்பொழுது ஒரு மானை நோக்கி அம்பு ஏய்தார்.அந்த மான் தப்பி ஓடியது அந்தமானை விரட்டிக் கொண்டு சென்றார் அந்த அரசர் .
அப்பொழுது அந்த காட்டில் ஒரு ஒளி எங்கிருந்தோ முழங்கியது.

"உறக்கத்தை விட்டு விழித்தெழும்" என்று உத்தரவிட்டது.

அப்போது அரசர் கூறினார் எவரும் இல்லாத இடத்தில் யாருக்கு
உத்தரவிடுகின்றாய். என்று கூறி அங்குமிங்கும் பார்த்தார் அரசர்.
அப்பொழுது மீண்டும் அந்த ஒளி முழங்கியது "இறப்பு உன்னை அணுகும் முன் விழித்தெழும்"
என்று மீண்டும் உத்தரவிட்டது அதைப் பொருட்படுத்தாமல் அந்த அரசர் அந்த மானைத் துரத்திக் கொண்டு சென்றார் அப்பொழுது அந்தமான் அந்த அரசரைப் பார்த்து கூறியது "உம்மால் என்னை வேட்டையாட முடியாது அதற்கு மாறாக உம்மை வேட்டையாட நான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன்"
"உம்மை இறைவன் இதற்காகவா! படைத்தான்.
உமக்கு வேறு வேலையே இல்லையா? என்று கூறியது அந்தமான்"

அடுத்த கணம் குதிரையின் மேல் இருந்து கீழே இறங்கி மறுகணம் அதே கேள்வி அந்த அரசர் சட்டையின் கழுத்துப் பட்டியில் இருந்து வெளிப்போந்து அந்த அரசரை திக்குமுக்காட வைத்தது.

அவ்வளவுதான் அந்த மானை துரத்துவதை விட்டு விட்டு தம் புரவியிலிருந்து இருந்து கீழே இறங்கினார்.அது மட்டுமில்லாது தம் அரசர் என்னும் அரியாசன பதவியையும் விட்டு கீழே இறங்கினார்.
அதுமுதல் அவர் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.
தாம் அணிந்திருந்த ஆடைகளை ஒரு ஆடு மேய்ப்பவனிடம் கொடுத்துவிட்டு அவன் அணிந்திருந்த ஒரு கம்பளி போர்வையை அணிந்துகொண்டு தன் ஆன்மீகப் பயணத்தைத் துவங்கினார் அந்த அரசர் .

அதன்பிறகு பாக்தாத் மாநகரம் சென்று அங்கு ஒரு மாபெரும் ஆன்மீக இறைநேசப் பெருந்தகையிடம் சென்று தமக்கு பைஅத் வழங்குமாறு கேட்டுக் கொண்டார் அப்பொழுது அந்த இறை நேசப் பெருந்தகை நல்லது.

நீர் நம்முடைய தவமடத்தில் உள்ள சமையலறையில் மூன்று ஆண்டுகள் வெங்காயம் நறுக்கும் பணியை செய்து வருவீராக என்று கூறினார்கள்.

அவ்விதமே அந்தப் பணியை மூன்று ஆண்டுகள் செய்து முடித்து அந்த இறை நேச பெருந்தகை இடம் எனக்குத் பைஅத் தாருங்கள் என்றார் அந்த அரசர்.
அப்பொழுது அந்த இறை நேச பெருந்தகை கூறினார்கள்.
நீர்!இன்னும் மூன்று ஆண்டுகள் நம்முடைய தவம் மடத்திற்கு தண்ணீர் சுமந்து வரும் பணியை செய்வீராக! என்று பணித்தார்.
அவ்வாறு அந்தப் பணியை செய்து கொண்டிருக்கும்போது ஒரு நாள் அந்த தண்ணீர் பை கிழிந்து விட்டது .
அப்பொழுது அங்கிருந்த ஒரு தவமட ஊழியன் அந்த அரசரை ஓங்கி கன்னத்தில் அறைந்து விடுகிறார்.

அப்பொழுது அந்த அரசர் நான் மட்டும் பல்க் நாட்டின் அரசப் பதவியை துறக்காமல் இருந்திருந்தால் உன்னை பழிக்குப் பழி வாங்கி இருப்பேன் என்று கூறினார்.

பின்பு மூன்றாண்டுகள் கழித்து அந்த இறை நேசப் பெருந்தகையிடம் தமக்கு பைஅத் வழங்குமாறு கேட்டுக் கொண்டார் அரசர்.

அப்பொழுது அந்த இறைநேசர் பெருந்தகை நீர்!இன்னும் சின்னத்தையும்! அகந்தையையும் இன்னும் விட்டுழொழிக்கவில்லை
ஆகையால் நீர்! இன்னும் மூன்றாண்டுகள் தவமடத்திற்கு விறகு சுமக்கும் பணியை செய்வீராக! என்று பணித்தார்கள்.

அதே போல் அந்த அரசர்
விறகை சுமக்கும் போது அந்த விரகு சரிந்து விழுகிறது. அப்பொழுது அங்கிருந்த தவமட ஊழியர் கன்னத்தில் ஓங்கி அந்த அரசை அடித்து விடுகிறார்.
அப்பொழுது அரசர் அடித்த அந்த தவமட ஊழியரின் கையை பிடித்து முத்தமிடுகிறார்.
அந்த அரசர் முன்பு போல் சினமுறவில்லை!அதற்கு பதிலாக அந்த ஊழியரை நோக்கி என்னை அறைந்ததன் காரணமாக தங்களின் கை வலிக்குமே! என்று எனக்கு வருத்தமாக உள்ளது என்று கூறினார் அந்த அரசர்.

இதைக் கேட்ட அந்த இறைநேசப் பெருந்தகை அந்த அரசரை அழைத்து பைஅத் வழங்கி அவருக்கு பற்பல ஆன்மீக இரகசியங்களை அவர்கள் எடுத்துரைத்தார்கள். அதன்பிறகு அவர்கள் மிகப் பெரும் இறை நேச செம்மலாக மாறினார்கள்

அவர்கள் ஒரு நாட்டின் அரசன் என்று கூட பார்க்காமல் அவருக்கு ஆன்மீகத்தில் பக்குவத்தை அடைய வேண்டும் என்று பற்பல சோதனைகளை செய்து அந்த அரசரை இறைநேசர் ஆக்கிய
அந்த இறை நேசர் பெருந்தகை பெருந்தகை தான் ஆன்மீக குரு ஹழ்ரத் புளைல் இப்னு அயாள்(ரஹ்) அண்ணவர்கள் ஆவர்

அந்த அரசர் தான் பல்க் நாட்டின் அரச பதவியைத் துறந்த அந்த ஆத்மீக ஞானி
மாபெரும் இறைநேசப் பெருந்தகை ஆன்மீக குரு ஹழ்ரத். இப்ராஹீம் இப்னு அத்ஹம்(ரஹ்)அண்ணவர்கள் ஆவர்

http://nammaseithi.com/?p=17255

No comments: