ஒரு குறிப்பிட்ட வகை வேலையை, கம்ப்யூட்டரில் மேற்கொள்ள, நாம் ஒரே புரோகிராமினையே பயன்படுத்துகிறோம்.
அதற்குப் பழகிப் போனதால், மற்ற புரோகிராம்களை, அவை கூடுதல் வசதி,எளிமை மற்றும் வேகம் ஆகிய அம்சங்களைக் கொண்டிருந்தாலும், பயன்படுத்துவதில்லை. சில வேளைகளில், பல புரோகிராம்களை, விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகிறோம். அதே புரோகிராம் செய்து முடிக்கும் வேலையை, இலவசமாய்க் கிடைக்கும் சில புரோகிராம்கள் செய்கின்றன என்று அறியாமல் இருக்கிறோம். இந்த கட்டுரையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் புரோகிராம்களுக்கு இணையான, இலவச புரோகிராம்களும், அவற்றின் தன்மைகளும் பட்டியலிடப்படுகின்றன. இந்த புரோகிராம்களை அவற்றின் மூலம் மேற்கொள்ளும் வேலைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு தரப்படுகின்றன.