Sunday, November 16, 2014

இறப்பு வரை உறக்கமில்லாமல் உழைக்கும் வர்க்கம்.


ஆட்காட்டி விரலின் அளவில் ஆறில் ஒரு பங்கு அளவே இருக்கும் பூச்சி, அளவில் சிறியது ஆனால் அதற்கு இறைவன் அளித்திருக்கும் ஆற்றல் அளப்பரியது.

நாம் உண்ணுவதற்காக உலகில் உற்பத்தியாகும் விளைப்போருட்களில் தேனீக்கள் மகரந்த சேர்க்கை செய்வதன் மூலம் அதன் பங்களிப்பு 25 சதவீதமாகும்.

அமெரிக்காவில் மட்டும் விவசாயத்தில் தேனீக்களின் பங்களிப்பால் கிடைக்கும் பலன் ஆண்டுக்கு பதினைந்து பில்லியன் டாலர்களாம்.

தேனீக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை உறக்கமில்லாமல் உழைக்கும்
வர்க்கம்.

பூச்சி இனங்களிலேயே மனிதனுக்கு உணவு உற்பத்தி செய்பவை தேனீக்கள் மட்டுமே.

இன்றைக்கு தேனீக்கள் அதிகமான புச்சிக்கொல்லிகளின் உபயோகத்தாலும் மின்காந்த அலைகளின் தாக்கத்தாலும்
கூட்டம் கூட்டமாக (Colony Collapse Disorder)அழிந்து வருகின்றன.

தேனீக்களின் வாழ்க்கை முறை சுவராசியமானது.
ராணித்தேனீயின் வேலை சந்ததியைப் பெருக்குவது மட்டுமே.
ஒரு நாளைக்கு 2000முட்டைகள் இடும். ராணித் தேனீக்கு ராயல் ஜெல்லி என்ற சிறப்பு உணவும் ஊட்டப்படுகிறது.

மிகவும் சோம்பலான தேனீக்கள் ஆண் தேனீக்கள்தான்.

தேனீக்கள் உணவுத்தேடி கூட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கின்றன.
உணவு கிடைக்கும் இடத்தை மற்றத் தேனீக்களுக்கு அறிவிக்க அவை
ஒரு வகையான நடனம் மூலமும் வாசனையைத் தெரியப்படுத்துவதன் மூலமும் மற்றத் தேனீக்களுக்கு அறிவிக்கின்றன.திசைகளை சூரியனுக்கு எதிர் திசையில் தெரியப்படுத்துகின்றன. இதைத் துல்லியமாக அறிந்துக்கொள்ளும் கூட்டிலுள்ள மற்ற தேனீக்களும் சரியான இலக்கை நோக்கி பயணித்து
உணவைக் கொண்டு வருவதோடு வேறு எங்கும் மாறிச் செல்லாமல்
தங்களுடைய கூட்டுக்கேத திரும்புகின்றன.

தேனீக்கள் தேனை மட்டும் சேகரிப்பதில்லை மாறாக மகரந்தங்களையும் சேகரித்து வருகின்றன. அதன் உடலமைப்பு அவற்றை சேகரிக்கும் வகையில் அமையப் பெற்றிருக்கின்றன.
மகரந்தம் அவைகளுக்கு உணவுவாவதொடு மகரந்த சேர்க்கைக்கும்
பயன்படுகின்றன.
விஞ்ஞானி ஐன்ஸ்டின் சொல்லியது சற்று மிகையாக இருந்தாலும்
அதில் உண்மையும் இருக்கிறது. இவ்வுலகில் தேனீக்கள் அழிந்துவிட்டால் மனிதர்கள் அவை அழிந்த நான்கு நாட்களுக்குப்பிறகு மனிதர்கள் உண்ண உணவிருக்காது.

தேனீக்கள் தங்களுடைய கூடுகளை அமைக்க தங்களுக்கு கலந்தாலோசித்து முடிவெடுக்கின்றன. இதற்காக அவை பல இடங்களுக்கும் பயணித்து கூடு திரும்பி நடனம் மூலம் தேர்வு செய்திருக்கும் இடத்தை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்துகின்றனர்.
எல்லா தேனிக்களும் ஒருமித்த முடிவுக்கு வந்தவுடன் அவை புதிய கூட்டை நோக்கி பயணிக்கின்றன.
இந்த விஷயத்தில் மனிதர்கள் நேர் மறையாக இருப்பதாகவே நடப்புகள் இருக்கின்றன.

தேனீ வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டுமே தற்காப்புக்காக கொட்ட முடியும் அவ்வாறு கொட்டிவிட்டால் அவை மரணித்துவிடும்.

தேனீக்கள் தங்களின் உடல் எடைக்கு சமமான எடை தேனைச் சேகரித்து பறக்கும் சக்தி பெற்றவை.
தங்கள் உணவுத் தேவை போக மீதியுள்ளதை அவை தேன் கூட்டில் சேகரிக்கின்றன. அவ்வாறு சேகரிக்கபட்ட தேனை இறகுகளின் மூலம் விசிறி தேனில் இருக்கும் அதிகமான நீரை வெளியாக்கி அதைக் கெட்டிப்படுத்துகின்றன. அவ்வாறு சேமிக்கப்பட்ட தேனை beewax முலம் அதை மூடிவிடுகின்றன.

ஒரு தேன்கூட்டில் முழுமையாகத் தேனை சேகரிக்க அவை இரண்டு மில்லியன் மலர்களிலிருந்து தேனை சேகரிக்கின்றன.

தேன் எல்லா சத்துக்களும் நிறைந்த முழுமையான உணவு.

தேன் எந்தக் காலத்திலும் கெடுவதில்லை. அதற்குக் காரணம்
சேகரிக்கப்பட்ட தேனில் தேனீக்கள் சேர்க்கும் Defensin 1 Protein
புரதமேக் காரணமாகும். தேன் இயற்கையிலேயே நுண்ணுயிரி எதிர்ப்பு சக்தி கொண்ட உணவாகும்.

தேன் பண்டைக் காலந்தொட்டே பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

எகிப்து நாட்டில் இரண்டாயிரம் வருடம் முற்பட்ட கல்லறையிலிருந்து கிடைத்த தேன் நிரம்பிய ஜாடியில் இருந்த தேன் இன்றும் உணவாக உட்கொள்ளும் நிலையில் இருந்ததாம்.

மேலும் உம்முடைய இரட்சகன், தேனீக்கு "மலைகளிலும் மரங்களிலும் அவர்கள் (மனிதர்கள்) கட்டி வைத்திருக்கக் கூடியவைகளிலும் (உனக்குரிய)வீடுகளை உனதாக்கிக் கொள்" என்று(ஓர்) உள்ளுணர்வை உண்டாக்கினான்.

பின்னர் கனிகள் அனைத்திலிருந்தும் புசித்து அப்பால் எளிதாக்கப்பட்ட உன்னுடைய இரட்சகனின் பாதைகளில் செல் (என்றும் அறிவித்தான்)
அவற்றின் வயிறுகளிலிருந்து பல்வேறு நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நிவாரணம் உண்டு. நிச்சயமாக இதில் சிந்திக்கக் கூடிய கூட்டத்தினருக்கு ஓர் அத்தாட்சி உண்டு.
( அல் குர்ஆன் அத்தியாயம் 16 வசனம் 68,69)


                                                                  Mohamed Salahudeen
தகவல் தந்த முகம்மது சலாஹுதீன் அவர்களுக்கு நன்றி 

No comments: