Friday, November 21, 2014

முத்தம் / ரபீக்

ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்றதென்னவோ சிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்தான். கற்பிக்க்பபடுவதும் சிறந்த கல்வி தான் அதில் சந்தேகமில்லை. ஆனால், அது எதில் சிறந்த கல்வி? அந்தக் கல்வியினால் இந்த நாட்டிற்கு என்ன பயன்? நம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேருவிடம் தோன்றியது இந்தச் சிந்தனை.
நமக்கு ஆங்கிலேயர் வடிவமைத்துக் கொடுத்திருக்கும் (இன்றளவும் இருக்கிற) அடிப்படைக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலும் நம்மால் திறம்பட சேவைபுரியவும், காலனித்துவ நிர்வாகத்தில் சிறப்பாகச் செயல்படவும் மட்டுமே முடியுமே ஒழிய, இந்தியர்களிடமிருந்து ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் என்பது எட்டாக்கனியாகவே போய்விடும் என்று அவரின் சிந்தனைக்கு விடைகிடைத்தது.

உடனடியாக உயர்கல்வி முறையில் மாற்றங்கள் செய்வதே தலையாய பணி என்று திட்டங்கள் தீட்டினார். அத்திட்டத்தின் வழியிலிருந்து கிடைத்ததுதான் இன்று இந்தியாவில் இருக்கும் ஐ.ஐ.டி தொழில்நுட்பக் கல்லூரிகள்.

அமெரிக்காவில் உள்ள Massachusetts Institute of Technology என்ற தொழில்நுட்பக் கல்லூரியினை மாதிரியாகக் கொண்டு, 1951ம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கொரக்பூர் எனுமிடத்தில்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, சோவியத் யூனியன் மறும் யுனெஸ்கோ போன்ற
சர்வதேத நாடுகளின் ஒத்துழைப்பில் இந்தியாவின் முதல் ஐ.ஐ.டி உருவாக்கப்பட்டது.

அணிசேரா இயக்கத்தில் இந்தியாவின் பங்கு ஒரு முக்கியமாகக் கருதப்பட்ட அந்த நேரத்தில், அச்சூழலை நாட்டிற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் நேரு. ஒவ்வொரு நாட்டின் உதவியுடனும் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் மேலும் பல உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளான ஐ.ஐ.டி க்களை அமைப்பது என்று சிந்தி்த்தார்.

ஐஐடி –மும்பை 1958ம் ஆண்டு சோவியத் யூனியனின் ஆதரவுடனும், ஐஐடி- மெட்றாஸ் 1959ம் ஆண்டு மேற்கு ஜெர்மெனியின் ஆதரவுடனும், ஐஐடி – கான்பூர் 1960ம் ஆண்டு அமெரிக்காவின் உதவியுடனும் மற்றும் ஐஐடி – டெல்லி 1963ம் ஆண்டு இங்கிலாந்தின் ஆதரவுடனும் தோன்றலாயிற்று.

அங்கிருந்து வெளியே வரும் நீங்கள், அவரின் கனவை நனவாக்குகிறீர்களா? என்பது ஒருபுறமிருக்கட்டும்.
உங்களை ஒரு “உரு”வாக்கிய அந்த ஆசிய ஜோதியின் கரங்களுக்கு முத்தமிட என்றாவது நினைத்திருக்கிறீர்களா??
 
எழுதியவர்  Rafeeq Friend

No comments: