Friday, November 7, 2014

பெண் கல்வி என்பது வேலைக்குப் போகவோ, சம்பாதிக்கவோ மட்டுமல்ல.

என் தம்பி மகள் சஃபீரா ஏரோநாட்டிகல் பொறியியலில் பட்டம் பெற்றதோடு முதல் ராங்க் வாங்கி தங்க மெடல் பரிசு பெற்றுள்ளார். கவர்னர் கையால் மெடலை நேற்று வாங்கியுள்ளார். படித்தது கீழக்கரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்த முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில்.

இதில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். ஒன்று, இலக்கியம், ஆன்மிகம், படிப்பு, அறிவார்ந்த சிந்தனை என்று எங்கள் குடும்பத்தின் பெயரை இன்றையை தலைமுறையும் காப்பாற்றிக்கொண்டே வருவது. குறிப்பாகப் பெண்கள் இப்படி வளர்வது அவர்களது வாழ்வில் பெரிய தன்னம்பிக்கையைக் கொடுக்கும். மாஷா அல்லாஹ்.

பெண் கல்வி என்பது வேலைக்குப் போகவோ, சம்பாதிக்கவோ மட்டுமல்ல. அதெல்லாம் இல்லாவிட்டாலும், கல்வி மனிதனுக்கு ஒரு தைரியம் கொடுக்கும். எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலை வந்தாலும் வாழ்ந்து பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும்.
அந்த வகையில் தன் பெண்மக்களைப் படிக்க வைக்கும் என் தம்பி ஷாஹஹான் பாராட்டுக்குரியவர். அவர் DCE படித்த காலத்தில் என்னிடம் ஒன்று சொன்னார். நானும் அவரும் சென்னை கே.பி. மேன்ஷனில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் DCE முடிக்கவில்லை. எங்களுக்கு எதிரில் அந்த குறுகலான சந்தில் ஒரு கட்டிடம் எழும்பிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்த அவர் என்னிடம், “நானா, இது இன்னும் ஆறு மாதம்கூட தாங்காது” என்றார். நான் அவர் சொன்னதை பெரிதாக அப்போது எடுத்துக்கொள்ளவில்லை. படிப்பில் இருக்கும் ஆர்வக்கோளாறு என்றுகூட நினைத்திருக்கலாம். ஆனால் மூன்று மாதங்களுக்குள் அவர் சொன்னமாதிரியே அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்துவிட்டது! அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

கட்டிடம் கட்டுவது முக்கியமல்ல. அது விழாமல் இருக்குமாறு கட்டவேண்டும் என்பதுதான் சமீபத்தில் கிடைத்த வரலாற்றுப்பாடமும்கூட! அவர் மகள் இன்று தங்க மெடல் பரிசு பெற்றிருக்கிறார்! புலிக்குப் பிறந்த பெண் புலி! அவருடைய சகோதரி ஷஃபீகாவும்கூட ப்ளஸ்டூ ஆயிரத்து நூறுக்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை செய்ததை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். தம்பி மகள் சஃபீரா பார்ப்பதற்கு அவர் அப்பாவின் தாயார் – என் பெரியம்மா – மறைந்த ஹலீலா அவர்களைப் போலவே இருப்பார். எனக்கதில் இரட்டிப்பு சந்தோஷம். நீடித்த ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று அவள் வாழ பிரார்த்திக்கிறேன்.

கொசுறுச் செய்தி: 1984ம் ஆண்டில் நான் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில்தான் சீனியர் லெக்சரர் – ஆக ஆங்கிலத் துறையில் பணி புரிந்தேன்!

அன்புடன் நாகூர் ரூமி Nagore Rumi
********************************************

ஒரு குடும்பத்தின் கல்வி வளர்ச்சி மூன்று தலைமுறைக்குத் தீட்சண்யத்துடன்தொடர்வது சாதாரண நிகழ்வாக இருக்க முடியாது. இக்குடும்பத்தின் பெண்கள் - சித்தி ஜுனைதாக்கள் பல்வேறு கிளைகளில் சாதனைகள் நிகழ்த்தி வருவது ஒரு செய்திமட்டுமல்ல....ஆழமான ஆய்வுக்குரியதும் கூட.
ரூமி இதுபற்றியும் ஆய்ந்து வெளியிடும் செய்திகள் தமிழ் முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு முன்மாதிரி 

 Himana Syed

No comments: