Monday, November 10, 2014

அன்புள்ள அத்தா / யாசர் அரஃபாத்:

 
உணர்வுகளை
வெளிக்கொணரத் தெரியாமல்…
எப்போதும் தூரமாய்
நீங்களும் - நானும்!

வளர்ச்சியின் அஸ்திவாரத்தில்
நங்கூரமாய் நீங்கள் நிற்கிறீர்கள்..
நங்கூரம் வெளித்தெரியாமலே!

ஆண் நான்;
ஆழமான அன்புகளை
ஒளித்தே வைத்திருப்பதால்..
எப்போதும் வெற்றிப்பெற்றுவிடுகிறாள்
என் சகோதரி உங்களிடம்!

பரிசுத்தமான அன்போடு
ஓர விழிகளில் எப்போதும் -உங்களை
கண்டுக்கொண்டேயிருக்கிறேன்;
எனக்கான கதாநாயகன் நீங்கள்;
இன்றும்;என்றும்!!
என் பக்கம்
அன்புள்ள அத்தா...

உணர்வுகளை
வெளிக்கொணரத் தெரியாமல்…
எப்போதும் தூரமாய்
நீங்களும் - நானும்!

வளர்ச்சியின் அஸ்திவாரத்தில்
நங்கூரமாய் நீங்கள் நிற்கிறீர்கள்..
நங்கூரம் வெளித்தெரியாமலே!

ஆண் நான்;
ஆழமான அன்புகளை
ஒளித்தே வைத்திருப்பதால்..
எப்போதும் வெற்றிப்பெற்றுவிடுகிறாள்
என் சகோதரி உங்களிடம்!

பரிசுத்தமான அன்போடு
ஓர விழிகளில் எப்போதும் -உங்களை
கண்டுக்கொண்டேயிருக்கிறேன்;
எனக்கான கதாநாயகன் நீங்கள்;
இன்றும்;என்றும்!!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails