Sunday, March 31, 2013
கவிஞர் அஸ்மின்
கவிஞர் அஸ்மின்
வசந்தம் TVயில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரியும் கவிஞர் அஸ்மின் ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும்,திரைப்பட பாடலாசிரியராகவும், அறியப்பட்டு வருகின்றார். விடை தேடும் வினாக்கள்(2002) விடியலின் ராகங்கள்(2003)ஆகிய கவிதை நூல்களின் ஆசிரியரான இவர் 'ரத்தம் இல்லாத யுத்தம்' கவிதை நூலை மிக விரைவில் வெளியிட இருக்கின்றார்சக்திTVயினால் நடாத்தப்பட்ட'இசை இளவரசர்கள்'போட்டி நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர்,தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு ஜனாதிபதி விருது(2001),பேராதனை பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம் (2003) பெற்றுள்ளதோடு 2 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010,2011) ,அகஸ்தியர் விருது (2011), உட்பட 10க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது இலக்கிய பணியை பாராட்டி 'தடாகம்' கலை இலக்கிய அமைப்பு ''கலைத்தீபம்'' என்ற பட்டத்தினையும் 'லக்ஸ்டோ' ஊடக அமைப்பு ''கலைமுத்து'' என்ற பட்டத்தினையும் அண்மையில் வழங்கி கௌரவித்துள்ளன. சுபாசெவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ''பனைமரக்காடு'' தமிழ் திரைப்படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் இவர் ஜீவா சங்கரின் இயக்கத்தில் விஜய் அன்டனியின் நடிப்பில் வெளிவரவுள்ள ''நான்'' திரைப்படத்தில் இசையமைப்பாளர் விஜய் அன்டனியின் இசையில் பாடல் எழுதியுள்ளார்
கவிஞர் அஸ்மின் blogs
கவிஞர் அஸ்மின் பாடல்கள்

Saturday, March 30, 2013
சகோதரனே
அன்புடன் புகாரி அனைவருக்கும் நன்றி. சவுதி அரேபியாவில் எடுத்த புகைப்படம் இது. இடதுபுறம் இருப்பது தம்பி ஹாலிது. வலது புறம் இருப்பது நான். நடுவில் இருப்பது வடகரை/அரங்கக்குடி அப்துல் கரீம்.
-அன்புடன் புகாரி
======================
பருகியதில் பருகியவனே
தொட்டில் முதல் தோழனே
இரத்தப் பிரதியே
சட்டென்று
எவரும் சொல்லும்
ஒரே வித்தியாசம்
உனக்கும் எனக்கும் என்ன
நகலெடுத்த நீ
எனக்குச்
சற்றே சிறியவன்
நேற்றைய நானாகத்தானே
இன்றைய நீ இருக்கிறாய்
இருந்தும்
இன்று நீ வேறு நான் வேறு
என்பதுதானே நிஜம்
உள்ளே குதித்தோடும்
இரத்த நதிகள் என்னவோ
ஒன்றுதான் என்றாலும்
அவற்றைக் கொப்பளிக்கும்
இதயங்கள் மட்டும்
வேறு வேறுதானே
நம்
தாயும் தந்தையும்
சொல்லித்தந்த பாடங்கள்
நமக்கு ஒன்றேதான்
என்றாலும்
நம் பயணங்கள் மட்டும்
வேறு வேறு தானே
-அன்புடன் புகாரி
======================
பருகியதில் பருகியவனே
தொட்டில் முதல் தோழனே
இரத்தப் பிரதியே
சட்டென்று
எவரும் சொல்லும்
ஒரே வித்தியாசம்
உனக்கும் எனக்கும் என்ன
நகலெடுத்த நீ
எனக்குச்
சற்றே சிறியவன்
நேற்றைய நானாகத்தானே
இன்றைய நீ இருக்கிறாய்
இருந்தும்
இன்று நீ வேறு நான் வேறு
என்பதுதானே நிஜம்
உள்ளே குதித்தோடும்
இரத்த நதிகள் என்னவோ
ஒன்றுதான் என்றாலும்
அவற்றைக் கொப்பளிக்கும்
இதயங்கள் மட்டும்
வேறு வேறுதானே
நம்
தாயும் தந்தையும்
சொல்லித்தந்த பாடங்கள்
நமக்கு ஒன்றேதான்
என்றாலும்
நம் பயணங்கள் மட்டும்
வேறு வேறு தானே
மனித முடி உணவோடு மறைந்து...!
கட்சியை விட்டுப் போனால் போனவரை 'உதிர்ந்த முடி' என்கின்றனர்.
முடி உதிர்ந்து திரும்பவும் வளர்ந்து வந்தால் வரவேற்ப்பார்கள்
முடி திருத்தகத்தில் வெட்டி விழுந்த முடியை சேர்த்து விற்கவும் செய்கின்றனர்
முடி கொட்டினால் மனம் வேதனை அடைகின்றனர்
முடி வளர மிகவும் அக்கறை கொள்கின்றனர்
தண்ணீரில் கலந்த எண்ணையை முடி உள் வாங்கி இழுத்துவிடும்
முடியால் செய்யப்பட்ட பஞ்சு போன்ற பொருள் சுத்தப் படுத்த .தட்டுகளை கழுவ பயன்படுகிறது
அனைத்தையும் விட முக்கியமானது நாம் அறிந்துக் கொள்வதில்லை .
தெரிந்தால் 'ஆவ் 'வாந்தி வரலாம்
முடி உணவில் இருப்பது கண்டால் கோபம் வருகின்றது
மனித முடியே நம் உணவுப் பண்டங்களில் பல வகையில் சேர்க்கப்படுகின்றது அதனை அறியாமலேயே நாம் சுவைத்து உண்கிறோம் .
சில பதனிடப்பட்ட சரக்குகளில் சேர்க்கப்பட்ட எண்ணைய் மனித முடியிலிருந்து வந்ததுதான்

5 Things You Didn't Know: Human Hair - AskMen
Food contaminant - Wikipedia, the free encyclopedia
Does your daily bread contain human hair? - BBC
நமது முதல் நூல்: “வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?” – வெளி வந்து விட்டது!
நமது இணைய தளத்தில் முஸ்லிம்களின் நம்பிக்கைகள் குறித்த 24 கட்டுரைகளை தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கின்றோம்.
மேற்கண்ட 24 கட்டுரைகளையும் இணைத்து “வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?” எனும் தலைப்பில் ஒரு நூல் அல்லாஹ்வின் பேரருளால் வெளி வந்து விட்டது!
இந்நூல் யாருக்காக?
இஸ்லாத்தை அறிந்து கொள்ள விரும்பும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு! முஸ்லிம்கள் எவற்றை நம்புகிறார்கள்? ஏன் நம்புகிறார்கள்? எந்த சான்றுகளின் அடிப்படையில் அவற்றை நம்புகிறார்கள்? – என்பதை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு!

Monday, March 25, 2013
உங்கள் வினாக்களும்; என் விடைகளும்
உங்கள் வினாக்களும்; என் விடைகளும்
அன்பானவர்களே,
இலங்கையிலிருந்து சர்வதேச அளவில் இயங்கும் “தடாகம் இலக்கிய வட்டம்”
என்னும் ஓர் இலக்கிய அமைப்பு என்னிடம் பேட்டி வடிவில் விடுத்திருந்த
வினாக்களும்; அவைகட்கான விடைகளும்
என்றும் உங்களின் ஆசிகளைத் தேக்கி-புகழ்
குன்றின் உச்சியை நோக்கி.
அன்புடன்
கவியன்பன் கலாம
01)உங்கள் குடும்பம் வாழ்க்கை பற்றி கூறுங்கள்?உங்களைப் பற்றிக் கூறுங்கள்?
இந்தியா என் தாய்நாடு; மாநிலம் தமிழ்நாடு;மாவட்டம் தஞ்சாவூர்; ஊர்: அழகிய
கடற்கரைக் கிராமம் “அதிராம்பட்டினம்” ; என் வாப்பா 1957 வரை உங்களின்
இலங்கையில் - கொழும்பில் வணிகம் செய்தவர்கள்;பின்னர் இனக்கலவரத்தால்
இந்தியாவிற்குத் திரும்பி வந்து வணிகம் செய்தார்கள்.(இப்பொழுது என்
சாச்சா மட்டும் குடும்பத்தோடு கொழும்பில் இருக்கின்றார்கள்) அதனாற்றான்
எனக்கும் இயல்பாகவே இலங்கையர்கள் மீது அளவற்ற பிரியம் உண்டாகின்றது.
நானும் வணிகவியலில் ஆர்வம் கொண்டவனாதலால் வணிகவியல் பட்டம் பெற்றவன்
(பி,காம்) 1980 முதல் இன்று வரை அயல்நாட்டின் பிழைப்பில் வாழ்கிறேன்.
எனக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் மருமகன்(மகளின் கணவர்) மற்றும் அழகும்
அறிவும் நிறைந்த பெயரன்(மகள் வழி) அடங்கிய ஒரு சிறு குடும்பம். என்னுடன்
பிறந்தவர்கள் 2 அக்காள்கள், 2 தங்கைகள், ஓர் அண்ணன், ஒரு தம்பி. உம்மா
அவர்கள் இறந்து விட்டார்கள். வாப்பா அவர்கள் இருக்கின்றார்கள்.

Friday, March 22, 2013
உங்கள் மனைவி உலகின் மகிழ்ச்சியானபெண்ணாக இருக்கட்டும்!
. உங்கள் மனைவி உலக நடைமுறையில் மகிழ்ச்சியான பெண்ணாக இருக்க சில நடைமுறைகளை கையாள்வது அவசியமாகின்றது. இது வாழ்வில் தேவையாகின்றது
1.தனிமையில் எதிர்பாராத முத்த மழையால் அன்பை பொழிய வைப்பது
2. மனைவியோடு வருத்தமிருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் பாதையை கடக்கும் போது கையைப் பிடித்து பாதுகாப்பாய் அழைத்துச் செல்வது
3 எலி வலையானாலும் தனி வலை வேண்டுமென்பதுபோல் சிறிய வீடாக இருந்தாலும் தனி வீடு கட்டி சொந்த வீட்டில் வாழ்வது
4.அவளுக்கு பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்வது.
5.உங்கள் விருப்பத்திற்கு முதலிடம் கொடுக்காமல் முடிந்தவரை அவளது விருப்பத்திற்கு பொருட்களை வாங்கிக் கொடுப்பது.
6. உங்கள் உடம்பை அழுத்தி விடச் சொல்லாமல் உங்கள் மடியில் அவளது தலை வைத்து படுக்கச் செய்து அவளது தலை முடியை அன்பாக மெதுவாக கோதி விடுவது(அவசரமாக செய்து சவரி முடி விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்)
7. குளியல் அறையை காற்றோட்டமுள்ள இடமாக இருக்கச் செய்து இனிய இசையை குறைவான ஒலி கொடுக்கச் செய்து அவள் குளிக்கும் நேரத்தை மகிழ்வுறச் செய்வது. (அப்பொழுதுதான் அவளை தினம் குளிக்க ஆர்வமுண்டாக்கும் அதனால் உங்களை மகிழ்வுறச் செய்ய ஒரு ஆர்வம் உண்டாகும் )
8. சத்தான உணவு சாப்பிட கொடுத்து குடும்ப வாழ்வில் உற்சாகம் உண்டாக்க வேண்டும்.
9. உடல் நலமுற்ற காலங்களில் உடனிருந்து உதவுதல்
10. மனைவியின் உறவு முறைகளுக்கு மதிப்பளித்து அவர்களை வரவேற்பது
11. தேவையில்லாமல் அவளது தனிப்பட்ட உரிமைகளில் இடையூறு செய்வதனை தவிர்த்தல் அவசியம்.
12. குறை கண்டுபிடிபதனை தவிர்த்து நிறைவான செயல்களை பாராட்டி பேசுவது உயர்வு

Wednesday, March 20, 2013
அம்மா வந்தாள்
உலகின்
அத்தனை அன்பையும்
ஒன்று குவித்து
தன் பாச உதடுகளால்
என் நெற்றியில்
முத்தமிட்டாள்
பொட்டிற்கு என்பது
உபரிப் பணி
அவளின் முத்தத்திற்கு
என்பதே
என் நெற்றியின்
தலையாயப் பணி
மங்கலாய் எரியும்
தெருவிளக்குகளில்
ஒளிந்து பிடித்து விளையாடியவள்
கணினிப் பெருநகரில்
கைநிறைந்த சம்பளத்தில்
மூக்குக் கண்ணாடி வழியே
மொத்த உலகத்தையும்
அலசிக்கொண்டிருக்கிறேன்
Tuesday, March 19, 2013
எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் !

இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக் கூடிய, பிரிவினை வாத சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறி வைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந் நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்த காலங்களுக்குள் இலங்கையில் பெரும்பான்மையானோராக முஸ்லிம்கள் ஆகிவிடுவார்கள் என்ற அச்சம் இனவாத சக்திகளை பெருமளவில் அச்சுருத்தியிருக்கிறது. இந் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், முஸ்லிம்களை அடக்கி வைக்கவும் பல்வேறு விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.
முஸ்லிம்களுக்கு எதிராக இனத் துவேஷத்தைக் கிளப்பும் பற்பல நடவடிக்கைகள் காலம் காலமாக இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போதிலும், அண்மையில் பங்களாதேஷில் பௌத்தர்களுக்கு எதிராக நிகழ்ந்த சில வன்முறைகள், இலங்கையிலுள்ள முஸ்லிம்களையும் பகிரங்கமாக எதிர்ப்பதற்கு ஏதுவாக அமைந்தன. இலங்கையில், பங்களாதேஷ் வன்முறைகளுக்கான எதிர்ப்பு நடவடிக்கைகள் 'பொது பல சேனா இயக்கம்' எனும் பௌத்த அடிப்படைவாத அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டன. இந்த இயக்கத்தின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் அதிகளவில் பௌத்த பிக்குகளே உள்ளனர்.
ஒவ்வொரு மாதத்தினதும் பௌர்ணமி தினமானது, போயா எனப்படும் பௌத்தர்களின் புனித தினமாகும். இத் தினத்தில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஆணும், பெண்ணுமாக பௌத்த விகாரைகளில் நடைபெறும் மதப் போதனை நிகழ்வுகளில் வெண்ணிற ஆடையுடன் கலந்துகொள்வர். பௌத்த பிக்குகளால் நிகழ்த்தப்படும் போதனைகளுக்குள் முஸ்லிம் இன வெறுப்பை ஏற்படுத்தும்படியான பல விடயங்கள் பெரும்பான்மையான சிங்கள மக்களிடையே சிறிது சிறிதாக ஊட்டப்படுகின்றன. இவ்வாறாக விதைக்கப்படும் நச்சு விதைகள், எதிர்காலத்தில் பெருவிருட்சங்களாக மாறி, வெகுவிரைவில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரங்கள் ஏற்பட அவை காரணமாக அமையும்.

Sunday, March 17, 2013
அகிம்சையின் அடித்தளம் இலங்கையில் ஆட்டம் போடுகின்றது
அகிம்சையை
வளர்த்தவர் புத்தர் ,ஆனால் புத்தர் பெயருக்கு களங்கம் உண்டாக்கி சில புத்த
பிட்சுக்கள் இலங்கையில் தோன்றி தன்னை விளம்பரம் செய்துக் கொள்ள அழகிய
நாட்டையே அழிக்க திட்டம் தீட்டுவது தங்களுக்கே தெரியாமல்
செயல்படுகின்றார்கள் .
நான் ஜப்பான் பிரயாணம் மேற்கொண்டிருந்தபோது ஒரு ஜப்பானிய பெண்மணி எனக்கு வழிகாட்டியாக கியாட்டோ புத்த கோவிலை சுற்றிக் காண்பித்து விளக்கம் தந்து கொண்டிருந்தார். புத்த மதத்தில் மாமிசம் சாப்பிடக் கூடாதே நீங்கள் இங்கு சாப்பிடுகிண்றீர்களே என்றேன் .அவர் அதற்கு பதில் சொல்லாமல் அருமையான புன்னகை பூத்தார். மார்க்கம் வந்தது ஆனால் மார்க்கத்தின் வழி முறைகள் அவர்களுக்கு தெரியாமல் இருந்தாலும் மனிதாபிமானத்துடன் ஜப்பானிய மக்கள் வாழ்கின்றார்கள் .அதற்கு நேர் எதிர் மறையாக் புத்த மத ஆடைகளை மட்டும் போட்டுக் கொண்டு இலங்கை வாழ புத்த பிட்சுக்கள் பலர் புத்த மதத்தின் பெயருக்கே களங்கம் விளைவிகின்றார்கள்.

முத்தங்கள் முக்காடாகும் நாள்
முத்தங்கள் முக்காடாகும் நாள்
இன்று இனிய நாள்
இன்று இனியவள் என்னோடு இணைந்த நாள்
இன்று இனியவளின் முகம் மறைப்பேன்
இன்று இனிய முத்தங்கள் இனியவளின் முக்காடாகும்
இதயங்கள் இனிய மகிழ்வலையால் மோதும்
இதயங்கள் இறைவனை துதி பாடும்
இதயங்கள் அமைதியாய் ஆடி அமைதியடையும்
இதயத்தின் அமைதி நித்திரையில் அடங்கிவிடும்

Saturday, March 16, 2013
மேற்கத்திய கலை :500 ஆண்டு கால பெண்கள் ஓவியங்கள் காணொளி காண்க
மேற்கத்திய கலை :500 ஆண்டு கால பெண்கள் ஓவியங்கள்
500 Years of Female Portraits in Western Art

Friday, March 15, 2013
இன்று ஒரு துண்டுப் பிரசுரம் எனக்குக் கிடைத்தது. அதில் சமுதாயத்தில் சிலரை குறைகூறி எழுதப்பட்டிருந்தது. ஆனால்..
ஒரு துண்டுப் பிரசுரம் குறைகூறி எழுதப்பட்டிருந்தது. நோட்டீஸ் போட்டவர் பெயரோ அச்சகத்தின் பெயரோ பிரசுரத்தில் இல்லை. யார் போட்டார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் சந்தேகத்தோடு பார்க்கும் கேவலமான நிலை.
**************
பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகள் இதுபோன்ற பாவங்களைச் செய்யுமா?
****************
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல ... சிலர் பார்வைக்கு இவனாக இருக்குமோ... அவனாக இருக்குமோ என்ற சந்தேகத்தை இதுபோன்ற " மொட்டை " நோட்டீஸ்கள் ஏற்படுத்துகின்றன.
****************
மொட்டைக் கடிதம் , மொட்டை நோட்டீஸ் போன்றவை சமுதாயத்தைக் கொல்லும் நச்சுக் கிருமிகள். இப்படி " மொட்டை " போடுகின்றவர்கள் " டெங்கு " கொசுவை விட ஆபத்தானவர்கள். அதுகூட ஒன்றிரண்டு பேரைத்தான் கொல்லும். இது சமுதாயத்தையே கொல்லும்.
****************
தாங்கள் சொல்லும் செய்தி உண்மையாக இருக்குமானால் அதை தைரியமாக தங்கள் பெயரைப் போட்டு நோட்டீஸ் போடுங்கள். அது ஆண்மை. பெயர் போடாமல் நீங்கள் என்னதான் உண்மைச் செய்தி போட்டாலும் அதுக்கு மதிப்பில்லை.
**************
சமுதாயம் குறித்த கவலை உங்களுக்கு இருக்கிறதா? நோட்டீஸ் கூட வேண்டாம்.. உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். அதைப் பற்றிய ஆரோக்கியமான விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் தரும் தகவல் தவறாக இருந்தாலும் கூட பிரச்சினை இல்லை. சுய முகத்தோடு வாருங்கள்.
Thursday, March 14, 2013
வெளி நாட்டு வாழ் தமிழ் குடும்பங்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
படத்தை பாருங்கள் .
"Tamil Ini" - Short Film - "தமிழ் இனி" குறும்படம் .இந்த படம் வெளி நாட்டு வாழ் தமிழ் குடும்பங்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
Wednesday, March 13, 2013
2012 -ல் முதல் உலக பத்து பெரிய செல்வந்தர்கள்
உலகில் பெரிய செல்வந்தர்கள் வரிசை
உலகில் பெரிய செல்வந்தர்
1. Carlos Slim Helu & family கார்லோஸ் ஸ்லிம் ஹெலு& குடும்பம்
மெக்ஸிக்கோ
2.Warren Buffett வாரன் பஃபெட்
அமெரிக்கா
3.Amancio Ortega அமான்சியோ ஒர்டேக
ஸ்பெயின்
4. Bill Gates பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட்
அமெரிக்கா
5.Bernard Arnault பெர்னார்ட் அர்னால்ட்டின்
பிரான்ஸ்
6.Larry Ellison லாரி எலிசன்
அமெரிக்கா
7. Li Ka-shing Cheung லி கா-சிங் சியுங்
சீனா China
8=Charles Koch சார்லஸ் கோச்
அமெரிக்கா
8=David Koch டேவிட் கோச்
அமெரிக்கா
10. Liliane Bettencourt Liliane பெத்தென்கோர்ட்
பிரான்ஸ்
மலேசிய பணக்காரர்கள் பட்டியல்:
12.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் ரோபர்ட் குவோக் என்ற சீனர் மலேசியா பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இடத்தில் தமிழர்
கோலாலம்பூர்: போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள மலேசியா நாட்டுப் பணக்காரர்களின் பட்டியலில் இலங்கை தமிழரான ஆனந்த கிருஷ்ணன் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
இலங்கை தமிழரான இவர், மலேசியாவில் பிறந்தவர் ஆவார்.

Tuesday, March 12, 2013
நானும் ஆஃப்ரிக்காவும்
விரிந்து படர்ந்து கிடக்கும் விக்டோரியா ஐலேண்ட் செல்லும் பாதை எழிலாகவும் வனத்துடனும் காணப்பட்டது. விக்டோரியா ஐலேண்ட் பாலம் உலகிலயே நீண்ட பாலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. நான் மட்டும் தனியாக சென்றதால் (‘தல’ என்னுடன் வரவில்லை) “மொபோ” வேண்டாம் என்று சொல்லிவிட்டு அல்லாஹ்வை மட்டுமே நம்பியவனாக நன்கறிந்த வாகன ஓட்டியுடன் சென்றேன்.
அவரோ ரொம்ப(வே) நல்லவர் , இண்டியாவை காணவேண்டும் என்பது அவரின் வாழ்நாள் அவாவாம். அதற்காக பணம் சேர்த்துக் கொண்டிருப்பதாய் கூறினார். எத்தனை பேரிடம் இந்த பிட்டையே போட்டுக் காட்டிக்கொண்டு இருக்கின்றார் என்பது தெரியவில்லை.
லெக்கி பெனிசுலாவை நோக்கி பறக்கும் எங்கள் பயணம்…

Monday, March 11, 2013
உங்களைத்தான் கேட்கிறார்கள்! விளக்கம் கொடுங்களேன்! மக்கள் அறியட்டுமே!
1. ஊருக்காக புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் உங்களுக்கு...
2. விழாக்களுக்கு கட் அவுட், பேனர்கள் வைத்து கொண்டாடும் உங்களுக்கு...
3. ஆடம்பர செலவு செய்து மேடை போட்டு கூட்டம் கூட்டும் உங்களுக்கு...
4. தெருத் தெருவா போஸ்டர் ஓட்டும் உங்களுக்கு...
5. கூட்டம் போட்டு திட்டம் போடும் உங்களுக்கு...
6. இறைவனது இல்லத்தில் சிலர் தவறான வார்த்தைகள் பேச வழி விட்டு அதனை தடுக்க முடியாத உங்களுக்கு...
(குத்பா நடத்தும் பள்ளிவாசல்களில் வெள்ளிக் கிழமை உலமாவின் பிரசங்கம் நடைபெற்ற பின்பு பள்ளிவாசலுக்கு சிலர் வருகிறார்கள்.
சிலர் உலமாவின் பிரசங்கம் பிடிக்காமல் முஅல்லாவின் பள்ளியை விடுத்து வேறு பள்ளிக்கு செல்கின்றார்கள்.
அரசியல் மேடையாக மற்றும் தனி மனிதரைப் பற்றிய விமர்சனமாகவும் ,சொல்லக் கூடாத வார்த்தைகளை உயர்வான இறைவனது இல்லத்தில் பிரசங்கம் செய்வது தற்போது சில ஊர்களில் மாறி வருவது வருந்தத் தக்கதாக உள்ளது .
தொழுகை நடத்துவதற்கு முன் செய்யப்படும் பிரசங்கம் மார்க்க அறிவைத் தருவதோடு தொழுகையில் ஒன்ற வைக்கக் கூடியதாக அமைய வேண்டும் . குர்ஆன், நபிமொழி மற்றும் அதற்கான விளக்கங்கள் தந்தாலே போதுமானது . இவைகளில் காணக் கிடைப்பதே ஏராளம்.)
7. வசூல் செய்து விழா நடத்தும் உங்களுக்கு...
8. தேவையற்றவைகளுக்கு செலவு செய்யும் உங்களுக்கு...
9. ஒதுங்கி நிற்கும் மக்களை உசுப்பி விடும் உங்களுக்கு...
10. பதவிகளுக்காக போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவோர் விரோதம் பாராட்டி உறவுகளை முறிக்கும் உங்களுக்கு...
உள்ளூர் மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளாகிய...
1. சமூக நலன் முன்னிறுத்தி ஊரை ஒற்றுமைப் படுத்த முயற்சி
2. பல பள்ளிவாசளிருந்து அனைத்து பள்ளிவாசலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஆர்வம்
3. வேலைவாய்ப்புகள் பற்றி ஒரு விழுப்புணர்ச்சி உண்டாக்குதல்
4. விளையாடுமிடம் இருந்தும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து உற்சாகப் படுத்துவது
5. அறிவிக்கப்படாத மின்சாரத் துண்டிப்பு
6. சமூக குற்றங்கள் ஒழிப்பு
7. கல்வி மேம்பாடு
8. தேவையான பள்ளிக் கூடங்கள் .கல்லூரிகள் நிறுவுவது
9. சுகாதார விழிப்புணர்வு
10. தேவையான பள்ளிவாசல்கள் உண்டு தொழ மக்கள் வராமலிருப்பது பற்றி சிந்திப்பது
11. நிறைந்த மாணவர்களிருந்தும் தேவையான பள்ளிக் கூடங்கள் .கல்லூரிகள் உருவாக்குவது
12. முதியோர் நலன்
13. இலவச மருத்துவ முகாம்
14. கற்பவர்களுக்கு தேவையான பணத்தை உதவியாகவோ அல்லது வட்டி இல்லாத கடனாகவோ கொடுக்க முயற்சி செய்வது
15. நலத்திட்ட உதவி
16. உடலுக்கு இதயம் எவ்வளவு முக்கியமோ அதுபோல் ஊருக்கு ஒற்றுமை முக்கியம்
என்பதை முன்னிறுத்தி முயற்சி செய்வது
17. அறிவு வளர்ந்த காலத்தில் கருத்து வேறுபாடுகள் கொண்டால் கண்டிக்காமல் அன்புக்கு முக்கியம் கொடுத்து நேசன் பாராட்டுவது
என இது போன்ற உள்ளூர் பிரச்சனைகளைக் கையில் எடுத்து செயல்பட்டு உள்ளூர் பொதுமக்கள் பயன்பெற ஏற்பாடுச் செய்ய முயற்சிக்க வேண்டாமா ?
இறைவனது அருள் அனைவருக்கும் கிடைக்க முயல்வோம் .
உறவை முறித்து வாழ்பவன் சொர்கத்தில் நுழைய மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி)
நூல்: புகாரி 5984
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. வாழு வாழ விடு . நாளாகும் நட்பை வளர்க்க நிமிடம் போதும் நறுக்க

'நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்' - ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்
விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது தந்தையைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால் அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு உடன்பட மறுக்கிறான். மனைவி விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கிறாள்.
"ஒரு வேலைக்காரரை வச்சுப் பார்த்துக்கலாமே. அவருக்கு இவர் தன்னோட மகன் என்பது கூடத் தெரியாது."
"ஆனா அவர் என்னோட தந்தைன்னு எனக்குத் தெரியும்."
இவ்வாறாக நீதிபதியின் முன்னால் வாதிட்டுக் கொள்ளும் தம்பதியினது விவாகரத்து குறித்த விசாரணையின் முடிவில் விவாகரத்துக்கான காரணம் வலிதற்றதெனக் கூறி அவ் விண்ணப்பத்தை நிராகரிக்கிறது நீதிமன்றம். அதற்கு மேலும் கணவன், மகளுடன் சேர்ந்து வாழ விரும்பாத மனைவி தனது பெற்றோரிடம் சென்று விடுகிறாள். அதற்கு முன்பு, கணவன் வங்கி வேலைக்கும், மகள் பாடசாலைக்கும் சென்றதன் பின்னால் வீட்டில் தனித்திருக்கும் தனது வயோதிப மாமனாரைப் பார்த்துக் கொள்வது யாரென்ற கவலையில் மனைவி, ஒரு பெண்ணை அதற்காக ஏற்பாடு செய்கிறாள். அதன் பின்னர் அக் குடும்பத்தில் நடந்தவை என்ன என்பதுதான் படத்தின் கதை.
இஸ்ரேலை ஆட்டம் காண வைத்து, இஸ்ரேலின் திரைப்படமான 'ஃபுட் நோட்(Footnote)"டைத் தோற்கடித்து, இந்த வருடத்துக்கான 84 ஆவது ஒஸ்கார் விருது விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருதினை வென்றெடுத்திருக்கிறது "எ ஸெபரேஷன் - A Separation (பிரிவொன்று)" எனும் இந்த ஈரான் திரைப்படம். ஈரானிய, இஸ்லாமியப் பண்பாடுகளை விளக்கும் இத் திரைப்படமானது ஒஸ்கார் விருதினை வென்று தனது இருப்பை அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும் உரக்கச் சொல்லியிருக்கிறது.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் இணைந்து படத்தினை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார்கள். நாம் பார்த்துப் பழகியிருக்கும் சினிமாக்களில் மிகைத்திருக்கும் சினிமாத்தனங்களுக்கு மத்தியில் எந்தவொரு சினிமாத்தனமும் இல்லாத காட்சியமைப்புக்களும், நடிப்பும், யதார்த்தமும் அதன் ஒவ்வொரு உணர்வுகளையும் பார்வையாளனுக்குள்ளும் ஏற்படுத்தி விடுகிறது.

Sunday, March 10, 2013
திருடுவது போல் நல்ல பதிவாக போடுவது உங்கள் தவறு
பதிவுத் திருடர்களை என்ன செய்யலாம் ?
அண்மையில் 'தமிழ்மணத்தில்' பார்த்து, அமலன் என்பவரது 'கடகம்' வலைத்தளத்தில் நுழைந்தேன்.
சுயமாக எழுதத் தெரியாவிட்டால் ஏன் பதிவெழுதவேண்டும் ? இல்லாவிட்டால் பதிவின் சொந்தக்காரரிடம் அனுமதியைப் பெற்று தன் வலைத்தளங்களில் இடலாமே ? ஒவ்வொரு எழுத்தாளரும், பதிவர்களும் தங்கள் பெறுமதி வாய்ந்த நேரத்தைச் செலவுபண்ணி , தங்கள் திறமைகளைக் கொண்டு ஒரு குழந்தையைப் போல ஆக்கங்களைப் பிரசவிக்கையில் அவற்றைத் திருடிப் பதிவிடுவதைப் பார்க்கும் போது அது குறித்தான எனது வருத்தம் நியாயமானது தானே ?
-----------------------------------------
நாமக்கல் சிபி said...
//(திருடுவது போல் நல்ல பதிவாக போடுவது உங்கள் தவறு)//
------------------------------------------------------------------------

வாழ்த்துகள் To டாக்டர் ஹிமானா சையத்
டாக்டர் ஹிமானா சையத்
சித்தார் கோட்டையில், மல்லாரி அப்துல் கனி மரைக்காயர், உம்மு ஹபீபா தம்பதியினரின் புதல்வராக சனவரி 20 1947 இல் பிறந்தார்
இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்,மருத்துவர்
Saturday, March 9, 2013
Singapore - சிங்கார சிங்கப்பூர்
அரசியல் உறுதிப்பாடினால் சிங்கப்பூர் வழிகாட்டுகிறது.
அரசியல் உறுதிப்பாடினால் சிங்கப்பூர் வழிகாட்டுகிறது பல இன ஐக்கியத்திற்குப் பாராட்டு.
சிங்கப்பூர் இப்போதைய தலைமைத்துவத்தின் கீழ் நெடுங்காலம் அரசியல் உறுதிப்பாட்டுடன் விளங்கி வரும் சிங்கப்பூரில் விரைவான பொருளாதார் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதற்கு வலுவான தலைமைத்துவமும் மக்களின் கடின உழைப்புமே காரணம்.இந்த இரண்டு சிறப்புகளையும் பெற்றிராததால் தான் வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் பல தலை தூக்க முடியாத நிலைமையில் இன்று இருந்து வருகிறது.
வளச்சி வரும் ஆசிய நாடுகளுக்கு சிங்கப்பூர் மிகச் சிறந்த முன்னோடியாக திகழ்கிறது. வளச்சி பெற்றுள்ள நாடுகள் கூட சிங்கப்பூரிடமிருந்து சிலவற்றை எடுத்துக்கொள்ள இயலும். பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினை தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை தரம் பல்மடங்கு உயர்ந்துள்ளது.
ரிமிஸா பீவியின் " ருசி உணவகம் " .
மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்றே போட வேண்டும் என்று நினைத்திருந்தேன்...முடியவில்லை..அதனாலென்ன?
***** நாளை விடியாமலா போய்விடும்? *****
கோட்டாறு எட்டுக்கடை பஜாரில் இருக்கிறது இந்த " ருசி உணவகம் " .
ரிமிஸா பீவி என்ற முஸ்லிம் பெண் நடத்துகிறார். கணவர் அமீர் பாபு. காக்கா வலிப்பு நோயாளி.ரிமிஸா பீவிக்கு ஒரு ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள். மகன் அலிஜானிஷா +2 படிக்கிறான். மகள் அலி அம்ஸிரா +1 படிக்கிறாள். கணவரைக் காப்பாற்றவும் குழந்தைகளை படிக்க வைக்கவும் ரிமிஸா பீவி அதிகாலை முதல் இரவு வரை இந்த உணவகத்தில் நெருப்பாக எரிகிறார். லீவு நாட்களில் மகன் உதவி ஒத்தாசை செய்கிறான். வீட்டுக்குள் பெண்கள் முடங்கிக் கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தில் ரிமிசா பீவியின் வீட்டுக்கு வெளியேயான உழைப்பு நம்மை வியக்க வைக்கிறது.
மிக முக்கிய விஷயம் ....
இவரது உணவகத்தில் உணவு உண்பவர்கள் பெரும்பாலும் மாற்றுமத சகோதர சகோதரிகள்.
முஸ்லிம் சமூகத்து மக்களால் இவருக்கு எந்த பிரயோஜனமும் இல்லை...
இவரது மகன் அலி ஜானிஷாவிடம் நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடுத்தால் மேற்படிப்புக்கு உரியவர்களிடம் கூறி உதவி செய்வதாகக் கூறி இருக்கிறேன்..இன்ஷா அல்லாஹ்.
மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்றே போட வேண்டும் என்று நினைத்திருந்தேன்...முடியவில்லை..அதனாலென்ன? ***** நாளை விடியாமலா போய்விடும்? ***** கோட்டாறு எட்டுக்கடை பஜாரில் இருக்கிறது இந்த " ருசி உணவகம் " . ரிமிஸா பீவி என்ற முஸ்லிம் பெண் நடத்துகிறார். கணவர் அமீர் பாபு. காக்கா வலிப்பு நோயாளி.ரிமிஸா பீவிக்கு ஒரு ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள். மகன் அலிஜானிஷா +2 படிக்கிறான். மகள் அலி அம்ஸிரா +1 படிக்கிறாள். கணவரைக் காப்பாற்றவும் குழந்தைகளை படிக்க வைக்கவும் ரிமிஸா பீவி அதிகாலை முதல் இரவு வரை இந்த உணவகத்தில் நெருப்பாக எரிகிறார். லீவு நாட்களில் மகன் உதவி ஒத்தாசை செய்கிறான். வீட்டுக்குள் பெண்கள் முடங்கிக் கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தில் ரிமிசா பீவியின் வீட்டுக்கு வெளியேயான உழைப்பு நம்மை வியக்க வைக்கிறது. மிக முக்கிய விஷயம் .... இவரது உணவகத்தில் உணவு உண்பவர்கள் பெரும்பாலும் மாற்றுமத சகோதர சகோதரிகள். முஸ்லிம் சமூகத்து மக்களால் இவருக்கு எந்த பிரயோஜனமும் இல்லை... இவரது மகன் அலி ஜானிஷாவிடம் நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடுத்தால் மேற்படிப்புக்கு உரியவர்களிடம் கூறி உதவி செய்வதாகக் கூறி இருக்கிறேன்..இன்ஷா அல்லாஹ்.
Abu Haashima Vaver
நன்றி - Bro Abu Haashima Vaver
Wednesday, March 6, 2013
எழுதுவது நான் படிப்பது ஒருவன்
நான் ஒரு புத்தகம் எழுதுகின்றேன் பக்கங்கள் புரள்கின்றன.
புரள்வது நிற்கும் அது என் மூச்சு நிற்கும்போது.
அதனை நானும் படிக்க முடியாது நீங்களும் படிக்க மாட்டீர்கள் .
படித்து அதற்கு உரிய தண்டனையோ அன்பளிப்போ கொடுக்க ஒருவன் உறுதியாக உண்டு .
இது உங்கள் நினைவுக்கும் எனது அறிமுகமாக. முன்னுரையாக

Tuesday, March 5, 2013
நல்ல வாசகன் படைப்பாளி ஆகலாம்
இலக்கியப் பங்களிப்புக்காக இந்த ஆண்டு சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் பெற்றவர் மூத்த தமிழ் எழுத்தாளர்
ஜமாலுதின் முகமது சாலி.
சிங்கப்பூரிலும் தமிழகம் உட்பட பல நாடுகளிலும் ஏராள விருதுகளும் சிறப்புகளும் பெற்றிருக்கும் அனுபவமிக்க ஊடகத் துறையாளருமான திரு ஜே.எம்.சாலி தமது இலக்கியப் பணிகள், பார்வைகள், திட்டங்கள் குறித்து தமிழ் முரசுடன் பகிர்ந்து கொள்கிறார்.
“எழுத்து மூலம் சமூக மாற்றங்களைச் செய்யலாம்” என நம்பும் நீங்கள் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் என்ன?
நாட்டு நடப்பையும் சமூக யதார்த்தங்களையும் பதிவு செய்யும் எனது எழுத்துகளின் மூலம் சிங்கப்பூரர்களின் மனோபாவத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன் என்று உறுதியாகச் சொல்வேன். பல நிகழ்வுககளை எடுத்துக் காட்டலாம்.
சிங்கப்பூருக்கு வேலை தேடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சீனப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வை ‘அலைகள் பேசுகின்றன’ என்ற நூலில் பதிவு செய்துள்ளேன். இனம் மாறி திருமணம் செய்து கொள்வது குறித்த மனோபாவம் காலப்போக்கில் மாற்றியுள்ளதாக நம்புகிறேன்.
”நல்ல வாசகர்கள் எழுத்தாளராகலாம். இது எனது அனுபவம். எனது பள்ளிப் பருவத்திலேயே நிறைய வாசிக்கத் தொடங்கினேன். நிறைய எழுதத் தொடங்கினேன். எனக்கு ஆதரவும் கிடைத்தது. சமூகமும் ஊடகங்களும் என்னை உற்சாகமூட்டின.
நிறைய வாசிக்கத் தூண்டுவதே எழுத்தாளர்களை உருவாக்குவதன் முதற் கட்டம். வாசிக்க, வாசிக்க அவர்களுக்கே எழுதும் ஆர்வம் ஏற்படும். எழுத்தாளர், இலக்கியவாதி எவரும் பிறப்பிலேயே உருவாகுவதில்லை. அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.”
- ஜே.எம். சாலி
கலாசாரப் பதக்கம் பெற்ற எழுத்தாளராக உங்களது அடுத்த இலக்கியப் பங்களிப்பு என்ன? அரசாங்கம் வழங்கும் $80,000 மானியத் தொகையில் எத்தகைய பணிகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்?
எனது வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்த தமிழவேள் கோ.சாரங்கபாணியுடன் வேலை செய்த அனுபவங்கள் பற்றி விரிவான ஆய்வு கட்டுரையை எழுதவுள்ளேன். அத்துடன் சிங்கப்பூரின் நலனுக்காகப் பாடுபட்ட முன்னோடிகளாகிய அமரர் கோவிந்தசாமி பிள்ளை, பக்கிரிசாமி பிள்ளை, யூசோஃப் இஷாக் போன்றவர்களைப் பற்றியும் ஆய்வு கட்டுரைகளை எழுதவுள்ளேன். அடுத்த தலைமுறையினருக்கு நமது நாட்டின் முன்னோடிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியது எழுத்தாளர்களின் கடமைகளில் ஒன்று.

மனது பட்டை தீட்டப்பட உளியை நாடுகின்றேன்
மனது பட்டை தீட்டப்பட உளியை நாடுகின்றேன்
உளி நீயாக இருக்க தேய்க்குமிடமாக நான் இருப்பேன்
செதுக்கிய இடம் செழுமையடைத்து சிறப்படையும்
தீட்டப்பட மனது ஒளி விடுமென்ற நம்பிக்கையாக இருப்பேன்
தீட்டும் வேகத்தில் ஒளிச் சிதருவதுபோல் தவறுகள் தெறித்து சிதறட்டும்
ஒரு சில நாட்கள் இறைச் சிந்தனை இருந்து மறைவது
ஒரு சில நாட்கள் கெட்ட சிந்தனை பழக்கம் நிறுத்தி வைப்பதாகிவிடும்
தொடரும் இறை வணக்கம் தொடர வைக்கும் நற்பண்புகள்
தொடர்ந்த முயற்சி வாழ்வின் வெற்றியின் நடைபாதை
நெஞ்சில் உருவாகும் கருத்துகள் உயர்வாக இருக்கட்டும்
உருவாகும் கருத்துகள் உயர்வடைய வழி காணட்டும்
கருமேகம் கடலை நோக்கி ஓடி நீரைக் கொட்ட
கொட்டிய நீரும் கடல் நீரோடு கசந்து போகும்
கார் மேகம் காதல் கொண்டு ஒன்றோடு ஒன்று தொடர
காற்றின் குளிர் மேகத்தை சூழ அடைமழையாய் கொட்டும்
மழை கொட்டிய காய்ந்த இடம் குளிர்ச்சியடைய
காதலர்களுக்கு சூடேற்றம் கொண்டது செடிகள் வளர்ந்தன

Sunday, March 3, 2013
Saturday, March 2, 2013
நெஞ்சம் பொறுக்குதில்லையே
மனம் ஒன்று இருந்தால் அது மணக்கும்
மனம் ஒன்றும் அறியா நிலையில் அசைபோடும்
வாயில் கிடைத்ததை அரைப்பதை அறியாது அசைபோடும்
வாயில் நின்றோன் வஞ்சகம் செய்வான் என்ற சித்தனை இருக்காது
நெஞ்சம் ஒன்று இருந்தால் அது நெருடும்
நெருடாத நெஞ்சம் படைத்தோன் நஞ்சம் மனதில் கொண்டான்
நெஞ்சத்தில் நஞ்சை பாய்ச்சினான்
நெஞ்சம் பொறுக்குதில்லையே படம் பார்த்த மனித நெஞ்சம்
பற்று அற்ற பாசம் போன பாவியின் குணம்
கொள்கை வெறியற்ற விசமிகளின் போர்க் கோலம்
மக்களின் நன்மைகள் அறியா நயவஞ்சகனின் நாசக வேலை
குற்ற மற்ற குழந்தையை கொல்லும் குணமாக மாறிப்போனது

Friday, March 1, 2013
வெட்டிப் பேச்சை நிறுத்து!
வெட்டியாய் சுற்றாமாலிருக்க வேலை கொடு
வேலை செய்பதற்கும் ஒரு தகுதி வேண்டும்
வேலை செய்யும் தகுதியை சொல்லிக் கொடு
தகுதியே வேண்டாம் கட்சியில் சேர்ந்து விடு
தகுதி இல்லாமல் சேர்ந்தால் வேலை கிடைக்குமா
எந்த கட்சியில் சேர்வது வேலை கிடைக்க
எந்த கட்சி ஆள்கிறதோ அந்த கட்சியில் சேர்ந்து விடு
அந்த கட்சியில் சேர யாரை அணுக வேண்டும்
அந்த தொகுதி கட்சி பெரியவரை அணுகி விடு
அவரை அணுக பணம் கேட்பாரோ
அவர் பணம் கேட்டால் கொடுத்து விடு
கட்சியில் சேர்வதற்கே பணம் கொடுக்க வேண்டுமா
கட்சியில் சேர்ந்து உயர் பதவி அடைய கேட்பதை கொடு
கட்சியில் சேர்ந்து ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவது அவசியமா
கட்சியில் சேராமலேயே மேல் அதிகாரிக்கு கொடுக்க வேண்டியதை கொடுப்பேன்
வெட்டியாய் சுற்றும் வேலையும் குறையும்
வெட்டியாய் உன் பேச்சுக்கும் பதில் பேசுவது குறையும்
கையேந்தி கடன் பட்டாவது காரியத்தை முடிப்பேன்
கையில் கொஞ்சம் கொண்டுவந்து பேசு!
இப்பொழுது வெட்டிப் பேச்சை நிறுத்து .
Subscribe to:
Posts (Atom)