Showing posts with label ஜப்பான். Show all posts
Showing posts with label ஜப்பான். Show all posts

Saturday, May 25, 2013

பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி-4 >ஜப்பான் )



நடந்த நிகழ்வு
நான் ஜப்பான் சென்றிருந்தபோது ஒரு டேக்சியில் டோக்கியோ டவர் பார்க்கச் சென்றேன் . பிரயானதிர்க்கான டேக்சி மீட்டர் தொகையை கொடுத்தேன் .டேக்சி ஓட்டுனர் பாதித் தொகையை திருப்பித் தந்தார் . அவர் தவறுதலாக வழியை மாற்றி வந்து விட்டதால் 'உண்மையாக டோக்கியோ டவர் வர எவ்வளவு ஆகுமோ அது போதும்' என்பதாக சொன்னார்.
இந்த நேர்மை நம் தமிழ்நாட்டிலும் வர வேண்டுமென அப்பொழுதே விரும்பினேன்

 

 படத்தில் ஜப்பானிய பெண் பக்கம் நான் .(ஆடாத ஆட்டமென்ன )இப்படத்தை படத்தில் அமெரிக்கர் படம் எடுத்து அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைத்து என்னையும் அமெரிக்கா வர அழைப்பு கொடுத்தார்



பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி -3). நான் பல நாடுகள் பார்த்து வர சுற்றுலா சென்றபோது பாரிசிலிருந்து ...

Oct 18, 2012
பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி-2). ஹாங்காங் விமான ஒடும்பாதும் பாதை மிகவும் குறைவான தூரம். உலகில் ...
Sep 15, 2012
பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! சென்னையிலிருந்து பாரிஸ் நகரத்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது ...

Sunday, March 17, 2013

அகிம்சையின் அடித்தளம் இலங்கையில் ஆட்டம் போடுகின்றது

அகிம்சையை வளர்த்தவர் புத்தர் ,ஆனால் புத்தர் பெயருக்கு களங்கம் உண்டாக்கி சில புத்த பிட்சுக்கள் இலங்கையில் தோன்றி தன்னை விளம்பரம் செய்துக் கொள்ள அழகிய நாட்டையே அழிக்க திட்டம் தீட்டுவது தங்களுக்கே தெரியாமல் செயல்படுகின்றார்கள் .

நான் ஜப்பான் பிரயாணம் மேற்கொண்டிருந்தபோது ஒரு ஜப்பானிய பெண்மணி எனக்கு வழிகாட்டியாக கியாட்டோ புத்த கோவிலை சுற்றிக் காண்பித்து விளக்கம் தந்து கொண்டிருந்தார். புத்த மதத்தில் மாமிசம் சாப்பிடக் கூடாதே நீங்கள் இங்கு சாப்பிடுகிண்றீர்களே என்றேன் .அவர் அதற்கு பதில் சொல்லாமல் அருமையான புன்னகை பூத்தார். மார்க்கம் வந்தது ஆனால் மார்க்கத்தின் வழி முறைகள் அவர்களுக்கு தெரியாமல் இருந்தாலும் மனிதாபிமானத்துடன் ஜப்பானிய மக்கள் வாழ்கின்றார்கள் .அதற்கு நேர் எதிர் மறையாக் புத்த மத ஆடைகளை மட்டும் போட்டுக் கொண்டு இலங்கை வாழ புத்த பிட்சுக்கள் பலர் புத்த மதத்தின் பெயருக்கே களங்கம் விளைவிகின்றார்கள்.

Sunday, December 2, 2012

செயலில் ஜப்பான் - Active Japan

 ஜப்பான் - தமிழ் விக்கிப்பீடியா

பகுப்பு:ஜப்பான் - தமிழ் விக்கிப்பீடியா

ஜப்பான் மொழியின் மூலம் தமிழ் மொழி?

"He who does not travel does not know the value of men." -- Moorish proverb

"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Tzu

"Travel and change of place impart new vigor to the mind." -- Seneca

"A wise traveler never despises his own country." -- Carlo Goldoni

You cannot change the circumstances, the seasons , or the wind, but you can change yourself. That is something you have charge of." Jim Rohn

"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Thu


S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Monday, November 5, 2012

ஜப்பானைப் பார்


by முனைவர் அ.இரபியுதீன்.


 ஜப்பானில் உள்ள  கோபே நகரில் மாணிக்கப் பொருட்காட்சி நடந்தது. எங்கள்  "செலக்டிவ் ஜெம் அவுஸ்" அந்தப்  பொருட்காட்சியில்   கலந்து கொண்டது. நானும் போயிருந்தேன்.
 நான் ஜப்பானுக்குப் போவது இது முதல் முறை அல்ல. பல முறை ஏற்கனவே போயிருக்கிறேன். ஆனால் இப்பொழுதுதான் ஜப்பானை சுற்றிப் பார்க்க - ஜப்பானிய மக்களுடன் நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைத்தது.
 ஜப்பானைப் பார்த்துத் திகைத்துப் பொய் விட்டேன் ! இரண்டாவது  உலகப்போரில் அடியோடு அழிந்து போன நாடு,ஜப்பான். உலகின் முதல் அணுகுண்டு ஜப்பானில்தான் விழுந்து, பேரழிவை ஏற்படுத்தியது. அடியோடு அடிமன் வேரோடு அழிந்து போன ஜப்பான், இன்று துளிர்த்து, தழைத்து, கிளைத்து, விழுதுகள் விட்டு, வின் முட்டும் அளவுக்கு வளர்ந்து நிற்பதைப் பார்க்க, எனக்கு வியப்பாக இருந்தது.
 அழிவு ஏற்பட்டு அரை நூற்றாண்டுதான் ஆகிறது. அதற்குள் ஜப்பான் எப்படி எழுந்து நிற்கிறது! எப்படி வளர்ச்சியில் அமெரிக்காவுக்கு ஈடாக விளங்குகிறது ! அறிவியல் வளர்ச்சியில் அமெரிக்காவையும் மிஞ்சிவிட்டது! குறிப்பாகத் தொலைத் தொடர்பு இயலில் இன்று ஜப்பான்தான் ஏ ஒன்!
 ஜப்பானியர்களும் என்னமாக வளர்ச்சி அடைந்து விட்டார்கள் ! பொதுவாக ஜப்பானியர்களை "குள்ளர்கள் " என்று கூறுவோம். இன்று அவர்களை நிமிர்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது!
 இந்த வளர்ச்சி எப்படி ஏற்பட்டது ?

Saturday, March 12, 2011

சுனாமி படங்கள் ! ஜப்பான் நல்ல நிலை அடைய நாம் பிரார்த்திப்போம்.-

  ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையினால் மக்கள் படும் அவதிகள் உலக மக்கள் அனைவர்க்கும் மிகவும் வேதனை தந்துள்ளது . அவர்களுக்காக  நமது ஆதரவு தருவதுடன் பிரார்த்தனையும் செய்வோம் .
இப்படியும் நடக்குமா! இதற்கு மாற்று வழி என்ன? சிந்தனை செய்வோம் ! போரிட்டு  அழியும் மக்கள் (நாடுகள்) நல்ல  வழிக்கு திரும்பி வர வேண்டுவோம்.  இறைவன் நமக்கு அவ்வப்பொழுது  நமக்கு இப்படி பாடம் புகட்டியும் நாம் மாறாமல் மற்றவர் வாழ்வில் விளையாடி அழிவினை உண்டாகுவது ஏன் ?
  உலக யுத்தத்தில் அழிந்த ஜப்பானியர்கள் மிகவும் பலர் .அதன் பிறகு நல்ல நோக்குடன் வெகு வேகமாக முன்னேற்றம் அடைந்தது .பின்பு தன் கொள்கைதனை மாற்றி மக்களுக்கு சேவை செய்யும் கொள்கையுடன் பல நாடுகளுக்கு உதவி செய்வதில் முன் நிற்கின்றது . எந்த நாட்டுடனும் போரில் சேராமல் இருந்து உலக மக்கள் மனதில் நல்ல மதிப்பினை பெற்று வருகின்றது. சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படும் ஜப்பான் 6,800 தீவுகளைக் .கொண்டது. கல்வியில் 100% முழமையான முன்னேற்றம் உடையது. அது திரும்பவும் நல்ல நிலை அடைய நாம் பிரார்த்திப்போம் .