Sunday, March 10, 2013

திருடுவது போல் நல்ல பதிவாக போடுவது உங்கள் தவறு

பதிவுத் திருடர்களை என்ன செய்யலாம் ?
அண்மையில் 'தமிழ்மணத்தில்' பார்த்து, அமலன் என்பவரது 'கடகம்' வலைத்தளத்தில் நுழைந்தேன்.

சுயமாக எழுதத் தெரியாவிட்டால் ஏன் பதிவெழுதவேண்டும் ? இல்லாவிட்டால் பதிவின் சொந்தக்காரரிடம் அனுமதியைப் பெற்று தன் வலைத்தளங்களில் இடலாமே ? ஒவ்வொரு எழுத்தாளரும், பதிவர்களும் தங்கள் பெறுமதி வாய்ந்த நேரத்தைச் செலவுபண்ணி , தங்கள் திறமைகளைக் கொண்டு ஒரு குழந்தையைப் போல ஆக்கங்களைப் பிரசவிக்கையில் அவற்றைத் திருடிப் பதிவிடுவதைப் பார்க்கும் போது அது குறித்தான எனது வருத்தம் நியாயமானது தானே ?
-----------------------------------------
நாமக்கல் சிபி said...

    //(திருடுவது போல் நல்ல பதிவாக போடுவது உங்கள் தவறு)//

------------------------------------------------------------------------

sury said...

    எனது பதிவு
    ரசித்துப் படித்த வலைப்பதிவுகளுக்கு வந்து
    தஞ்சை டிகிரி காபி எப்படி போடுவது என்று கேட்டவருக்கு
    எங்கள் வீட்டுக்கு வாருங்கள், காபி சாப்பிட வாருங்கள்
    என்று அழைப்பு விடுக்க வந்தால் !? இங்கே திடுக்கிட்டேன்.

    உங்கள் பதிவிலிருந்து பல பதிவுகள் திருட்டுபோய்விட்டன‌
    என வருத்தத்துடன் இருக்கிறீர்கள்.
    ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்.

    முல்லா நசிருதீன் கதைகளில் ஒன்று:
    அவர் வீட்டில்
    அடிக்கடி திருட்டு போய்க்கொண்டே இருந்தது.
    திருடனைக் கண்டிப்பாக பிடித்தே ஆகிவிடவேண்டும் என்று
    ஒரு நாள்
    ஒளிந்து கொண்டு திருடன் வரும் நேரம் காத்திருந்தார்.
    திருடனும் வந்தான்.
    திருடினான்.
    திரும்பிச்சென்றான். முல்லாவும் அவன் பின்னாலேயே சென்றார்.
    திருடன் தன் வீடு சென்று
    திருடிய பொருட்கள் யாவையும் அழகாக அடுக்கி வைத்தான்.
    திடீரென ஒரு இருமல் சத்தம் !
    திரும்பிப் பார்த்தான்.
    திடுக்கிட்டான். முதியவர் ஒருவர்! அவனுக்குத்தெரியவில்லை
    திருடிய வீட்டின் சொந்தக்காரர் இவர் தான் என.

    யார் நீ ? இங்கு ஏன் வந்தாய் ? எனக் கேட்டான்.
    யார் நீ என நான் அல்லவா கேட்கவேண்டும் ? என்றார் முல்லா நசிருதீன்.

    திருடனுக்கு ஒரே குழப்பம்.
    வெளியோ போ !என்றான்.
    வெளியோ போ ! என்றார் அவர்.
    இது என் வீடு என்றான் அவன்.
    இதில் இருக்குமெல்லாம் என்னுடையவை எனும்போது
    இது உன் வீடும் ஆகுமோ என்றார் முல்லா.

    திருடனுக்கு தேள் கொட்டியது போல் வியர்த்தது.
    திகைத்தான் செய்வதறியாது திணறினான். வார்த்தை வரவில்லை.

    ஒன்று செய். உன்னை மன்னித்து விடுகிறேன் என்றார் முல்லா.
    இன்று முதல் நீ என் வீட்டுக்குச் சென்று விடு. நான் இங்கு இருப்பேனினி.
    நன்றாகப் போயிற்று. நானும் வேறு வீட்டுக்குச் செல்லலா
    மென்று தான் இருந்தேன். வாடகை
    யின்றி என் பொருட்களனைத்துமிங்கே கொணர்ந்திட்டாய்.
    நன்றி.
    வந்தனம் என்றார்.
    வாழ்க வளமுடன் எனவும் ஆசி வழங்கினார்.

    சுப்பு தாத்தா.
    தஞ்சை.
    http://vazhvuneri.blogspot.com
------------------------------
 எம்.ரிஷான் ஷெரீப்  அவர்களிடம் முன்பே அனுமதி பெற்றுள்ளேன் .
நான் படித்ததில் சில . நீங்களும் படியுங்கள்.
தலைப்பு நான் கொடுத்தது .
அதில் உள்ள தலைப்பு
பதிவுத் திருடர்களை என்ன செய்யலாம் ?

http://rishanshareef.blogspot.in/2008/07/blog-post.html
------------------------------------------------------------
இதனையும் படியுங்கள்
அறிவைப் பகிர்ந்து கொள்வதும் திருட்டாகி விடுமோ!


எழுத்துகளுக்கோ கருத்துகளுக்கோ காப்புரிமை கொண்டாடாத...

1 comment:

தி.தமிழ் இளங்கோ said...

எனது பதிவுகளையும் திருடினார்கள். திருடிக் கொண்டும் இருக்கிறார்கள். “எனது பதிவை காப்பி அடித்த பதிவர்” என்ற
( http://tthamizhelango.blogspot.com/2012/10/blog-post_20.html ) பதிவை Saturday, 20 October 2012 எழுதி இருந்தேன். ஆனாலும் இன்னும் சிலர் திருடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது-அதைச்
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
- பாடல்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- (படம்: திருடாதே )

வலையுலகில் எங்கே சட்டம் இருக்கிறது? அவர்களாய்ப் பார்த்து திருந்தினால்தான் உண்டு.