Sunday, March 31, 2013

கவிஞர் அஸ்மின்

கவிஞர் அஸ்மின்
    வசந்தம் TVயில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரியும் கவிஞர் அஸ்மின் ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும்,திரைப்பட பாடலாசிரியராகவும், அறியப்பட்டு வருகின்றார். விடை தேடும் வினாக்கள்(2002) விடியலின் ராகங்கள்(2003)ஆகிய கவிதை நூல்களின் ஆசிரியரான இவர் 'ரத்தம் இல்லாத யுத்தம்' கவிதை நூலை மிக விரைவில் வெளியிட இருக்கின்றார்சக்திTVயினால் நடாத்தப்பட்ட'இசை இளவரசர்கள்'போட்டி நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர்,தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு ஜனாதிபதி விருது(2001),பேராதனை பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம் (2003) பெற்றுள்ளதோடு 2 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010,2011) ,அகஸ்தியர் விருது (2011), உட்பட 10க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது இலக்கிய பணியை பாராட்டி 'தடாகம்' கலை இலக்கிய அமைப்பு ''கலைத்தீபம்'' என்ற பட்டத்தினையும் 'லக்ஸ்டோ' ஊடக அமைப்பு ''கலைமுத்து'' என்ற பட்டத்தினையும் அண்மையில் வழங்கி கௌரவித்துள்ளன. சுபாசெவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ''பனைமரக்காடு'' தமிழ் திரைப்படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் இவர் ஜீவா சங்கரின் இயக்கத்தில் விஜய் அன்டனியின் நடிப்பில் வெளிவரவுள்ள ''நான்'' திரைப்படத்தில் இசையமைப்பாளர் விஜய் அன்டனியின் இசையில் பாடல் எழுதியுள்ளார்

கவிஞர் அஸ்மின் blogs

  கவிஞர் அஸ்மின் பாடல்கள்
  

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறந்த தளம்... தொடர்ந்து செல்வதுண்டு... அஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...