மனம் ஒன்று இருந்தால் அது மணக்கும்
மனம் ஒன்றும் அறியா நிலையில் அசைபோடும்
வாயில் கிடைத்ததை அரைப்பதை அறியாது அசைபோடும்
வாயில் நின்றோன் வஞ்சகம் செய்வான் என்ற சித்தனை இருக்காது
நெஞ்சம் ஒன்று இருந்தால் அது நெருடும்
நெருடாத நெஞ்சம் படைத்தோன் நஞ்சம் மனதில் கொண்டான்
நெஞ்சத்தில் நஞ்சை பாய்ச்சினான்
நெஞ்சம் பொறுக்குதில்லையே படம் பார்த்த மனித நெஞ்சம்
பற்று அற்ற பாசம் போன பாவியின் குணம்
கொள்கை வெறியற்ற விசமிகளின் போர்க் கோலம்
மக்களின் நன்மைகள் அறியா நயவஞ்சகனின் நாசக வேலை
குற்ற மற்ற குழந்தையை கொல்லும் குணமாக மாறிப்போனது
No comments:
Post a Comment