Friday, March 15, 2013

இன்று ஒரு துண்டுப் பிரசுரம் எனக்குக் கிடைத்தது. அதில் சமுதாயத்தில் சிலரை குறைகூறி எழுதப்பட்டிருந்தது. ஆனால்..


ஒரு துண்டுப் பிரசுரம் குறைகூறி எழுதப்பட்டிருந்தது. நோட்டீஸ் போட்டவர் பெயரோ அச்சகத்தின் பெயரோ பிரசுரத்தில் இல்லை. யார் போட்டார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் சந்தேகத்தோடு பார்க்கும் கேவலமான நிலை.
**************

பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகள் இதுபோன்ற பாவங்களைச் செய்யுமா?

****************

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல ... சிலர் பார்வைக்கு இவனாக இருக்குமோ... அவனாக இருக்குமோ என்ற சந்தேகத்தை இதுபோன்ற " மொட்டை " நோட்டீஸ்கள் ஏற்படுத்துகின்றன.

****************

மொட்டைக் கடிதம் , மொட்டை நோட்டீஸ் போன்றவை சமுதாயத்தைக் கொல்லும் நச்சுக் கிருமிகள். இப்படி " மொட்டை " போடுகின்றவர்கள் " டெங்கு " கொசுவை விட ஆபத்தானவர்கள். அதுகூட ஒன்றிரண்டு பேரைத்தான் கொல்லும். இது சமுதாயத்தையே கொல்லும்.

****************

தாங்கள் சொல்லும் செய்தி உண்மையாக இருக்குமானால் அதை தைரியமாக தங்கள் பெயரைப் போட்டு நோட்டீஸ் போடுங்கள். அது ஆண்மை. பெயர் போடாமல் நீங்கள் என்னதான் உண்மைச் செய்தி போட்டாலும் அதுக்கு மதிப்பில்லை.
**************

சமுதாயம் குறித்த கவலை உங்களுக்கு இருக்கிறதா? நோட்டீஸ் கூட வேண்டாம்.. உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். அதைப் பற்றிய ஆரோக்கியமான விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் தரும் தகவல் தவறாக இருந்தாலும் கூட பிரச்சினை இல்லை. சுய முகத்தோடு வாருங்கள்.


**************

முக்கியமாக....

சமுதாயம் குறித்த சில நிறை குறைகள் எல்லா ஜமாத்துகளிலும் இருக்கின்றன.

***************

மக்களுக்கு...

இதுபோன்ற மொட்டைகள் வந்தால் அதை அலட்சியப் படுத்துங்கள். மரியாதைக் கொடுக்காதீர்கள்.

****************

நண்பர்களுக்கு ....

இந்த " வைரஸ் " இருக்கிறது. இது ஏராளமான குடும்பங்களையும் நாசமாக்கி இருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்போம்..இன்ஷா அல்லாஹ்.

Abu Haashima Vaver


Abu Haashima Vaver
குறிப்பு :இது கட்டுரையின் ஒரு பகுதி

No comments: