Sunday, March 31, 2013

இன்று ஒரு வாகன விபத்தில் சிக்கினேன்.-அன்புடன் புகாரி

இன்று ஒரு வாகன விபத்தில் சிக்கினேன். நாளை அலுவலகம் செல்ல வாகனம் இல்லாமல் நிற்கிறேன். பலத்த சேதம் என் ஹோண்டா ஒடிசிக்கு. தங்கமாய் வைத்திருந்த வேன் தகரமாகிவிட்டது. நல்லவேளையாய் உயிர் பிழைத்தேன். அது மட்டுமல்ல எவரையும் கொன்றுவிடவும் இல்லை காயம் ஏற்படுத்தவும் இல்லை. ஆனால் அந்த அடுத்தவரின் கார் பிறண்டு நின்று அதனுள் கணவனும் மனைவியும் அகப்பட்டுக்கொண்டு வெளிவர முடியாமல் இருந்த போது. நான் 911 அழைத்துக் கதறினேன். வித்தியாசமான அனுபவம். வாழ்வில் முதல் சாலை விபத்து. எப்படியோ உயிர்கள் தப்பித்தன. வாகனங்கள் முடிந்துபோயின. ஆச்சரியமான விபத்து. கழுத்து அப்படியே வலிக்கத் தொடங்கியதால் வலிநிவாரண மாத்திரைகள் இட்டுக்கொண்டு உறங்கப் போகிறேன். இறைவனுக்கு நன்றி சொன்னேன்.

விபத்தில் நான் மாண்டிருந்தால் கவலையே இல்லை. ஆனால் எவருக்காவது சேதம் ஏற்பட்டிருந்தால் நான் உயிர் வாழும் ஒவ்வொரு நொடியும் செத்துப்போயிருப்பேன்.

நான் கனடாவில் வாழ்கிறேன். நாங்கள் இப்போதும் மார்ச் 31 தான் இருக்கிறோம். நான் ஏப்ரல் விளையாட்டில் ஈடுபடுவதில்லை.
குளிர் நாடு என்பதால் இங்கே மோட்டார் பைக் பயன்படுத்துவது கிடையாது. பேருந்தில் நாளை செல்லலாம் என்றுதான் திட்டமிட்டுள்ளேன்.

உண்மை. அப்படியே தொழுகையில் அமர்ந்து இறைவனுக்கு நன்றி கூறினேன் - நான் உயிரோடு இருக்கிறேன் என்பதற்காக என்பதைவிட நான் யாரையும் விபத்தில் சாகடித்துவிடவில்லை என்பதற்காக. கொஞ்சம் மோசமான விபத்துதான். இதுதான் எனக்கு முதல் முறை. உங்கள் ஆறுதல் சொற்களுக்கு என் பல்லாயிரம் நன்றிகள்

அன்புடன் புகாரி
===========-------------------------------------------------------
Mohamed Ali
அல்லாஹ் பாதுகாப்பான் .
"அப்படியே தொழுகையில் அமர்ந்து இறைவனுக்கு நன்றி கூறினேன் - நான் உயிரோடு இருக்கிறேன் என்பதற்காக என்பதைவிட நான் யாரையும் விபத்தில் சாகடித்துவிடவில்லை என்பதற்காக." நல்ல உள்ளம் படைத்தவர்கள் நெடுநாள் வாழ்ந்து சேவை செய்வதற்கு அல்லாஹ் பாதுகாப்பான்
அவன் நினைக்காமல் நம் உயிர் போகாது .நாம் விரும்பினாலும் போகாது . கொடுப்பதும்
எடுப்பதும் அவனே .இத்தகைய நிகழ்வுகள் நம் மனதை நம் மனதை உறுதிப்படுத்தும் மற்றும் இறைவன் மீது அதிகமான நேசம் ஏற்படும். இது கருத்துரை அல்ல ஆழ் மனதில் தோன்றும் அன்பின் வெளிப்பாடு .
இருளுக்குப் பின் ஒளி உண்டு
94:5 فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
94:5. ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
94:6 إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
94:6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
94:7 فَإِذَا فَرَغْتَ فَانصَبْ
94:7. எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
94:8 وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب
94:8. மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.

குர் ஆன் 110:1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
குர் ஆன் 110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக

2 comments:

mohamed sultan said...

மருத்துவரிடம் சென்று முறையான ஆலோசனை பெறுங்கள். நண்பர்களின் அனுபவத்திலிருந்து பெற்றது. பின்னாளில் வேறு பல தொல்லைகளிலிருந்து விடுபட இந்நாளில் முறையான மருத்துவ ஆலோசனை மிக அவசியமானது.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் கவனமாக இருக்க வேண்டுகிறேன்...

LinkWithin

Related Posts with Thumbnails