Saturday, March 9, 2013

ரிமிஸா பீவியின் " ருசி உணவகம் " .


மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்றே போட வேண்டும் என்று நினைத்திருந்தேன்...முடியவில்லை..அதனாலென்ன?

***** நாளை விடியாமலா போய்விடும்? *****

கோட்டாறு எட்டுக்கடை பஜாரில் இருக்கிறது இந்த " ருசி உணவகம் " .

ரிமிஸா பீவி என்ற முஸ்லிம் பெண் நடத்துகிறார். கணவர் அமீர் பாபு. காக்கா வலிப்பு நோயாளி.ரிமிஸா பீவிக்கு ஒரு ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள். மகன் அலிஜானிஷா +2 படிக்கிறான். மகள் அலி அம்ஸிரா +1 படிக்கிறாள். கணவரைக் காப்பாற்றவும் குழந்தைகளை படிக்க வைக்கவும் ரிமிஸா பீவி அதிகாலை முதல் இரவு வரை இந்த உணவகத்தில் நெருப்பாக எரிகிறார். லீவு நாட்களில் மகன் உதவி ஒத்தாசை செய்கிறான். வீட்டுக்குள் பெண்கள் முடங்கிக் கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தில் ரிமிசா பீவியின் வீட்டுக்கு வெளியேயான உழைப்பு நம்மை வியக்க வைக்கிறது.

மிக முக்கிய விஷயம் ....

இவரது உணவகத்தில் உணவு உண்பவர்கள் பெரும்பாலும் மாற்றுமத சகோதர சகோதரிகள்.

முஸ்லிம் சமூகத்து மக்களால் இவருக்கு எந்த பிரயோஜனமும் இல்லை...

இவரது மகன் அலி ஜானிஷாவிடம் நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடுத்தால் மேற்படிப்புக்கு உரியவர்களிடம் கூறி உதவி செய்வதாகக் கூறி இருக்கிறேன்..இன்ஷா அல்லாஹ்.
மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்றே போட வேண்டும் என்று நினைத்திருந்தேன்...முடியவில்லை..அதனாலென்ன? ***** நாளை விடியாமலா போய்விடும்? ***** கோட்டாறு எட்டுக்கடை பஜாரில் இருக்கிறது இந்த " ருசி உணவகம் " . ரிமிஸா பீவி என்ற முஸ்லிம் பெண் நடத்துகிறார். கணவர் அமீர் பாபு. காக்கா வலிப்பு நோயாளி.ரிமிஸா பீவிக்கு ஒரு ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள். மகன் அலிஜானிஷா +2 படிக்கிறான். மகள் அலி அம்ஸிரா +1 படிக்கிறாள். கணவரைக் காப்பாற்றவும் குழந்தைகளை படிக்க வைக்கவும் ரிமிஸா பீவி அதிகாலை முதல் இரவு வரை இந்த உணவகத்தில் நெருப்பாக எரிகிறார். லீவு நாட்களில் மகன் உதவி ஒத்தாசை செய்கிறான். வீட்டுக்குள் பெண்கள் முடங்கிக் கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தில் ரிமிசா பீவியின் வீட்டுக்கு வெளியேயான உழைப்பு நம்மை வியக்க வைக்கிறது.  மிக முக்கிய விஷயம் .... இவரது உணவகத்தில் உணவு உண்பவர்கள் பெரும்பாலும் மாற்றுமத சகோதர சகோதரிகள். முஸ்லிம் சமூகத்து மக்களால் இவருக்கு எந்த பிரயோஜனமும் இல்லை... இவரது மகன் அலி ஜானிஷாவிடம் நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடுத்தால் மேற்படிப்புக்கு உரியவர்களிடம் கூறி உதவி செய்வதாகக் கூறி இருக்கிறேன்..இன்ஷா அல்லாஹ்.

Abu Haashima Vaver

 நன்றி - Bro Abu Haashima Vaver

1 comment:

அஜீம்பாஷா said...

thanks for sharing, we will pray for her to succeed in her efforts to upbring her family to good position.
insha allah her kids will take care her and family in future (aamin)