உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ்க் கணினி கண்காட்சிக்காக 2 ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு, கண்காட்சிக் கூடமும், அரங்குகளும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இணையதள வசதியுடன் அமைக்கப்படும் 123 அரங்குகளிலும் மத்திய-மாநில அரசுகளின் துறை சார்ந்த இணையதளங்கள், தமிழ்ச் செய்தி மற்றும் பருவ இதழ்கள் இணையதளங்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ்க் கணினிகள், தமிழ் மின் கருவிகள், தமிழ் பல்லூடக மென்பொருள்கள், தமிழ் விக்கிபீடியா மற்றும் வலைப்பூக்கள் பயிற்சி அரங்குகள், முக்கிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
மத்திய அரசின் சார்பில் சி-டேக், இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், பன்னாட்டு நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், கூகுள், யாகூ நிறுவனங்களின் தமிழ் மென்பொருள் பயன்பாடுகள் நேரடி செயல் விளக்கம் மற்றும் எச்.சி.எல். டி.சி.எஸ். விப்ரோ போன்ற நிறுவனங்களின் நவீன மென்பொருள் தொழில்நுட்பச் செயல் விளக்க அரங்குகள் இடம்பெறுகின்றன. இந்திய மற்றும் தமிழகத்தின் முன்னணி தமிழ் மென்பொருள் நிறுவனங்கள் அனைத்தும் பங்கேற்கின்றன. யூனிகோட் தமிழ் எழுத்துருக்கள், அரசுத்துறையில் வளர்ந்துள்ள நவீன மென்பொருள்களில் தமிழ் எழுத்துக்களின் பயன்பாடுகள், விஷுவல் மீடியா துறையில் பயன்படுத்தப்படும் .
தமிழ் மென்பொருள்கள், தமிழ் எழுத்துக்களை ஒலியாக மாற்றும் நவீன எழுத்துருக்கள், நூலகங்களில் பார்வையற்றோர் தமிழ்ப் புத்தகங்கள் படிக்க உதவும் அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பம் இவைகளை பார்வையாளர்களுக்கு விளக்கும் செயல் அரங்குகள் இடம்பெறுகின்றன. கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில், யூனிகோட் தமிழ் மென்பொருள்கள் அடங்கிய சுமார் 1 லட்சம் சி.டி.க்கள் இலவசமாக விநியோகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதுதவிர கண்காட்சியில் பங்கேற்கும் பல நிறுவனங்கள், தங்கள் தமிழ் மென்பொருள்களின் இலவச சி.டி. பதிப்புகளை பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளன.
தமிழில் முன்னணியில் உள்ள செய்தி மற்றும் ஊடக இணையதளங்கள், இ-பேப்பர் முறைகள், யூனிகோட் தமிழில் சிறப்பாக செயல்படும் இணையதளங்கள் ஆகியவைகளின் அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. இத்தகவலை தமிழ் கணினி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் சொ. ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
Sourcehttp://www.inneram.com/201005308620/1-lakh-tamil-software-cds-free-for-wctcசெம்மொழி மாநாடு: 1 இலட்சம் தமிழ் மென்பொருள் சிடிகள் இலவசம்!
2 comments:
மிகவும் பயனுள்ள செய்தி.
இந்த செய்தி எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் தமிழ் மென்பொருள் ஆதிகம் இனி அதிக அளவில் இருக்கும் என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை.
நமது எதிர்காலம் பற்றி அறிய தமிழில் புதிய மென்பொருள் ஒன்று வந்துள்ளது, நான் அதை மிக பயனடைந்தேன். நீங்களும் அதன் மூலம் பயனடைய வேண்டும் என்பது என்னுடைய மேலான கருத்து. www.yourastrology.co.in
Post a Comment