Friday, May 7, 2010

உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபையில் அடுத்த மாதம் துவக்கம்

 
துபையின் இரண்டாவது  விமான நிலையமும், கார்கோவுக்கான உலகின் மிகப்பெரியதுமான விமான நிலையம் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக துபையின் தலைமை விமான நிலைய தலைமை அதிகாரி இன்று
தெரிவித்தார். அல்மக்தூம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்ட  இந்த விமான நிலையத்தில்  ஜூன் 27ம் தேதி முதல் சேவை தொடங்கும் என அவர் குறிப்பிட்டார். 
பிரயாணிகளுக்கான முனையம் இவ்வருட இறுதியில்  தயாராகும் என்றும் பிரயாணிகளுக்கான  சேவை 2011ஆம் ஆண்டின் காலிறுதியில் தொடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். 
6 ஓடுபாதைகளைக்  கொண்ட இந்த விமான நிலையத்தின்  பணிகள் அனைத்து முடிவுற்றபின்  120 மில்லியன் பயணிகளை கையாளும்  அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது  இதன் சிறப்பம்சம் ஆகும். 2007ஆம் ஆண்டு முதலே இதன்  ஓடுபாதைகள் தயாராகிவிட்டதாகவும்  2008 லிருந்தே இதன் சேவை தொடங்கவேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
நாங்கள் உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தை  மட்டுமல்ல, மிகச் சிறந்த விமான நிலையத்தை கட்டுவதாக  துபாய் விமான நிலைய தலைமை  அதிகாரி பவுல் க்ரிப்பித் பெருமிதத்துடன் கூறினார். 2030ம் ஆண்டில் துபாயின் இரு விமான நிலையங்கள் மூலம் மாத்திரம் 150 மில்லியன் பயணிகள் வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஏற்கனவே வளைகுடாவின்  பிஸியான விமான நிலையமான துபாய் விமான நிலையத்திலிருந்து  மக்தூம் விமான நிலையம் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்கிடையில் தன்னுடைய தற்போதைய விமான நிலையத்தில் உள்ள இரண்டாம் டெர்மினலை மேம்படுத்தும் முயற்சியிலும் துபாய் தீவிரமாக இறங்கியுள்ளது. இதில் தான் துபாயின் புதிய விமான நிலையமான ப்ளை துபாய் உள்ளது
Source : http://www.inneram.com/201005058215/al-makhdoom-international-airport-starts-service-from-june27

No comments: