Thursday, May 27, 2010

சாதிக்க அரசுப் பள்ளியும் ஒரு தடையல்ல!

மே 26  அன்று வெளியான எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக சாதனை புரிந்த ஜாஸ்மினைப் பார்த்து பலரது புருவமும் சற்றே உயர்ந்தன. காரணம் அவர் படித்த பள்ளி. திருநெல்வேலி மாவட்டம் டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்த ஜாஸ்மின் மாநில அளவில் முதலிடம் பெற்று தனது பள்ளிக்கும், பள்ளியின் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

தமிழக மக்கள் மனதில் இன்று வரை பதிந்து விட்ட ஒரு செய்தி. மாநில அளவிலோ,மாவட்ட அளவிலோ  சாதிக்க வேண்டுமானால் புகழ்பெற்ற தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்தாலே அது முடியும் என்பது. அதை மாற்றி புதிய சரித்திரம் படைத்துள்ளார் தெரு தெருவாக ஜவுளி வியாபாரம்  செய்து பிழைப்பு நடத்தும் சேக் தாவூதின் மகள்  ஜாஸ்மின்.
தனியார் பள்ளிகள் அடிக்கும் கொள்ளைக் கட்டணத்தில் தன் பிள்ளைகளை சேர்த்தால் மட்டுமே கல்வி தரமானதாக இருக்கும் என்று என்னும் பெற்றோர்கள் இனியாவது அரசுப் பள்ளி ஆசிரியர்களின்  முயற்சிகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அது போல அரசும் கல்வியில் தனிக் கவனம் செலுத்தி அரசுப் பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து தமிழக மக்கள் அரசுப் பள்ளிகளில் முண்டியடித்து தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.
Source :  http://www.inneram.com
சாதிக்க அரசுப் பள்ளியும் ஒரு தடையல்ல!

No comments: