Friday, May 28, 2010

இலங்கையின் உரிமைகள் விவகாரம் சர்வதேச அரங்கில் சூடான விவாதம்

வாஷிங்டன்: சர்வதேச நெருக்கடிக்குழு, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற குழுக்கள் "சர்வதேச சமூகத்தில்" உள்ளடக்கப்பட்டவையல்ல எனவும் அதனால் "என்ன செய்ய வேண்டும்" என்று எமக்குக் கூறுவதற்கான தார்மீக உரிமையை அவை கொண்டிருக்கவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பீரிஸ் அங்கு ஒபாமா நிர்வாக சிரேஷ்ட அதிகாரிகள், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார்.சர்வதேச நெருக்கடிக்குழு, மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற குழுக்கள் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது போர்க்குற்றம் இழைக்கப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டுவதுடன், உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்ற விசாரணை நடத்தப்படவேண்டுமென அழைப்புவிடுத்துள்ளன. இந்த அமைப்புகளை பேராசிரியர் பீரிஸ் சாடியுள்ளார்.
"சர்வதேச சமூகத்தின் ஒவ்வொருவருமே கதைக்கின்றனர்சர்வதேச சமூகம் என்றால் என்ன? ஐ.நா.வில் 196 நாடுகள் உள்ளன. ஐ.நா.வின் பொருத்தமான இடத்தில் இந்த விடயங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மூன்று நாட்களாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இந்த விடயத்தை ஆராய்ந்திருந்தது. அங்கு 6 கண்டங்களின் பிரதிநிதிகள் மற்றும் 29 பேர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று நினைத்தனர். 11 நாடுகள் வேறுமாதிரியாகச் சிந்தித்தன. 6 நாடுகள் கலந்துகொள்ளவில்லை. ஓரிரு அரசசார்பற்ற நிறுவனங்களைச்
சர்வதேச சமூகமென உள்ளடக்க முடியாது%27 என்று பீரிஸ் கூறியதாக "மைநியூஸ்%27 இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.பாதுகாப்புச் சபை, பொதுச் சபை, மனித உரிமைகள் பேரவை என்பன "ஆம்%27 என்று கூறினார். அங்கு இந்த விடயங்களைக் கொண்டு செல்ல நாம் ஆயத்தமாக இருக்கிறோம். ஆனால், ஏனைய இடங்கள் என்றால் "இல்லை%27 என்றும் பீரிஸ் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச நெருக்கடிக்குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருக்கும் அமைச்சர் பீரிஸ், "பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டோ அல்லது ஊறுவிளைவிக்கப்பட்டோ இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. பல்லாயிரக்ணக்கானோர் எனில் 10 ஆயிரமா? 20 ஆயிரமா? 90 ஆயிரமா? வார்த்தையானது தனித்துவமான அடையாளத்தைக் கொண்டதாக இல்லை. கனடிய நீதிபதியால் அந்த அறிக்கை எழுதப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது%27 என்றும் பீரிஸ் கூறியுள்ளார்.
இலங்கையில் புலிகளால் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று கூறியுள்ள பீரிஸ், சிங்கள உயிர்களை மட்டும் தான் குறிப்பிடவில்லை என்று தமிழர்களும் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கதிர்காமர் சிங்களவரா? நீலன் திருச்செல்வத்துக்கு என்ன நடந்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் அமைத்த பல்வேறு ஆணைக்குழுக்கள் மனித உரிமை அமைப்புகளின் நம்பகத்தன்மை தொடர்பாக சந்தேகம் தெரிவித்து மன்னிப்பு சபை பிரதிநிதி கேள்வி எழுப்பியபோது, யுத்தம் முடிவடைந்து ஒருவருடம் மட்டுமே கடந்திருப்பதை மறந்துவிட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். இத்தகைய சூழ்நிலைகளில் ஏனைய நாடுகளின் அனுபவங்களைப் பாருங்கள். சிலநாடுகளுக்கு 36 வருடங்கள் எடுத்தன. ஏன் இரண்டு விதமான நிலைப்பாடுகளைப் பிரயோகிக்கிறீர்கள்? உலகளாகவிய ரீதியில் இதே விதமான நிலைப்பாட்டை சர்வதேச மன்னிப்புச் சபை ஏன் எடுக்கவில்லை? ஏன் இலங்கையை மட்டும் வேறுபடுத்துகிறீர்கள். ஏனென்றால் இலங்கை வறிய நாடு. அதனை உதைபந்து போன்று சுற்றிவர உதைத்துத் தள்ளிவிட முடியும்? இதற்கு நிச்சயமாக நாம் இடமளிக்க மாட்டோம். மன்னிப்பு சபையோ வேறு எவருக்கோ நாம் இடமளிக்கமாட்டோம் எனவும் அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார்.நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை எமக்குக் கூறுவதை நாம் விரும்பவில்லை. அதற்கு என்ன தார்மீக உரிமை உள்ளது?
ஐ.நா.தலையிடத் தவறிவிட்டது உலக நீதி அரசியல் மயம்
மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு
சர்வதேச நீதி அரசியல் மயமாக்கப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை விமர்சித்திருக்கிறது.வருடாந்த அறிக்கையிலேயே மன்னிப்பு சபை இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது. 111 நாடுகளில் இடம்பெற்றுள்ள சித்திரவதையை வருடாந்த அறிக்கையில் மன்னிப்பு சபை ஆவணப்படுத்தியுள்ளது.
அரசியல் ரீதியான சுய நலன்களுக்காக வல்லமை வாய்ந்த அரசாங்கங்கள் நீதியை தாழ்ந்த மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தமது நேச அணிகள் கண்காணிப்புக்குட்படுத்தப்படாதவாறு கவசமிட்டு காப்பாற்றுவதாகவும் மனித உரிமைகள் குழுவான மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போதான போர் குற்றச்சாத்தியப்பாடு குறித்தும் மன்னிப்பு சபை தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது.தலையிடுவதற்கு ஐ.நா. தவறியமை குறித்தும் அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் போதான பொது மக்கள் இழப்புகளையிட்டு அத்தருணத்தில் "இரத்தக் களரி%27 யென்று ஐ.நா.வின் பேச்சாளர் விமர்சித்திருந்தார். ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் "அதிகாரம் விளையாடியதாக%27 மன்னிப்பு சபை கூறுகிறது.இலங்கை அரசு சமர்ப்பித்த தீர்மானத்தை உறுப்பு நாடுகள் அங்கீகரித்திருந்ததுடன் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்ததை பாராட்டியுமிருந்தன.
"வருட முடிவில் போர்க் குற்றங்கள் மற்றும் இதர துஷ்பிரயோகங்கள் குறித்து மேலும் ஆதாரங்கள் இருந்த போதும் எவரும் நீதியை ஏற்படுத்தியிருக்கவில்லை%27 என்று மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம் கிளாடியோ கோர்டோன் கூறுகிறார்.மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்தோரை பதிலளிக்க வைக்கும் கடப்பாடு முழுமையாக தோல்வி கண்டு விட்டதாக அவர் கூறியுள்ளார்.
அதேசமயம் காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பதிலளிக்க வைக்கும் கடப்பாட்டை வலியுறுத்துவது தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்கும் விடயத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இஸ்ரேலுக்கு கவசமாக இருக்கும் நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேவேளை, சூடானிய ஜனாதிபதி ஓமர் அலி யாசிருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்ததை மன்னிப்பு சபை பாராட்டியுள்ளது. போர்க்குற்றச்சாட்டு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட கைதாணை குறிப்பிடத்தக்க முக்கியமான நிகழ்வு என்று மன்னிப்பு சபை தெரிவித்திருப்பதாக பி.பி.சி.செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
 http://www.inneram.com/201005288551/2010-05-28-03-47-57
இலங்கையின் உரிமைகள் விவகாரம் சர்வதேச அரங்கில் சூடான விவாதம்

No comments: