Tuesday, April 28, 2015

குழந்தை ஏக்கம்; யென்பது யாதெனில்..../


வெளிப்படுத்த முடியா
சோகங்களை உள்ளுக்குள்
ஒளித்திருக்கிறோம்;
ஆனாலும்…
நான் அழுதால்;
நீ உடைவாய் என நானும்;
நீ அழுதால்;
நான் நொறுங்குவேன் என நீயும்;
மாறி மாறி புன்னகையைப்
பூசிக்கொள்கிறோம்;
எதுவுமே நடவாததுப் போலவே
பாவனை செய்கிறோம்!

Friday, April 24, 2015

பெருகிவரும் காதல் கலாச்சாரமும், அதிர்ச்சிதரும் நிகழ்வுகளும் !?

இன்றைய காலகட்டத்தில் அனைத்து ஊடகங்களிலும் பரவலாக பார்க்கப்படும் செய்திகளில் முதன்மையாய் இருப்பது இந்தக் காதலைப் பற்றிய செய்தியாகத்தான் இருக்கிறது. காதலர்கள் ஊரை விட்டு ஓடுவதும்,காதலித்து ஏமாற்றுவதும், கணவனிருக்க மனைவி கள்ளக்காதல் புரிவதும், மனைவியிருக்க கணவன் வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதும், வயது வரம்புயின்றி வரும் வக்கிரக் காதலும் காதலால் ஏற்ப்படும் பாலியல் பலாத்காரமும், வன்புணர்வும், துயர நிகழ்வும்தான் அதிகம் வாசிக்கும்படியும் கேட்கும்படியுமாக உள்ளது.

அவர் சொல்லியதில் உண்மையிருக்கு

நேத்து ...நடந்த உரையாடல் காலேஜில்  ...

என் மகளுக்கு பரிட்சை ...கூடவே என் மனைவியும் மாமியாரும் துணைக்கு  போயிருக்காங்க காலேஜூக்கு...மகள் வழக்கம்போல பரிட்சைக்கு  உள்ளே போயிருச்சு இவங்க வெயிட்டிங் ஹால்ல உட்கார்ந்திருக்கும் போது ...இவங்கள போலவே தன் மகளுக்கு துணையாக வந்த ஒருவர் வந்து ..ஏம்மா மகளுக்கு துணையா வந்திங்களானு கேட்டிருக்கார்

ஆமாங்கய்யா ...நீங்க
நானும்தாம்மா மகளுக்கு துணையா வந்தேன் ...எங்க ஊரு நிலக்கோட்டை என் பேரு மாயாண்டி ...னு தன்னை அறிமுகப்படுத்திய அவர்

ஒரு விவசாயி ..மழைக்கி கூட பள்ளிக்கூடத்து பக்கம் நெருங்கியதில்லையாம் ...நம்ம தான் படிக்கல பிள்ளைகளையாவது படிக்க வைக்கத்தான் ஆசைப்பட்டு மகள் இப்ப 3 வது வருஷம் காலேஜ் மா .....

உயிரிசை:/ தாஜுதீன்

காற்றின் மிதந்து வரும்
பேரிரைச்சல்களுக்கிடையே
கண்டுணர்ந்ததோர் கானயிழை
எங்கோ அறுபட்டுவிட்டது

பூக்களை மொய்க்கும்
வண்டுகளின் ரீங்காரமல்ல
தத்தித் தாவும் சிட்டுக்களின்
கொஞ்சிக்குழாவலுமல்ல
மரங்களின் ஆட்டமெழுப்பும்
ஆனந்த ரிதமோ
இலைகளின் படபடப்படக்கும்
சந்தோஷ தாளமோ
அங்கே மறைந்து கேட்கும்
கிளிகளின் காதல் மொழியோ
தூர கேட்கும் குயிலின்
குதூகல ஆவர்த்தனமோ அல்ல
கவிதை வயமானது அது.
மரக்கிளையில் கட்டிவிடப்பட்ட தொட்டி
காற்றில் நிதானமற ஆடுகையின்
பிடிபடாத மொழி
குழந்தை பேசும் குதூகல மழலை!

குழந்தைப்பாடல் - 2 மதுவும் புகையும் வேண்டாமே

வேண்டாம் அப்பா விட்டுவிடு
வீதியில் நம்மை விட்டுவிடும்
மதுவும் புகையும் மறந்துவிடு
மகிழ்ச்சியை நாளும் தந்துவிடு

Sunday, April 19, 2015

அவனோட திட்டம் நம்ம திட்டத்தவிட ரொம்ப பர்ஃபெக்ட்டாவே இருக்கும்.

ப்ளஸ்டூ படிக்கும்போது ஒரு ட்யூடோரியல் காலேஜுக்கு ட்யூசன் போனேன்.ஒருதடவை நீங்கல்லாம் படிச்சு முடிச்சு என்னவா ஆகப்போறீங்கன்னு மாஸ்டர் கேட்டுட்டிருந்தார்.
வரிசையா ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னா சொல்லிட்டிருக்க,
என் முறை வந்தப்போ"எந்தவொரு திட்டமும் இல்ல சார்,
வாழ்க்கை போறபோக்குல போகப்போறேன்'அப்டீன்னு சொன்னேன்.

முகத்தைச் சுழிச்சுக்கிட்ட மாஸ்டர்,
"கஷ்டம் தம்பி....ரொம்ப கஷ்டம்.
உனக்காக நான் பரிதாபப் படறேன்,
ரொம்பப் பரிதாபப்படறேன்" என்றார்.
மொத்த க்ளாஸ் ரூமுமே அந்தநேரம் என்னை நக்கலாப் பாத்துச்சு. எனக்குமே கொஞ்சம் ஓவராப் பேசிட்டமோன்னு ஃபீலிங்கா இருந்துச்சு.

தாஜுதீனுக்கு சயீத் பாராட்டுரை

Free MP3 Download - Legal and absolutely free!

Extract mp3 From Youtube video and create legal MP3 for FREE.

ஒவ்வொருவரும் அவசியம் கேட்க வேண்டிய காணொளி புலவர் முஸ்தபாஅவர்களின் பேச்சு.

Saturday, April 18, 2015

திரு.S. முனிர் ஹோதா IAS

                                             திரு.S. முனிர் ஹோதா IAS

தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு தலை சிறந்த நிர்வாகி இவர்.குமரி மாவட்ட ஆட்சித் தலைவராக இவர் பதவி வகித்த போது மாவட்ட நிர்வாகத் திறனில் இவர் காட்டிய அக்கறை குமரி மாவட்ட மக்களால் இன்றளவும் நினைவு கூறப்படுகிறது.
தமிழக ஆட்சி அமைப்புகள் மத்திய அரசால் கலைக்கப்படும் போதெல்லாம கவர்னரின் ஆலோசகர்களுக்கே ஆலோசனை வழங்கும் இடத்தில் இவரையே மத்திய அரசு தேர்ந்தெ டுத்து நியமனம் செய்திருக்கிறது. ஒரு முதல மைச்சர் நிர்வகிக்க வேண்டிய அனைத்து துறைகளையுமே, மிகவும் லாகவமாக கை யாண்டு துரிதமாக முடிவெடுக்கும் இவர் திறன் கண்டு அரசு நிர்வாகமே வியந்ததுண்டு
மாநில நிர்வாகத்தில் இவர் வகிக்காத பதவி களே இல்லை எனலாம். பதவியால் சிலர் பெருமை அடைகின்றனர். ஆனால் இவரால் பதவிகள் பெருமை பெற்று இருக்கின்றன.

Thursday, April 16, 2015

எழுதப்படாத என் கவிதை..!! நெஞ்சில் கனக்கும் அந்தக்கவிதை !

-நிஷா மன்சூர்

ஒரு அனுபவத்தை எழுத நினைத்தேன்.
அவ்வளவு துல்லியமாக எழுதத் துணிவில்லை
அவ்வளவு உண்மையாக எழுத மனமில்லை
சிறிதளவே சேர்க்கப்படும் கற்பனைகூட
அந்த அனுபவத்தின் சாரத்தை நீர்த்துவிடக்கூடுமென்பதால்
கூட்டிக்குறைத்து எழுதவும் இசையவில்லை.
போகட்டும் இந்த எழவு என்று தூக்கியெறியவும் முடியவில்லை.
இன்னும் மனதில் உருக்கொண்டு உருக்கொண்டு
ஓரிரு வரிகளாய் மலருமோ
அல்லது ஒரு புன்னகையாய்
ஒரு தழுவலாய்
ஒரு முத்தமாய்
ஒரு செல்லத் தட்டலாய்
வெளிப்பட்டு சூழலை அழகாக்குமோ
அல்லது
கழிவுநீரில் கரைந்தொழியும் உயிரணுக்களாய்ச்
சிதைந்தழியுமோ தெரியவில்லை.

Wednesday, April 15, 2015

நீயா...இல்லை நானா.... !/ Raheemullah Mohamed Vavar

நீயா...இல்லை நானா.... !
குழந்தையை சுமக்கும் பாரத்தையும், அதை இறக்கி வைக்கும் நேரத்தின் வேதனையையும் சொல்ல வந்திருக்கிறேன், மாதம் விடாமல் தொரத்தும் அவஸ்தைகளில் உண்டாகும் மன அழுத்தத்தை வலிக்கும் வரிகளில் சொல்லி வார்த்தைகளில் அழுது ஆறுதல் கொள்ள அமர்ந்திருக்கிறேன், போற்றப்பட வேண்டிய பெண்மை, தூற்றப்படும் கொடுமையை எடுத்துச் சொல்லி, காட்டப்பட வேண்டிய கருணையை ஆண்களிடைருந்து வலுக்கட்டாயமாக தட்டிப் பறித்து விடத்தான் வந்திருக்கிறேன் - என்பன போன்ற அதி அத்தியாவசியமான காரணங்களைச் சொல்லி அதனால் கவிதை எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டேன் என்பது போன்று ஆதங்கப்பட்டு சொல்ல வரும் மங்கயரைப் பார்த்து, அலி அண்ணன் ( Mohamed Ali ) குறிப்பிட்டதைப் போல், நம் நேரத்தை அவசியமில்லாமல் தொலைத்து விட்டோமே என்கிற ஆதங்கம்தான் பார்க்கிற நமக்கு ஏற்பட்டது.
இப்படி பெண்கள் பக்கம் என்றால், ஆண்கள் பக்கம் அதைவிட மோசம். என்ன கதையெல்லாமோ அளந்து, கடைசியில், அசைந்தாடிய ஒரு பெண்ணின் கைகளைச் சொல்லும் ஒருவர், அந்த அசைவின் நளினங்களையும் அசைவதில் தெரியும் உணர்வுகளையும் ஆஹாஹா, எப்படியாக சொல்லி வைத்திருக்கிறார் கவிஞர் என்று உச்சு கொட்டுவதை பார்க்கும் போது, அச்சென்று தும்மல் வந்து, ஏண்டா சாமி, எழுதின தலையெழுத்தை இதையெல்லாம் பார்த்து தொலைக்கவும் வேண்டியா சேர்த்து எழுதி விட்டாய் என்றுதான் நம்மையே நாம் வருத்தப்பட வேண்டி இருந்தது.
மொத்தத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் நீ- எல்லாம் என்னாய்யா மனுஷன், நாங்கள்ளாம் உன்னை நம்பி வந்தோம் பாரு, அதச் சொல்லணுமய்யா- என்கிற விதத்தில், வாய்யா, போய்யா என்றே அமைந்திருந்தது.

Monday, April 13, 2015

அன்பான அப்பா

ஏப்ரல் 24, 2014 - ஜெயகாந்தன் பிறந்தநாளையொட்டி ‘புதிய தலைமுறை’ வார இதழுக்காக, அவரது இளைய மகள் தீபா எழுதியது

ஓர் எழுத்தாளருக்கு யாரெல்லாம் அன்பர்களாக இருக்கக் கூடும்? வாசகர்கள், வளரும் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், கவிஞர்கள், திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள்; யோசித்துப் பார்த்தால் இன்னும் ஏழெட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுவார்கள்.

Sunday, April 12, 2015

சிரிக்காம இருக்க மாட்டிங்க...


Bank Customer :
நான் இன்னைக்கு பாங்க்ல Cheque டெபொசிட் பண்ணா எப்ப sir clear ஆகும்..?

பேங்க் மேனேஜர்:
3 நாள் ஆகும்.

Bank Customer :
என்னோட Cheque எதிர்ல இருக்கற Bank உடையதுதானே. ரெண்டு பேங்கும் எதிர் எதிர்லதானே இருக்கு. பின்ன எதுக்கு சார் இவ்ளோ நாள் ஆகும்..?!

Bank Manager :
சார், Procedure ன்னு ஒன்னு follow பண்ணனும் இல்ல..?!

கணவனை உயிராய் பேணுங்கடி..!(எனக்கு பிடித்த என் கவிதை )


கணவனை உயரென்னுங்கடி -அவன்
காதலை நாளுமே போற்றுங்கடி !
குணத்தினில் வாசுகி ஆகுங்கடி-நல்ல
குங்குமம் நெற்றியில் பூசுங்கடி!

அன்பினால் கணவனை ஆளுங்கடி-தினம்
ஆனந்த வெள்ளத்தில் முழ்குங்கடி!
துன்பத்தை வாழ்க்கையில் போக்குங்கடி-நல்ல
தூய்மையை நாளுமே !ஆக்குங்கடி!

கற்பினைக் கண்ணெனப் பேணுங்கடி-நல்ல
கருணையை நெஞ்சிலே பூணு ங்கடி!
அற்புதக் குழந்தைகளை ஈனுங்கடி-அவர்களை
அருமையாய் வளரத்தின்பம் காணுங்கடி!

இல்லத்தை சொர்க்கமாய் மாற்றுங்கடி-அங்கு
இணையில்லா இன்பத்தை ஊற்று ங்கடி!
வெல்லத்தைப் போலன்பாய் பேசுங்கடி-என்றும் !
வீணான கொள்கையை வீசுங்கடி!

அரைகுறை ஆடைகளைத் தள்ளுங்கடி-நம்ம
அழகான பண்பாட்டைக் கொள்ளுங்கடி!
கரையில்லா இன்பத்தைக் காணுங்கடி-என்றும்
கணவனை உயிராய் பேணுங்கடி..!
 Kalaimahel Hidaya Risvi

Thursday, April 9, 2015

சகோ Abdul Basithகல்யாணத்தின் போது


சகோ Abdul Basithகல்யாணத்தின் போது இன்னொரு முக்கியமான அம்சம்... பெரியவர் Mohamed Ali ( http://nidurseasons.blogspot.in/  தளத்தின் பதிவர்) அவர்களுடனான சந்திப்பு. இதற்கு முன்னர் சாட்டில் பலமுறை டைப்பிருக்கோம். முதல் நாளே அவரிடம் சொல்லி இருந்தேன்... கல்யாணத்துக்கு வருவது பற்றி. நேரில் சந்திப்பது இதுவே முதல்.

ஆஷிக் பாசித் இருவருக்கும் உறவில் தாத்தா. எங்கோ அமர்ந்திருந்தவரை கூட்டிவந்து ஆஷிக் என்னிடம் அறிமுகம் செய்துவைத்ததும்... மிகவும் மகிழ்ச்சியாய் அளாவலாவினார். நான் நம்ம செட்டை அவருக்கு அறிமுகப்படுத்தவும்... அதன் பின்னர் எங்கள் அருகிலேயே அமர்ந்து இருந்தார். எங்கள் ஒவ்வொருவரிடமும் பக்கத்தில் அமர்ந்து பேசினார். விசாரித்தார்.

Wednesday, April 8, 2015

ப்ளாக்கர் நண்பன் 100 கட்டுரைகள்


ப்ளாக்கர் CAPTCHA - இருக்கு ஆனா இல்லை இணையம், ப்ளாக்கர்
View

ப்ளாக்கர் பாஸ்வோர்ட் மறந்துவிட்டதா? Blogger, தொழில்நுட்பம், ப்ளாக்கர்
View

ப்ளாக்கரில் மால்வேர், எச்சரிக்கை! Blogger, ப்ளாக்கர், மால்வேர்
View

2013-ல் சிறந்த 10 பதிவுகள் இணையம்
View

தமிழ் நுட்பம் - தொழில்நுட்ப இணையதளம் Bit Byte Megabyte, இணையம்
View

தமிழ் ப்ளாக் மூலம் சம்பாதிக்க... Blogger, ப்ளாக்கர்
View

நீங்கள் ப்ளாக்கரில் டொமைன் வைத்துள்ளீர்களா? Blogger, தொழில்நுட்பம், ப்ளாக்கர்
View

நவம்பர் 13-ல் மோட்டோ ஜி (Moto G) வெளியீடு Google, Motorola, கூகிள், மோட்டோரோலா
View

ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் வெளியிடப்பட்டது Android, ஆண்ட்ராய்ட், தொழில்நுட்பம்
View

பிட்.. பைட்.. மெகாபைட்..! (30/10/13) Bit Byte Megabyte, இணையம், பிட் பைட் மெகாபைட்
View

பிளாக்கர் Blogger Follower widget இப்பொழுது தமிழிலும்! Blogger, ப்ளாக்கர்
View

22,500 எல்ஜி ஜி2 (LG G2) மொபைல்கள் திருடுப்போனது இணையம்
View

பிட்.. பைட்.. மெகாபைட்..! (23/10/13) Bit Byte Megabyte, பிட் பைட் மெகாபைட்
View

Hunt For Hint 3 - புதிர் வேட்டை! இணையம்
View

கூகுள் விளம்பரத்தில் உங்கள் புகைப்படம் Google, இணையம், கூகிள்
View

ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் (Android 4.4 KitKat) Android, ஆண்ட்ராய்ட், தொழில்நுட்பம்
View

பிட்.. பைட்.. மெகாபைட்..! (09/10/13) Bit Byte Megabyte, இணையம், பிட் பைட் மெகாபைட்
View

Tuesday, April 7, 2015

'கொலஸ்ட்ரால் கொடுங்க' !

ஒரு முறை ஜப்பார் அண்ணன் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.

'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர் சொன்னார். உடனே ஜப்பார் அண்ணனுக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?' என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக ஜப்பார் அண்ணனிடம் , 'இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது' என்றார் , ஜப்பார் அண்ணன் உடனே சொன்னார்,

"அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் "Colestrol FREE" ன்னு எழுதியிருக்கு.."
Sadhiq Prince

தகவல்:  ஜப்பார் அரசர் குளம்

Monday, April 6, 2015

நீடூர் நெய்வாசல் அல்ஹாஜ் அ மு சயீது அவர்களின் நினைவாக முதல் விருதை பெரும் சாதனையாளர் "அப்துல் ஹக் லறீனா" - அ.மு.அன்வர் சதாத்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளனின்
திருப்பெயரை துதித்து ஆரம்பிக்கிறேன்.

உங்கள் எல்லோரின் மீதும்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ...


மரியாதைக்குரியவர்களே ... !

மிக நீண்டநாளாக யோசித்து யோசித்து யோசித்து
மிக நிதானமாக முடிவெடுத்து இதோ அறிவிக்கிறேன்.

இறைவனுக்கே எல்லா புகழும்.

என்னை மிகவும் கவர்ந்த,
இன்றும் என் ஆன்மாவில் நிறைந்து வாழும்,

என்னருமை மரியாதைக்குரிய நீடூர் நெய்வாசல்
அல்ஹாஜ் அ மு சயீது அவர்களின் நினைவாக,

தொப்புள் கொடி சமாச்சாரம்

தொப்புள் கொடி சமாச்சாரம்

ஒரு காலத்தில், குழந்தை பிறந்த சற்று நேரத்தில் தொப்புள் கொடியை வெட்டி, குழந்தையை பிரித்தெடுத்த பின்னர் தாயின் கருப்பையில் அடுத்த வெளியேற்றத்திற்காக காத்திருக்கும் ஓரு சிறு மாமிச பிண்டம் போல் தோற்றம் தரும் நச்சுக்கொடியை விரைந்து அகற்றி அதை மண்ணில் புதைத்து விடுவது வழக்கமாக இருந்தது.
முன்னெல்லாம் குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை வெட்டி விடுவார்கள் . அது தவறு, சற்று நேரம் தாமதித்து கொடியை வெட்டினால் குழந்தைக்கு நச்சுக் கொடியிலிருந்து சற்று அதிக இரத்தம் ஓடி வர வாய்ப்புண்டு.அந்த இரத்தம் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நன்மை பயக்கும். இதுபோக ஒரு 50மில்லி அளவு இரத்தம் நச்சுக்கொடியில் தேங்கி கிடக்கிறது.

Sunday, April 5, 2015

சகோதரி லறீனாவை வாழ்த்துவோம்...

// சகோதரி அப்துல் ஹக் லறீனா...
- தேர்ந்ததோர் எழுத்தாளர்
- சிந்தனையாளர்
- ஆய்வாலர்
- பெண்ணியவாதி
- நாடக இயக்கம் நடிப்பு என்பவைகளில்
பெயர் போட்டவர்! என்பதனை நாம் அறிவோம்.

இப்போதோ....,
இனிமையான தன் குரலில்
மெலோடியான ராகத்தில் அவரே இசயமைத்து
வெற்றிகரமான ஓர் பாடலை நமக்கு தந்தும் இருக்கிறார்.
வரும் மாதங்களில்
அவரது இசை ஆல்பம் ஒன்று வரயிக்கிறது என்பது
மகிழ்வான இன்னொரு செய்தி.

அசாத்திய திறமைகளை
தொடர்ந்து வெளிப்படுத்தும்
சகோதரி லறீனாவை வாழ்த்துவோம்...
வாழ்த்துக்கள்.
- தாஜ்  Taj Deen

Ć
மண்ணிலே பாடல் கேட்க  mannile.mp3v.1    ď

Wednesday, April 1, 2015

உகாண்டா

உகாண்டா


இந்த நூற்றாண்டின் முக்கிய சர்வாதிகாரி
இடி அமீனை ஈன்றவள்....

அரேபிய பாலைவனம் படராமல் இருக்க
அரணாக இருக்கும்
நைல் நதியின் நதிமூலம் நிறைந்த நீர் வளத்தின் ஊற்று...

மா பலா வாழை என்ற முக்கனிகளும் வற்றாமல்
வருடம் முழுக்க தந்திடும் தாயகம்...

கடல் இல்லாவிட்டாலும்
கடல்போல் பரந்த விக்டோரியா ஏரியை தலையில் ஏந்தி நிற்கும் தடாகத் தாய் .....