Sunday, April 19, 2015

அவனோட திட்டம் நம்ம திட்டத்தவிட ரொம்ப பர்ஃபெக்ட்டாவே இருக்கும்.

ப்ளஸ்டூ படிக்கும்போது ஒரு ட்யூடோரியல் காலேஜுக்கு ட்யூசன் போனேன்.ஒருதடவை நீங்கல்லாம் படிச்சு முடிச்சு என்னவா ஆகப்போறீங்கன்னு மாஸ்டர் கேட்டுட்டிருந்தார்.
வரிசையா ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னா சொல்லிட்டிருக்க,
என் முறை வந்தப்போ"எந்தவொரு திட்டமும் இல்ல சார்,
வாழ்க்கை போறபோக்குல போகப்போறேன்'அப்டீன்னு சொன்னேன்.

முகத்தைச் சுழிச்சுக்கிட்ட மாஸ்டர்,
"கஷ்டம் தம்பி....ரொம்ப கஷ்டம்.
உனக்காக நான் பரிதாபப் படறேன்,
ரொம்பப் பரிதாபப்படறேன்" என்றார்.
மொத்த க்ளாஸ் ரூமுமே அந்தநேரம் என்னை நக்கலாப் பாத்துச்சு. எனக்குமே கொஞ்சம் ஓவராப் பேசிட்டமோன்னு ஃபீலிங்கா இருந்துச்சு.
ஒரு ரெண்டு வருஷம் இருக்கும்.கார் சர்வீஸுக்குப் போயிருந்ததால பஸ்ஸுல கம்பனிக்குப் போயிட்டிருந்தேன்.
பக்கத்துல அந்த மாஸ்டர் உக்காந்துட்டிருந்தார்.
என்ன பண்ற,எப்படி இருக்க,வீடு குழந்தை,குடும்பம்னு எல்லாத்தையும் விசாரிச்ச மாஸ்டர நீங்க எங்க சார் இங்கன்னு கேட்டேன்,
அந்த ஏரியால இருக்கற ஒரு பெரிய ஸ்கூல்ல வேலைக்கு அப்ளிகேசன் போட்டிருந்தேன்.இப்போ இண்டர்வியூக்கு போயிட்டிருக்கேன்னு சொன்னார்.
வாழ்த்துக்கள் சொல்லிட்டு என் கார்டையும் அவர்கிட்ட கொடுத்துட்டு என் உதவி எதாவது தேவைப்பட்டா கூப்பிடுங்க சார்னு சொன்னேன்.

அதுக்கப்புறம் அவருக்கு அந்த ஸ்கூல்ல வேலை கிடைக்கலைன்னு தெரிஞ்சது.இன்னொரு நண்பர்கிட்ட சொல்லி வேணும்னா நம்ம கம்பனிலயே அட்மின் மேனேஜர் வேலை கொடுத்தர்லாம்.சார வரச்சொல்லுப்பான்னு சொல்லிவிட்டேன்.
"வெக்கமா இருக்கு,நீ மன்சூர்ட்ட இதெல்லாம் சொல்லவேண்டாம்"அப்டீன்னு சொல்லிட்டாராம்.
மறுபடி அவர்கிட்டப்பேசினா அவர் மனசு சங்கடப்படுமோன்னு நானும் மறுபடி பேசலை...!!

‪#‎நம்ம‬ திட்டம் போடலைன்னா நமக்காக அவன் திட்டம் போடுவான்.அவனோட திட்டம் நம்ம திட்டத்தவிட ரொம்ப பர்ஃபெக்ட்டாவே இருக்கும்.
 நிஷா மன்சூர்

No comments: