Thursday, April 9, 2015

சகோ Abdul Basithகல்யாணத்தின் போது


சகோ Abdul Basithகல்யாணத்தின் போது இன்னொரு முக்கியமான அம்சம்... பெரியவர் Mohamed Ali ( http://nidurseasons.blogspot.in/  தளத்தின் பதிவர்) அவர்களுடனான சந்திப்பு. இதற்கு முன்னர் சாட்டில் பலமுறை டைப்பிருக்கோம். முதல் நாளே அவரிடம் சொல்லி இருந்தேன்... கல்யாணத்துக்கு வருவது பற்றி. நேரில் சந்திப்பது இதுவே முதல்.

ஆஷிக் பாசித் இருவருக்கும் உறவில் தாத்தா. எங்கோ அமர்ந்திருந்தவரை கூட்டிவந்து ஆஷிக் என்னிடம் அறிமுகம் செய்துவைத்ததும்... மிகவும் மகிழ்ச்சியாய் அளாவலாவினார். நான் நம்ம செட்டை அவருக்கு அறிமுகப்படுத்தவும்... அதன் பின்னர் எங்கள் அருகிலேயே அமர்ந்து இருந்தார். எங்கள் ஒவ்வொருவரிடமும் பக்கத்தில் அமர்ந்து பேசினார். விசாரித்தார்.
நம் டீக்கடை யின் ப்ளாக் சகோதரிகள் சிலரையும்... சகோதரர்கள் சிலரையும் பெயர்சொல்லி மிகச்சிறப்பாக எழுதுவதாகவும்... எழுதுவதை தவறாமல் படிப்பதாகவும்... பலரின் பெயர்களை வரிசையாக சொல்லிக்கொண்டே வந்தார். சுவனப்ப்பிரியன் என்று சொல்லவும்... அதே நேரம் அண்ணன் என்ட்ரி ஆகவும் சரியா இருந்திச்சா... "ம்ம்ம்...பாய்... இவருதான் அவரு"ன்னு கபால்ன்னு கையை புடிச்சு அவருகிட்டே கொடுத்திட்டேன்...! ரொம்ப சந்தோஷப்பட்டார்.

அவர் வயதுக்கார உள்ளூர் பிரமுகர்கள் பலரையும் அழைத்துவந்து எங்களை எல்லாம் அவர்களிடம் ரொம்ப பெருமைபடுத்தி அவர்களிடம் சொல்லி மகிழ்ந்தார். பெரிய எழுத்தாளர்கள் என்பதுபோலத்தான் பிறரிடம் அறிமுகப்படுத்தினார். அவரது இந்த பரவசத்துக்கு நானெல்லாம் ஒர்த் இல்லை. அரசியல் உலகில் அவர் எவ்வளவு பெரியவர் என்று சகோ அன்வர் சதாத் சொல்லட்டும்.

எங்களுடன் சேர்ந்து நின்று பல போட்டோக்கள் விடியோ கவரேஜ்கள் எடுத்துக்கொண்டார். வயதில் மூத்த பெரியவர் ஒருவர் முதல் சந்திப்பிலேயே என்னோடு இவ்வளவு பாசமாக பழகுவது இதுவே முதல்முறை. வயதில் மூத்தவர் சிறியவர்களுடன் இந்தளவு நெருங்கி பழகுவதும்... பரவசமான அனுபவம். அல்ஹம்துலில்லாஹ். மிக மகிழ்ச்சியான... என்னால் மறக்க முடியாத சந்திப்பு... ஆனால்... சடுதியில் முடிந்துவிட்டது என்பதுவே வருத்தம். எவரிடமும் நிறைய பேச முடிய வில்லை. முக்கியமாய் மணமகன் அப்துல் பாசித்திடம்.
 ஆக்கம்  Mohamed Ashikடீக்கடை
 நன்றி Mohamed Ali

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சுவாரஸ்யமாயிருந்தது...