குழந்தையை சுமக்கும் பாரத்தையும், அதை இறக்கி வைக்கும் நேரத்தின் வேதனையையும் சொல்ல வந்திருக்கிறேன், மாதம் விடாமல் தொரத்தும் அவஸ்தைகளில் உண்டாகும் மன அழுத்தத்தை வலிக்கும் வரிகளில் சொல்லி வார்த்தைகளில் அழுது ஆறுதல் கொள்ள அமர்ந்திருக்கிறேன், போற்றப்பட வேண்டிய பெண்மை, தூற்றப்படும் கொடுமையை எடுத்துச் சொல்லி, காட்டப்பட வேண்டிய கருணையை ஆண்களிடைருந்து வலுக்கட்டாயமாக தட்டிப் பறித்து விடத்தான் வந்திருக்கிறேன் - என்பன போன்ற அதி அத்தியாவசியமான காரணங்களைச் சொல்லி அதனால் கவிதை எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டேன் என்பது போன்று ஆதங்கப்பட்டு சொல்ல வரும் மங்கயரைப் பார்த்து, அலி அண்ணன் ( Mohamed Ali ) குறிப்பிட்டதைப் போல், நம் நேரத்தை அவசியமில்லாமல் தொலைத்து விட்டோமே என்கிற ஆதங்கம்தான் பார்க்கிற நமக்கு ஏற்பட்டது.
இப்படி பெண்கள்
பக்கம் என்றால், ஆண்கள் பக்கம் அதைவிட மோசம். என்ன கதையெல்லாமோ அளந்து,
கடைசியில், அசைந்தாடிய ஒரு பெண்ணின் கைகளைச் சொல்லும் ஒருவர், அந்த அசைவின்
நளினங்களையும் அசைவதில் தெரியும் உணர்வுகளையும் ஆஹாஹா, எப்படியாக சொல்லி
வைத்திருக்கிறார் கவிஞர் என்று உச்சு கொட்டுவதை பார்க்கும் போது, அச்சென்று
தும்மல் வந்து, ஏண்டா சாமி, எழுதின தலையெழுத்தை இதையெல்லாம் பார்த்து
தொலைக்கவும் வேண்டியா சேர்த்து எழுதி விட்டாய் என்றுதான் நம்மையே நாம்
வருத்தப்பட வேண்டி இருந்தது.
மொத்தத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் நீ- எல்லாம் என்னாய்யா மனுஷன், நாங்கள்ளாம் உன்னை நம்பி வந்தோம் பாரு, அதச் சொல்லணுமய்யா- என்கிற விதத்தில், வாய்யா, போய்யா என்றே அமைந்திருந்தது.
மொத்தத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் நீ- எல்லாம் என்னாய்யா மனுஷன், நாங்கள்ளாம் உன்னை நம்பி வந்தோம் பாரு, அதச் சொல்லணுமய்யா- என்கிற விதத்தில், வாய்யா, போய்யா என்றே அமைந்திருந்தது.