Friday, April 24, 2015

அவர் சொல்லியதில் உண்மையிருக்கு

நேத்து ...நடந்த உரையாடல் காலேஜில்  ...

என் மகளுக்கு பரிட்சை ...கூடவே என் மனைவியும் மாமியாரும் துணைக்கு  போயிருக்காங்க காலேஜூக்கு...மகள் வழக்கம்போல பரிட்சைக்கு  உள்ளே போயிருச்சு இவங்க வெயிட்டிங் ஹால்ல உட்கார்ந்திருக்கும் போது ...இவங்கள போலவே தன் மகளுக்கு துணையாக வந்த ஒருவர் வந்து ..ஏம்மா மகளுக்கு துணையா வந்திங்களானு கேட்டிருக்கார்

ஆமாங்கய்யா ...நீங்க
நானும்தாம்மா மகளுக்கு துணையா வந்தேன் ...எங்க ஊரு நிலக்கோட்டை என் பேரு மாயாண்டி ...னு தன்னை அறிமுகப்படுத்திய அவர்

ஒரு விவசாயி ..மழைக்கி கூட பள்ளிக்கூடத்து பக்கம் நெருங்கியதில்லையாம் ...நம்ம தான் படிக்கல பிள்ளைகளையாவது படிக்க வைக்கத்தான் ஆசைப்பட்டு மகள் இப்ப 3 வது வருஷம் காலேஜ் மா .....
எனக்கு ஒரு மகனுண்டு பேரு மாதவன் ...இங்க தான் சேரச்சொன்னேன் ..அவனுக்கு பிடிக்கல ..இப்ப திருச்சி ஜமால் முஹம்மது காலேஜ்லே  சேர்ந்து விளையா்ட்டு சம்பந்தப்பட்டதுல படிக்கிறான் .......உங்காளுங்க  காலேஜ் தான் நல்லாபடிக்கிறான் மா, ஒழுக்கமாயிருக்கான் ..னு பேசிக்கிட்டிருக்கும் போது ......சொன்னாராம் ...அங்க பாருங்கம்மா

அந்த பொம்பளப்புள்ளய நான் இங்க வந்த 45 நிமிஷமா கவனிக்கிறேன் .......செடி மறைவுல நின்னு போன் பேசிக்கிட்டேயிருக்கு

இவ்வளவு நேரம் பேசுறதுக்கு அந்த புள்ளைக்கென்ன ...கொடுக்கல் வாங்கலாயிருக்கு ..இல்ல
குடும்ப பாரமிருக்கா ..இல்ல
வேறெதுவுமிரு்ககா ....

இப்படி பாதுகாப்பில்லாம பிள்ளைகள தங்கள் போக்குல விடுறதுனாலதானேம்மா சில கயவர்களோட வலையில அகப்பட்டு பிள்ளைக ஓடிப்போறதும் தவறுக்கு போயி சிரமப்படுரதும் நடக்குது...னு சொன்னாராம் மாயாண்டி

என் மனைவி சொல்லுது ...ஏங்க அந்த மனுசன் சொல்ரதுல தப்பென்னங்கயிருக்குனு ...!கேட்டுச்சு 

உண்மை தான் ...இதுக்கு இடம் கொடுக்குரது தாய் தந்தை

அவரு ஒரு பக்கம் வேலைக்கி போயிருவாரு
அந்தம்மா ஒரு பக்கம் வேலைக்கி போயிரும் ....இதுக
அவுத்து விட்ட காளைதான் ......னென்பது பலரின் கருத்து

என்னை பொறுத்தவரை மாயாண்டி படிப்பறிவில்லாதவராயிருந்தாலும் உலக அறிவுள்ள அனுபவசாலி அவர் சொல்லியதில் உண்மையிருக்கு 
கள் தான் .......காரணம்

Iskandar Barak

No comments: