Saturday, September 11, 2010

சிரிப்புதான் எத்தனை வகை!

சிரிப்புதான் எத்தனை வகை!

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன்
ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன்


தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி
தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
நிலை கண்டு சிரிப்பவன் காரியவாதி

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும் பொழுது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்
வெற்றியில் சிரிப்பவன் வீரன்

விளையாமல் சிரிப்பவன் வீணன்
தற்பெருமையால் சிரிப்பவன் கோழை

அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி
அன்பால் சிரிப்பவள் அன்னை

காதலால் சிரிப்பவள் மனைவி
நிலை மறந்து சிரிப்பவள் காதலி

நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்
நினைவோடு சிரிப்பவன் அறிவாளி

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி
கும்மி அடித்து சிரிப்பவன் இதய கசடுள்ளவன்

அகம் மகிழ்ந்து சிரிப்பவன் உண்மை நண்பன்
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.

4 comments:

சகாதேவன் said...

சிரிப்பு வகைகளை கலைவாணர் என்.எஸ்.கே அன்று பாட்டாக பாடினார். இன்று பல வகை சிரிப்புகளை படிக்க தந்தீர்கள்.
அகம் மகிழ்ந்து சிரித்தேன் நண்பா.
சகாதேவன்

Anonymous said...

I think , U listed all , better Not to Laugh or smile

Anonymous said...

since u are listed everything ,better not to laugh or smile

FARHAN said...

Sirikka therintha mirigathirkku
Manithan endru paeyar
Sirikka marantha manithanukku
Mirigam endra paeyar
So kala kala kalavena siri

Kannil neer vara siri