இது எப்படி இருக்கு!
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது நல்ல பழக்கம் மட்டும் நெடு நாள் வாழ ஒரு காரணம் அல்ல. மற்ற காரணங்களும் உண்டு என்பதுதான்.
சரி பின் வரும் புதிய செய்தி பாருங்கள் .
இதுவரை 2,92,000 சிகரெட் ஊதித் தள்ளியும் உயிரோடு இருக்கும் இங்கிலாந்தைச் சார்ந்த தாத்தா ஒருவர் தனது 100வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஒரு நாளைக்கு ஒருமுறை விஸ்கி குடிக்கும் பழக்கமும் உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்தர் லாங்க்ரன் என்ற இவர் (Arthur Langran) இரண்டாம் உலக போரின் போது சிப்பாயாக பணிபுரிந்த போதும் கிரானைட் வெடிவிபத்திலும் ஒருமுறை உயிர் தப்பியுள்ளார்.இரு ஆண்களுக்கு தந்தையான இவர் தனது இருபதாவது வயதில் சிகரெட்டை ஊதி தள்ளும் பழக்கத்தை ஆரம்பித்துள்ளார். தினமும் 10 சிகரெட் ஊதி தள்ளுவது இவரது பழக்கம், மேலும் உறங்குவதற்கு முன் ஒரு 'ரவுண்ட்' ஸ்காட்ச் விஸ்கியையும் இறக்கி விட்டுதான் படுப்பாராம்.
சிகரெட் தாத்தாவின் சீக்ரெட் "யாரும் செய்ய கூடாது என்று சொல்லும் செயலை செய்வது தான் நான் ”என்று இங்கிலாந்திலுள்ள சன் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்
(செய்தி Source :http://www.inneram.com )
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புகை பிடிக்கும் பழக்கம் இன்று நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கிறது, புகையிலையை பற்ற வைத்து அதன் கடுமையான புகையை உள்ளிழுத்து விடுகிறோம் நுரையிரலில் அதன் கழிவுகள் படிகிறது இதனால் ஏற்படும் விளைவுகளை இன்று மருத்துவம் கூறிக்கொண்டிருக்கிறது. இறைவன் நம்மீது புரிந்திருக்கும் கருணையைப் பாருங்கள், புறவெளியில் காற்றில் வேறு பல வகையான வாயுகளும் அசுத்தங்களும் கலந்திருக்கின்றன் என்பதற்;;காக நமக்கு வேண்டிய ஆக்ஸிஜனை மட்டும் அவற்றிலிருந்து பிரித்தெடுத்து இரத்ததிற்கு கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான நுண்ணிய அறைகள் கொண்ட நுரையிரலை இறைவன் படைத்திருக்கிறான்.
நாம் என்ன செய்கிறோம் புகையிலையின் நச்சு புகையை உள்ளே செழுத்துகிறோம், அந்த நுரையிரல் வாயிருந்தால் நம்மை சபிக்கும் பாவி மனிதனே இதற்காகவா நான் படைக்கப் பட்டேன் என்று கூறும்.
குடிப்பழக்கமும் அது போல் தான் உடலுக்கு தேவையில்லாத திரவத்தை குடலுக்குள் இறக்குகிறோம் இதனால் கல்லிரல் பெருமளவு பாதிக்கப் படுகிறது. உடலில் சர்கரையின் அளவை இரத்ததில் சரியாக வைத்துக் கொள்ளவும், இரத்ததிலிருந்து நச்சுத் தன்மையை நீக்கவும், இரத்த உற்பத்திக்கும் பயன்படும் கல்லீரல் ஒரு கடுந்திரவத்தால் பாதிக்கப் படுகிறது. இது போன்று உடல் உறுப்புகளை சேதப்படுத்த நமக்கு எந்த உரிமையும் இல்லை.
No comments:
Post a Comment