Noor Saffiya
💞 இறைசிந்தனை
اهلا وسهلا ياشهر النور
அ _ருள் மறை ஃபுர்கான்
அள்ளினேன்;
பூக்களாய்!
அஹ்மதர்
வரவினாலே!
அகம் திறக்க புறத்தில்
அசுத்தம் மிரண்டோடியதே!
ஆ _னந்த களிப்பிலே
ஆர்வமாய்
குளித்தேன்;
அருவியாய்!
ஆக்கம்
தந்த மகிழ்வித்த
ஆன்மீக
ராஜராலே!
இ _தய கீதம் ஹுஹக்
இதமாய்
மணந்தேன்;
தென்றலாய்!
இரசூல்
அருளிய
தவ வாழ்க்கையாலே!
இன்பமும்
துன்பமும்
இவ்வுலகில்
சரிசமமே!
ஈ _ந்திடும் யா ரப்பே! என
ஈருலகிலும்
ஜெய்ப்பேன்;
ஈருல வேந்தர் ஹபீபின்
ஹுப்பினாலே!
ஈடேற்றம்
என்பதிலுமே!
ஈமானின்
உறுதியே!
உ _வந்த இறை நேசரின்
உம்மத்தாய்!
உடல் முழுவதும் அரபி
மொழிகளாய்!
உடையோன்
வகுத்து தந்த
இஸ்ம்,
ஜிஸ்மினாலே!
உத்தமர்
நிழலினிலே!
உட்கார்ந்து
ரசிக்கின்றதே!
ஊ _றியது உமிழ் நீரினிலே!
ஊற்றாய்
பற்பல நீர் சுரக்கும்!
ஊண் உறக்கமே உத்தமர் என
ஊன்றி பிடித்தேனே! கவியின்
ஊற்றை கண்மணியினாலே!
ஊறிடுது
வரகவியின் புலமை
ஊற்றுக்
கண் திறந்திடுதே!
ஊறி கொண்டே உயிரிலாளுது!
எழிலான
முகபொலிவுடனே!
எல்லோர்
மனதிலுமே!
எம்மானின்
மணம் நுகர்ந்திட
எம்முள்
கஸ்தூரி வாசம் எழிலழகு மகுடத்தாலே!
எடுத்துக்
காட்ட வந்ததே!
எஜமான்
எம்மான் எல்லாம்
எம் ஹபீபின் கதலாலே!
ஏகாந்த
ராகம் எதிலும்
ஏக்கத்துடன்
ஒலிக்கும்!
ஏந்தலர்
ஷஃபா அத்
ஏந்திய
கை இறுக்கமாய்
ஏற்றமாய்
பிடிப்பதனாலே!
ஐக்கியமாய்
அனைத்துமே
ஐய்யமர
இஷ்காலே!
ஐம்பூதங்களிடமே
காட்டும் நேசமே!
ஐங்கால
கடமையுடனே!
ஐம்புலனும்
ஆத்மீக
நாதரில்
ஐக்கியமாக்குமே!
ஒற்றுமையில்
நினைத்தே
ஒருவனின்
கொள்கையை
ஒன்று விடாது ஏற்கும்.மனம்
ஒன்றும்
குறைவில்லா
ஒருபோதும்
குறைவிலா
ஒவ்வாத
எல்லா நிஃமத்தும்
ஒருவனில்
பெறுவதே!
ஓங்கி எங்கும் கேட்கும்
ஒங்கார
சக்தி.பாங்கின்
ஓசையினிலே!
ஓடிடுமே
ஷெய்தனுமே!
ஓடிடுவோம்
நாமுமே!
ஓதிட ஒலுவினிற்கே!
ஓராயிரம்
தேவைக்கே!
ஓர்மையாய்
இஸ்திஃபார்கே!
ஔதசியம்
போலவே
வெண்னிற
வள்ளல் வருகை!
ஔபரிதிகமாய்
ஈருலகில் ஜெயம் ஜெயமே!
ஔடதமாய்
நம்மில்
சூழ்ந்து
கேடயமாக்குதே!
ஔவியம்
பேசிய நாவும்
கல்பும்
ரூஹின் தன்மையறிந்தே!
ஔசித்தியம்
பெற்று உயர
இறைரசூல்
முக்தியாகிடுமே!
அஃதே என அஹ்மதர் அனைத்துமாய்
நிறையுதே!
பஃதே என பத்தும்
பசி அறியா பறக்குதே!
வெஃகுதல்
என வள்ளல்.ஒன்றே
விரும்பி
ஆளுதே வாழுதே!
ஃ எனும் தனித்தன்மை போல!
ஃ என முவ்வுலக ராஜர்
ஃ முப்பரிமாண வடிவ காப்பாளராய்
ஃ முன்னோன் தந்த
முத்தே
முஹம்மதின்
ஷஃபா அத்தே!
ரபியுல்
அவ்வலிலே
ரஹ்மதுல்
ஆஷிகீனின்
ராஹத் சூழ்ந்த நிஃமத்
ரப்பே ரஹ்மத்தாக்குவான்!
அஹ்மதரின்
ஸலவாத்
துதித்து
நாவினில்
நனைவோம்!
آمــين.آَمِيـٍـِنْ آَمِيـٍـِنْ
يَآ رَبَّ آلٌعَآ لَمِِيِنْ
!🌹
يارحمة
اللعالمين !🌹
🤲🤲🤲🤲🤲
💞 يامُحَمَّدٍ ﷺ 💞
🖋நூர்ஷஃபியா காதிரியா
No comments:
Post a Comment