Friday, October 29, 2021

மிகவும் பரக்கத் (வளம்) பொருந்திய ஒரு குழந்தையை அடைந்திருக்கிறாய்

 ஹாரிஸின் பிள்ளைகளான அப்துல்லாஹ், அனீஸா, ஷைமா என்ற புனைப் பெயர் கொண்ட ஹுதாபா, ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் பால்குடி சகோதர சகோதரிகள் ஆவர். இதில் ஷைமா என்பவர் நபி (ஸல்) அவர்களை தூக்கி வளர்த்தவர் ஆவார். நபி (ஸல்) அவர்களின் பெரியதந்தையான ஹாரிஸின் மகன் அபூ ஸுஃப்யானும் நபி (ஸல்) அவர்களின் பால்குடி சகோதரர் ஆவார்.

நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஜா அவர்களும் ஸஅத் குடும்பத்தாரிடம் பாலூட்டுவதற்காக ஒப்படைக்கப்பட்டிருந்தார். ஹம்ஜாவின் பால்குடி தாய் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்கும் பாலூட்டினார். இதனால் ஹம்ஜா அவர்களும் நபி (ஸல்) அவர்களும் ஸஅத் குடும்பத்தைச் சேர்ந்த செவிலித்தாய் மற்றும் ஸுவைபிய்யா ஆகிய இருவர் மூலம் பால் குடிச்சகோதரர்களாக இருந்தார்கள். (ஜாதுல் மஆது)

பால் குடிக்காலங்களில் ஹலீமா நபி (ஸல்) அவர்களிடம் பல அதிசய நிகழ்வுகளைக் கண்டார். அதை அவரே சொல்லக் கேட்போம். “நான் எனது கணவர் மற்றும் கைக் குழந்தையுடன் ஸஅத் கிளையைச் சேர்ந்த சில பெண்களோடு பால் குடிக்கும் குழந்தைகளைத் தேடி வெளியில் புறப்பட்டோம். அது கடுமையான பஞ்ச காலம். நான் எனது வெள்ளைக் கழுதையில் அமர்ந்து பயணித்தேன். எங்களுடன் ஒரு கிழப்பெண் ஒட்டகம் இருந்தது. அதில் ஒரு சொட்டு பால் கூட கறக்க முடியாது. எங்களது குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததால் இரவு முழுவதும் எங்களால் உறங்க முடியவில்லை. எனது மார்பில் அக்குழந்தையின் பசி தீர்க்கும் அளவு பாலும் இல்லை. எங்களது ஒட்டகையிலும் பாலில்லை. எனினும், அல்லாஹ்வின் புறத்திலிருந்து என் சிரமத்திற்கான விடிவையும் அவனது அருளையும் பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். நான் வாகனித்த பெண் கழுதை மிகுந்த பலவீனத்துடன் மெதுவாகவே சென்றது. இது என்னுடன் வந்த குழுவினருக்கு பெரும் சிரமத்தை அளித்தது. ஒரு வழியாக மக்காவை அடைந்து பால்குடிக் குழந்தைகளைத் தேடி அலைந்தோம். எங்களுடன் சென்ற அனைத்துப் பெண்களிடமும் அல்லாஹ்வின் தூதரை காட்டப்பட்டது. எனினும், அக்குழந்தை அனாதை என்று கூறப்பட்டதால் அனைவரும் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.

ஏனெனில், குழந்தையின் தந்தையிடமிருந்தே நாங்கள் ஊதியம் பெறமுடியும். இவர்கள் அநாதை என்பதால் தாய் அல்லது பாட்டனார் எங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? என எங்களுக்குள் பேசிக் கொண்டோம். எனவே, அல்லாஹ்வின் தூதரை எடுத்துச் செல்ல எங்களில் எவரும் விரும்பவில்லை. என்னைத் தவிர என்னுடன் வந்த அனைத்துப் பெண்களுக்கும் குழந்தைகள் கிடைத்தனர். அனைவரும் திரும்பிச் செல்லத் தொடங்கியபோது நான் எனது கணவரிடம்அனைவரும் குழந்தையுடன் திரும்புகையில் நான் வெறுங்கையுடன் செல்வதில் எனக்குச் சிறிதும் சம்மதமில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அந்த அனாதைக் குழந்தையை பெற்று வருகிறேன்என்று கூறியதற்கு அவர்தாராளமாகச் செய்யலாமே! அக்குழந்தையின் மூலம் அல்லாஹ் நமக்கு (பரக்கத் செய்யலாம்) வளம் தரலாம்என்றார். நான் அங்கு சென்று குழந்தையை வாங்கி வந்தேன். எனக்கு வேறு எந்தக் குழந்தையும் கிட்டவில்லை என்ற காரணத்தால் மட்டுமே நான் அக்குழந்தையை வாங்கிக் கொண்டேன்.

நான் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பினேன். அக்குழந்தையை எனது மடியில் வைத்தவுடன் எனது மார்புகளில் பால் சுரந்தது. அக்குழந்தை வயிறு நிரம்ப பால் அருந்தியது. அதன் சகோதரராகிய (எனது குழந்தையும்) பாலருந்தியது. பிறகு இருவரும் உறங்கிவிட்டனர். அதற்கு முன் நாங்கள் எங்களது குழந்தையுடன் உறங்க முடிந்ததே இல்லை. எனது கணவர் எங்களது கிழ ஒட்டகையை நோக்கிச் சென்றார். அதன் மடி பாலால் நிரம்பியிருந்தது. அதை கறந்து நானும் எனது கணவரும் பசிதீரக் குடித்தோம். அன்றிரவை நிம்மதியாகக் கழித்தோம். காலையில் எனது கணவர்: ‘ஹலீமாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீ மிகவும் பரக்கத் (வளம்) பொருந்திய ஒரு குழந்தையை அடைந்திருக்கிறாய்என்றார். அதற்கு நான்அப்படித்தான் நானும் நம்புகிறேன்என்றேன்.

http://www.tamililquran.com/history.php?page=53

-------------------------------------------------------------

கவிஞர் வாலி பால்குடி வளர்ப்பு!

பிறந்தது அக்கிரகாரம்!

பால்குடி பள்ளிவாசல் சாரம்...!

அக்கரகாரத்து அந்தணப் பிறப்பு!

அருந்தமிழ் இஸ்லாமியத்தாய்

மடி தவழ்ந்த பால்குடி வளர்ப்பு!

பாடல்கள் முளைத்த மனத்தின் சிறப்பு!

வெற்றிலை குதப்பிய இதழின் நடப்பு!

அத்தனையும் கவிதை விரிப்பு!

இன்று பிறந்தநாள்

நினைவில் இருப்பு!

Hilal Musthafa

---------------------------------------------------------------

பால்குடி உறவினர்கள் அல்லவோ..!

——————————/———————

தானும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் முஸ்லிம் தாயிடம் பால்குடித்து வளர்ந்தவர்கள் என்று ஏகம் பாடல் தொகுப்பின் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியோடு  பேசினார் கவிஞர் வாலி.

தேவரய்யாவுக்கும் கவிஞர் வாலிக்கும் இன்று பிறந்தநாள் கொண்டாடப்படும் சூழலில் எழுந்தது ஒரு சுகமான நினைவு..

வாலி இதை எப்படி எழுதுவார் என சிறு கற்பனை..

வாள் குடி பிறந்த

 மறவனையும்

நூல் குடி பிறந்த

புலவனையும்

ஓர் குடி யாய் உணர வைத்தது

ஒரு முஸ்லிம் தாயிடம் பருகிய

பால்குடி

சரிதானே வாலிப வாலியின் பாணி..

வாலி நினைவுகள் வாழி

(இன்று கவிஞர் வாலி

Haja Gani

-----------------------------------------------

ஆயிஷா அம்மையார்

என்கிற

இஸ்லாமியத் தாயின் வளர்ப்புமகன்.....

அந்தத்

தீன் குலத்துத் தாயின் பால்குடித்து

வளர்ந்த......

தேவர் திருமகன்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனக்குச் சொந்தமான கிராமங்கள் பலவற்றை எழுதி வைத்து விட்டு சென்றவர் !!!

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது எனக்கு பாலூட்டிய ஆயிஷா பீவி அன்னையின் மீது ஆணையிட்டு சொல்கிறேன். முஸ்லிம்கள் பாகிஸ்தானை விட இந்தியாவை யே அதிகம் நேசிக்கிறார்கள். நிச்சயம் தமிழக முஸ்லிம்கள் இம்மண்ணை விட்டு போக மாட்டார்கள் என்று சொல்லியவர் !!

காந்தி இறந்த போது முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் உண்டாக்க போடப்பட்ட ரகசிய திட்டங்களை உடைத்து , இந்து முஸ்லீம் ஒற்றுமையை  காத்த மாமனிதர் !!!

வடக்கே அடிப்பது போல் தமிழகத்தில் முஸ்லிம்களை அடித்து விடலாம் என்ற எண்ணத்தில்  கலவரம் உண்டாக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு முன்னால் நிற்பான் இந்த அடியேன் என்று சவால் விட்டவர் !!!

கடும் கலவரம் எதிர்ப்புகளுக்கும் மத்தியில், விளிம்புநிலை மக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே கூட்டிச் சென்று, தரிசிக்க வைத்து ஆதிக்கத்தை அலற விட்டவர் !!!

வாழ்க

#தேவர்_திருமகன் புகழ்!

Lks Meeran Mohideen

No comments: