#முத்தஸீர்
மறைவான
ஞானமிக்கவர்
மக்கா
நபிகளை
கொன்று
விடத் துடித்தது
இறைவனின்
கட்டளையோ
நபிகளை
யத்ரிபுக்கு
பயணிக்க வைத்தது !
முஹம்மதை
கொன்று
வருவோர்க்கு
ஒட்டகங்கள்
நூறு பரிசு என
கொக்கரித்தான்
குறைஷியரின்
மூடத் தலைவன்
அபு ஜஹல் !
சுராக்கா
...
அபு ஜஹலின் ஆதரவாளன் !
பொன்னுக்கும்
பொருளுக்கும்
ஆசைப்பட்டு
பாலைப்
பெருவெளியில்
புரவியைப்
பாயவிட்டு
பெருமானைப்
பிடிக்க வந்தான் !
நெருங்கி
வந்த
பேராசைக்காரனை
" அருகில்
வராதே " என
நபிகள்
எச்சரித்தார் !
நூறு ஒட்டகங்களின்
மயக்கத்தில்
இருந்தவன்
நபிகளின்
எச்சரிக்கையை
காற்றில்
பறக்க விட்டான் !
நபிகள்
காற்றை
ஊதி விட்டார் !
சுராக்காவோடு
அவன் புரவியும்
மண்ணில்
புதைய ஆரம்பித்தது !
அண்ணலின்
ஆற்றலை
புரிந்து கொண்ட
சுராக்கா
அலறினான் ...
" அண்ணலே
அபயம் தாருங்களேன் "
எனக் கெஞ்சினான் !
மன்னர்
மஹ்மூதர் மன்னித்தார் !
நபிகளின்
கரம் தொட்ட
வெறியனவன்
நபி நேசர் ஆனார் !
" யா
ரஸூலல்லாஹ் ...
அரபுலகை
தாங்கள்
ஆட்சி செய்யும்
காலத்தில்
என்னுயிர்
காக்கப்பட
வேண்டும் "
என்று காவலும் தேடினார் !
காலனாக
வந்தவனே
காவல் தேடிய விந்தையை எண்ணி
உடன் வந்த தோழர் அபுபக்கர்
புன்னகைப்
புரிந்தார் !
மறைவான
ஞானமெலாம்
மறையோனருளால்
நிறைவாகப்
பெற்றிருந்த
மக்கத்து
மாநபி ...
" காவல்
பெறுவீர்
அத்துடன்
பாரசீகப்
பேரரசின்
பொற்காப்புகளை
பரிசாகப்
பெறுவீர் "
என வாக்களித்து
சுராக்காவை
பிரமிக்க
வைத்தார்கள் !
கலீபா உமரின்
ஆட்சி காலத்தில்
பாரசீகம்
வெற்றி
கொள்ளப்பட்டது !
அரண்மனை
பொற்காப்புகள்
சுராக்காவுக்கு
பரிசளிக்கப்பட்டு
அண்ணலின்
அருள்வாக்கு
ஹயாத்தாக்கப்பட்டது
!
வாழ்ந்தாலும்
மறைந்தாலும்
தங்கள்
அருள் வாழ்வு
மறையாது
என உணர்த்திய
மஹ்மூது
நபிகள் பிரானே
உங்களின்
மீது இறைவனின்
வாழ்த்துக்கள்
இறங்கிக்
கொண்டே இருக்கட்டும் !
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
No comments:
Post a Comment