யாரஸூலல்லாஹ்
...
தாங்கள்
முபஷ்ஷிர்
...
நன்மாராயம்
கூறுபவர் !
தோழர் அபுபக்கருக்கும்
உத்தமர்
உமருக்கும்
நேசமிகு
உஸ்மானுக்கும்
மாவீரர்
அலீ பின் அபுதாலிபுக்கும்
பேரப் பிள்ளைகள்
ஹஸன் ஹுஸைனுக்கும்
தங்களின்
ஈரல்குலையாம்
ஃபாத்திமுத்து
ஜொஹராவுக்கும்
கஸ்தூரி
மணம் கமழும்
தங்களின்
திருவாயால்
சொர்க்கத்தின்
வாசல்களை
திறந்து
வைத்த
கொடையாளர் !
எத்தனை
எத்தனையோ
உத்தமத்
தோழர்கள்
உங்கள்
இதழ் சிந்திய
நன்மாராயத்தால்
பிறவிப்
பயனைப் பெற்றார்களே !
பெருமானே
எங்களின்
தவப்பயனே ...
தங்கள்
நன்மாராயத்தால்
சுவனத்தின்
புல் தரைகளில்
ஒரு புல்லாக முளைத்தாலும்
நாங்களும்
ஈடேற்றம்
பெறுவோமே ... !
#அஸ்ஸலாத்து_வஸ்ஸலாமு_அலைக்க
#யா_ரஸூலல்லாஹ்
அஸ்ஸலாத்து_வஸ்ஸலாமு_அலைக்க
#யா_ஹபீபல்லாஹ்
No comments:
Post a Comment