அன்பு இதில் அகப்படுபவர்களை
அது கஷ்டப்படுத்துகிறது..
வெளிப்படையாக
பேசுபவர்களை
அது எப்போதும் விரோதிகளாய் பார்க்கிறது..
மனம் திறந்து
பேசுவதை
அது பைத்தியமாக்குகிறது..
பிரதிபலன்
பாராதவர்களின் பலகீனத்தை
அது பக்குவமாக கையாள்கிறது..
ஏமாந்தவர்களை
அது இளிச்சவாயனாய் ஆக்குகிறது..
தேவைக்கு
பயன்படுத்துவதை அது அறியாமல் இருக்கிறது..
காரியம்
முடிந்ததும் கழற்றி விடுவது தெரிந்தும்
அடுத்த காரியத்திற்கு போய் விடுகிறது...
அன்பு அசிங்கப்படுத்தும் போதும் பொறுமை
கேவலமாகும்
போதும்
அமைதி மேலும் அமைதியாகிறது..
அமைதியான
அன்பு சிலநேரம் திமிர் ஆக தெரிகிறது..
அன்பை புரிந்து கொள்ள முடியாத போது
அமைதியையும்
புரிந்து
கொள்ள
முடியாது..
அமைதியை
புரிந்து கொள்ளாத போது
வந்து விழும் வார்த்தைகளையும்
புரிந்து
கொள்ள முடியாது.
அமைதியின்மைக்கு
மற்றவர்களுடைய
அனுமதி தேவை..
அமைதிக்கு
நாம்
மட்டும்
போதும்...
மனம் அமைதியானால் இதயம் உறங்குகிறது..
இதயம் உறங்க
அமைதி தேவைப்படுகிறது..
மனசாட்சி
உடையவர்கள் அன்பால் அமைதியின்றி தவிக்கிறார்கள்..
மனசாட்சியை
தொலைத்தவர்கள்
அன்பின்றி அமைதியாக வாழ்கிறார்கள்...
No comments:
Post a Comment