Sunday, October 31, 2021

மதம் என்பது புனிதமானது மற்றும் தனிநபர் சார்ந்தது

 ஷமியை விமர்சித்தவர்கள் குறித்து விராட் கோலி கூறியது என்ன?

ஒருவரை அவரின் மதம் சார்ந்து தாக்கி பேசுவதுதான் மனிதர்கள் செய்யும் மிக மோசமான காரியமாக இருக்க முடியும்" : விராட் கோலி

Friday, October 29, 2021

மிகவும் பரக்கத் (வளம்) பொருந்திய ஒரு குழந்தையை அடைந்திருக்கிறாய்

 ஹாரிஸின் பிள்ளைகளான அப்துல்லாஹ், அனீஸா, ஷைமா என்ற புனைப் பெயர் கொண்ட ஹுதாபா, ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் பால்குடி சகோதர சகோதரிகள் ஆவர். இதில் ஷைமா என்பவர் நபி (ஸல்) அவர்களை தூக்கி வளர்த்தவர் ஆவார். நபி (ஸல்) அவர்களின் பெரியதந்தையான ஹாரிஸின் மகன் அபூ ஸுஃப்யானும் நபி (ஸல்) அவர்களின் பால்குடி சகோதரர் ஆவார்.

நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஜா அவர்களும் ஸஅத் குடும்பத்தாரிடம் பாலூட்டுவதற்காக ஒப்படைக்கப்பட்டிருந்தார். ஹம்ஜாவின் பால்குடி தாய் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்கும் பாலூட்டினார். இதனால் ஹம்ஜா அவர்களும் நபி (ஸல்) அவர்களும் ஸஅத் குடும்பத்தைச் சேர்ந்த செவிலித்தாய் மற்றும் ஸுவைபிய்யா ஆகிய இருவர் மூலம் பால் குடிச்சகோதரர்களாக இருந்தார்கள். (ஜாதுல் மஆது)

Thursday, October 28, 2021

அல்லாஹ்வின்அற்ப்புதம்

 

#அல்லாஹ்வின்அற்ப்புதம்



 

#ப்ளோவர்'   புறா போன்ற ஒரு  பறவை இதற்கான உணவு எங்கே கிடைக்கிறது தெரியுமா?

#முதலையின் வாயில்

 

ஆம், முதலை கொழுப்பான உணவுகளை உண்ட பின் அதன் பற்களுக்கிடையே உள்ள கொழுப்பை அகற்ற முடியாமல் வாயைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கும்.

#ப்ளோவர் பறவை தைரியமாக வாயில் அமர்ந்து கொண்டு பற்களுக்கிடையே உள்ள கொழுப்பை உண்ணும்

அதுதான் அதற்கான உணவு. 

 

அப்பறவை உண்டு முடியும் வரை முதலை வாயை மூடாது

 

வாயை மூடக்கூடாது என்று முதலைக்கும், உணவு அங்கே கிடைக்கும் என அப்பறவைக்கும் கற்றுக் கொடுத்தவர் யார்?

#அல்லாஹ் அழகான படைப்பாளன்

__அஷ்ஷைக் ராத்திப் அந்நாபிலிஸி

-----கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி காசிமி

––,

மக்தூம் விஞ்ஞானத்தை விளக்குகிறார்

Let us learn some science from Makthoum

 

Wednesday, October 27, 2021

குறுங்கதைகள்-கானல் / Mubeen Sadhika

 

குறுங்கதைகள்-கானல்

அவன் வீட்டின் ஜன்னலிலிருந்து பார்த்தால் சற்று தொலைவில் இருக்கும் வீட்டின் ஜன்னலும் அந்த வீட்டில் நடப்பதும் தெரியும். அது இருக்கும் தொலைவை விட அருகில் இருப்பது போல் தெரியும். அது கானல் நீர் போன்ற காட்சி என பிறகு புரிந்துகொண்டான். எப்போதும் அந்த வீட்டில் நடப்பதை இவன் உன்னிப்பாகக் கவனிப்பதில்லை. அன்றிரவு அந்த வீட்டில் ஏதோ வித்தியாசமான ஒலி வந்ததால் அந்த ஜன்னலில் பார்த்தான். ஒருவன் ஒரு பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தான். இவனுக்குப் பெரும் அதிர்ச்சியாகிவிட்டது. அந்த வீட்டுக்குச் சென்று என்ன நடந்தது என்று பார்க்கலாம் எனக் கிளம்பினான்.

Saturday, October 23, 2021

யாசகன்

 

Abu Haashima

#யாசகன்

இரவு நேரம் .

கடைவீதியில் நின்று கொண்டிருந்தேன் ...

மிக ஏழையான ஒருவர்

என்னை மெதுவாகக் கடந்து சென்று கொண்டிருந்தார்.

ஒடிசலான  மனிதரவர் .

மெல்லிசான குரலில் ...

" ஒரு சாயா குடிக்க காசு கிடைக்குமா " என்று கேட்டார்.

கேட்டு விட்டு பதிலுக்குக் கூட காத்திருக்காமல் அவர் போக்கில்

போய் கொண்டிருந்தார்.

என்னடா இப்படி கேட்டுட்டுப் திரும்பிப் பார்க்காம போறாரேன்னு ஆச்சர்யபட்டேன்.

மூளை உடனே வேலை செய்யலே.

அப்புறம் சுதாரிச்சுகிட்டு

வேகமாக ஓடிப் போய்

" சாயா வேணுமா அண்ணே " என்று கேட்டேன் .

ஆமாம் என்று தலையாட்டினார்.

அவர் முகத்தில் ஒரு கூச்சம் குடியிருந்தது .

Thursday, October 21, 2021

" வெள்ளிக் கிழமையின் மாட்சி மாட்சி "

 

" வெள்ளிக் கிழமையின் மாட்சி மாட்சி "

வெள்ளியை

பெயரிலே வைத்திருந்தாலும்

தங்கமான நாள்

வெள்ளிக் கிழமை !

முந்தைய இரவிலேயே

ஆரம்பமாகி விடுகிறது

ஜும்மா நாளின்

கொண்டாட்டம் !

வழக்கம் போல்

சூரியன்

விழிப்பதற்கு முன்னாலேயே

விழிக்க வைக்கும்

பிலாலின் அழைப்பு

Tuesday, October 19, 2021

எந்தவொரு மனிதரும் சமூகமும் முன்னேற கல்வி இன்றியமையாதது.

 





M.K.Stalin

@mkstalin

எந்தவொரு மனிதரும் சமூகமும் முன்னேற கல்வி இன்றியமையாதது. அத்தகைய கல்வித் தொண்டில் சிறந்து விளங்கும் இலயோலா கல்விக் குழுமத்தின் மேலாண்மை கல்வி நிறுவன புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தேன்.

தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் பட்டம் பெற்றவர்கள் என்பதே நமது இலக்கு! அதனை நோக்கி வேகநடை போடுவோம்!

----------------------------------------

முரசொலி செல்வமும் இங்குதான் லயோலாவில் படித்தார் 

நானும் இங்குதான் படித்தேன் 




Monday, October 18, 2021

KAYAL ELAVARASU WIN GANANGAL - PENGALUKKU MUN MAADHIRI- AMEENA 2020 HD O...

KAYAL ELAVARASU WIN GANANGAL- RAHEEMA BEGUM- HIJIRI NEW YEAR SONG TAMIL...

KAYAL ELAVARASU WIN GANANGAL - "PATRI PIDIKKA"- AHMAD SALIH FAHEEMI- TAMIL DEVOTIONAL SONG 2021

 Pattri Pidikka

Singer : Ahmad Salih Faheemi
Music : Fahmi Farooqi
Visual Editing : Hameed Nagori

முயற்சி நம்மிடம் முடிவு இறைவனிடம்

நாம் விரும்பிய விலைமதிப்பற்ற துல்லியமான பொருளைப் பெற பல இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் உருவாகின்றது .அதனால் ஏற்படும் சிரமங்களும் பாதிப்புகளும் நம்மை சோர்வடையச் செய்வதில்லை.ஆதாயம் கிடைக்க சோம்பலும் அலட்சியமும் நம்மைவிட்டு அகன்றுவிடுகின்றது .

வேண்டிய பொருள் உடனேயே கிடைக்கலாம் அல்லது தாமதமாகவும் கிடைக்கலாம் .அதற்க்கென்று நமது முயற்சியை விட்டுவிடுவதில்லை .தாமதமாக கிடைக்க நமக்கு வேண்டிய பொருளும் பல அனுபவங்களும் கிடைத்துவிடுகின்றன

முயற்சி நம்மிடம் முடிவு இறைவனிடம்

Sunday, October 10, 2021

யாரஸூலல்லாஹ் ... தாங்கள் முபஷ்ஷிர் ... நன்மாராயம் கூறுபவர் ! / abuhaashima

 Abu Haashima



யாரஸூலல்லாஹ் ...

தாங்கள்

முபஷ்ஷிர் ...

நன்மாராயம் கூறுபவர் !

தோழர் அபுபக்கருக்கும்

உத்தமர் உமருக்கும்

நேசமிகு உஸ்மானுக்கும்

மாவீரர் அலீ பின் அபுதாலிபுக்கும்

பேரப் பிள்ளைகள்

ஹஸன் ஹுஸைனுக்கும்

தங்களின் ஈரல்குலையாம்

ஃபாத்திமுத்து ஜொஹராவுக்கும்

கஸ்தூரி மணம் கமழும்

தங்களின் திருவாயால்

சொர்க்கத்தின் வாசல்களை

திறந்து வைத்த

கொடையாளர் !

Abu Haashima #முஹம்மத் #புகழப்பட்டவர்

 


Abu Haashima

#முஹம்மத்

#புகழப்பட்டவர்

அரபகக் கவிஞர்கள் முதல்

தமிழகக் கவிஞர்கள் வரை

அகிலம் முழுக்க

அமுதக் கவிகளால்

அலங்காரம் செய்தது

உங்களைத்தானே

யா ரஸூலல்லாஹ் ... !

நூருல்லாஹ்வும் தாங்கள்

நூரே முஹம்மதும் தாங்கள்

ஹிரா மலைக் கல்லுக்கும்

Abu Haashima #முத்தஸீர் மறைவான ஞானமிக்கவர்

 


Abu Haashima

#முத்தஸீர்

மறைவான ஞானமிக்கவர்

மக்கா

நபிகளை

கொன்று விடத் துடித்தது

இறைவனின் கட்டளையோ

நபிகளை

யத்ரிபுக்கு பயணிக்க வைத்தது !

முஹம்மதை

கொன்று வருவோர்க்கு

ஒட்டகங்கள் நூறு பரிசு என

கொக்கரித்தான்

குறைஷியரின் மூடத் தலைவன்

அபு ஜஹல் !

சுராக்கா ...

அபு ஜஹலின் ஆதரவாளன் !

சிகரத்தை நோக்கி நிகழ்ச்சியில் நாகர்கோவில் உஹாசேவா அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முஹம்மது கபூர் அவர்கள்...

 

"சிகரத்தை நோக்கி" நிகழ்ச்சியில் "குளச்சல் அசீம்" அவர்கள்.

 

"நஸ்ருன் மினல்லாஹ்" திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பேசுகிறார் அதன் ஒருங்கிணைப்பாளர் "ஹிதாயத்துல் நயீம்" அவர்கள்.

 


நான் படாத கஷ்டமே இல்லை பிழைக்கவே மாட்டேன் என்று நினைத்தேன்/Minister Ma Subramanian latest speech on Neet

 

Friday, October 8, 2021

Noor Saffiya 💞 இறைசிந்தனை اهلا وسهلا ياشهر النور அ _ருள் மறை ஃபுர்கான் அள்ளினேன்; பூக்களாய்!

  

Noor Saffiya

💞 இறைசிந்தனை

اهلا وسهلا ياشهر النور

_ருள் மறை ஃபுர்கான்

அள்ளினேன்; பூக்களாய்!

அஹ்மதர் வரவினாலே!

அகம் திறக்க புறத்தில்

அசுத்தம் மிரண்டோடியதே!

சேவை அரசர் முகம்மது கபூர் அவர்களின் காணொளி காட்சி

 சேவை அரசர்

முகம்மது கபூர் அவர்களின்

காணொளி காட்சிகள் ....

உகாசேவா மருத்துவமனையில்

மனிதநேய பண்பாளர்

வேட்டி உடுத்தி

பேட்டி கொடுக்கிறார் ....

அருமையான சந்திப்பு

Thursday, October 7, 2021

புரிந்து கொள்ள மாட்டார்களா…..

 

புரிந்து கொள்ள மாட்டார்களா…..

 தன்னை மற்றவர்கள் ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என ஏங்காதவர்களே இல்லை என்று சொல்ல்லாம். அது வீடோ அலுவலகமோ உறவோ நட்போ ஏதாவது ஒரு தளத்தில் ஒவ்வொருவரும் எதிர் கொள்ளும் உணர்வு இது. கணவர் புரிந்து கொள்ளவில்லை, மனைவி புரிந்து கொள்ள வில்லை, பாஸ் புரிந்து கொள்ள வில்லை உறவுகள் நட்புகள் புரிந்து கொள்ள வில்லை என்று வருந்தாதவர்கள் குறைவு. முரண்பாடு இல்லாத உறவு என்பது நடைமுறையில் சாத்தியமானதா என்று சற்றே யோசித்தாலும் யதார்த்தம் உங்களுக்குப் புரிந்து விடும்.

 நட்பு, உறவு என எல்லாவற்றிலும் புரிதல் மிக முக்கியம்தான். ஆனால் சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளரும் உடன்பிறப்புகளுக்கு இடையிலாகட்டும், ஒன்றாக படித்து வளரும் நண்பர்களிடையிலாகட்டும், மிக அந்நியோன்னியமாக இருக்கும் கணவன் மனைவிக்கிடையிலாகட்டும், பெற்றோர் குழந்தைகளுக்கு இடையிலாகட்டும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவர்கள் நம்மை புரிஞ்சுக்கவே இல்லையே என்ற ஆதங்கம் நிச்சயம் வரத்தான் செய்யும்.

 இப்படி ஒவ்வொருவரும் என்னை இவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்று மனம் நொந்து கூறாமல் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று முயற்சித்தால் அங்கு பிரச்சனைகள் குறைந்துவிடும். சரியான புரிதல் இருந்துவிட்டால் பிரச்சினை எழுந்தாலும் தீர்வும் உடன் பிறந்து விடும்.

 

 

Tuesday, October 5, 2021

இதயம் உறங்க அமைதி தேவைப்படுகிறது..

 

Saif Saif

அன்பு இதில் அகப்படுபவர்களை

அது கஷ்டப்படுத்துகிறது..

வெளிப்படையாக பேசுபவர்களை

அது எப்போதும் விரோதிகளாய் பார்க்கிறது..

மனம் திறந்து

பேசுவதை அது பைத்தியமாக்குகிறது..

பிரதிபலன் பாராதவர்களின் பலகீனத்தை

அது பக்குவமாக கையாள்கிறது..

இறைசிந்தனை உள்ளுணர்வினிலே!

Noor Saffiya


·

💞இறைசிந்தனை

உள்ளுணர்வினிலே!

ஊடுருவிய என் ஹபீபே!

உணர்ந்தேன் ரசூலே!

உட்கார்ந்தால் தவமானது!

நின்றேன் ;

Friday, October 1, 2021

முதியவர்களை மதியுங்கள்

 

Did You Know virtualexpo.world

 பார்த்து ரசியுங்கள் DUBAI EXPO 2020 !

இங்கு கிளிக் செய்யுங்கள் https://virtualexpo.world



DUBAI EXPO 2020 !

வெத்து பாலைவனம்….. வெறும் மண்ணுஇன்னைக்கு பொன் வெளையற பூமியா மாறிடுச்சிமேஜிக்காய்யா? ஆமாம் மேஜிக்தான்..ஒரு மனுஷனோட தனிப்பட்ட மூளை செய்த மேஜிக்…..இத்தனைக்கும் அரசாட்சிஎவனும் ஏன் செய்யலைன்னு கேள்வி கேட்க முடியாதுஆனா இந்த மனிதர் தன் மனசாட்சி கேள்விக்கு பயந்தார்நாளைக்கு மறுமையில்மக்களுக்கு என்ன செய்தாய்ங்கற கேள்வி வந்தால்..

உலகமே மூக்குல வெரலை வைக்கறாய்ங்கஎப்படி சாத்தியம்? இதோ கண் முன்னே விடை.. மனமிருந்தால் மார்க்கம் உண்டுசமீபத்துல துபாய் மன்னர் ஆங்கில பத்திரிக்கைக்கு தந்த ஒரு பேட்டி

எதுக்கு இவ்வளவு உயரம் உயரமான கட்டிடங்களை கட்றீங்க?

என் நாட்டை உலகம்  தலையை நிமிர்ந்தே பார்க்கணும்….!

ஒங்களுடைய நோக்கம்தான் என்ன?

என் மக்களுக்கான அனைத்து வசதிகளும் ஹெல்த்கல்விஅத்தனையும் கிடைக்க செய்யணும்..

இறைசிந்தனை 🌹 பசுமை 🌹

 நூர்ஷஃபியாகாதிரியா



💞 இறைசிந்தனை

          🌹 பசுமை 🌹

பச்சை பசேலென்று

பாரின் அமைப்பானேன்!

பாச நபியின் குணம்

பார்த்தேன் படைப்பானேன்!

பாரினில் குளிர் சோலை

பசுமை எனும் படைத்தவனில் பசுமரத்தாணியானேன்!

பேசும் நாவிற்கென தந்த

பேரின்ப சலவாத் ஆனேன்!

படைத்தோன் வஹியால்

பெற்ற மறையானேன்!

படைப்பின் புனிதமானேன்!

ஏன் மறந்தாய் யூசுஃபை

 நிஷாமன்சூர்

ஏன் மறந்தாய் யூசுஃபை

எனதன்புச் சகோதரனே ?

நெருக்கடியில் உடனிருந்து

நம்பிக்கையளித்த நண்பரை

சிறைச்சாலையின் நிராதரவில்

ஆதுரமாய் மிளிர்ந்த தோழரை

கனவுகளுக்கு விளக்கமளித்து

காரிருள் போக்கிய பேரழகரை

அரசவையின் அதிகாரத்தைச்

சுவைத்திருந்த காலங்களில்

ஏன் மறந்தாய்