Sunday, February 24, 2013

பாருக் அலியின் பயணம் Farook Ali is a wise traveler

பாருக் அலியின் பயணம் Farook Ali is a  wise traveler பாருக் அலியின் பயணம்- Farook Ali is a  wise traveler
"He who does not travel does not know the value of men." -- Moorish proverb
"Love is the only flower that grows and blossoms Without the aid of the seasons." - Kahlil Gibran quotes

"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Tzu

"Travel and change of place impart new vigor to the mind." -- Seneca

"A wise traveler never despises his own country." -- Carlo Goldoni

You cannot change the circumstances, the seasons , or the wind, but you can change yourself. That is something you have charge of." Jim Rohn

The day you decide to do it is your lucky day.
-Japanese proverbs

"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Thu

Happiness comes when you focus on seeing the light at the end of every tunnel and being the light for those you love ~ Karen Salmansohn

By being yourself, you put something wonderful in the world that was not there before.

Nothing ever goes away until it teaches us what we need to know ~ Pema Chodron

Lighthouses don't go running all over an island looking for boats to save; they just stand there shining ~ Anne Lamott

The practice of forgiveness is our most important contribution to the healing of the world ~ Marianne Williamson

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

யாருங்க இவர் ..................?

யாருங்க இவர் ..................?

1.திருச்சி , விமான நிலையம் அருகில் தங்களுக்கு இருந்த சொந்த இடத்தை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கிய குடும்பத்தின் வாரிசு !

2. 14 ஆண்டுகள் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர்

3.நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் இலவசமாக உண்ண உணவும் , இருக்க இருப்பிடமும் அளித்து ,கல்வி கற்கச் செய்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி,இன்று உலகெங்கிலும் பெரும் மேதைகளாக , பெரும் பணக்காரர்களாக , பெரும் தொழில் அதிபர்களாக பரவி வாழ்வதற்கு தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர் .

4.சென்னை பல்கலைகழக முன்னாள் செனட் சபை உறுப்பினர் .

5.பாரதிதாசன் பல்கலைகழக முன்னாள் நிலைக்குழு உறுப்பினர்

6. எல்லா மாநில மாணவர்களும் , டெல்லி சென்று தங்கள் கல்விச் சான்றிதழ்களை அட்டஸ்டேசன் பண்ணனும் என்று நிலையில் ,ஏழை மாணவர்கள் படும் கஷ்டத்தை கண்டு வருந்தி ; அந்ததந்த மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரத்தை மத்திய அரசு வழங்க காரணமாகத் திகழ்ந்தவர் .

7. சச்சார் கமிஷன் , ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அமைய காரணமாக இருந்தவர் .

8.வேலூர் பாரளுமன்ற உறுப்பினராக இருந்தவர் .

9.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாணவர் அணி தலைவர் , மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ,மாநில கலாச்சாரப் பிரிவு செயலாளர் , மாநில அமைப்புச் செயலாளர் ,மாநில பொதுச்செயலாளர் , இன்று மாநில தலைவர் மற்றும் அகில இந்திய பொதுச்செயலாளர் என்று தன் உழைப்பால் படிபடியாக உயர்ந்தவர்

நம் இனமானப் பெருந்தலைவர் , முனிருல் மில்லத் ,பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் !

ஸ்டார் விடுதிகளில் தங்கிக்குக் கொண்டு , சின்னத் திரை பேட்டிகளுக்கு ஆள்கள் மூலம் தங்களை வரவழைக்கச் செய்து , மேக்கப் பண்ணிக் கொண்டு சமுதாயத் தலைவர்கள் என்று பவனி வருபவர்கள் மத்தியில் , எம்பெருமானார் காட்டிய வழியில் அரசியல் நடத்திய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களை தன் அரசியல் தலைவராக ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய சமுதாயத்தின் மானம் ,மரியாதையை ,இச்ஷத்தை காப்பாற்ற பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைமகன் பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்கள் தலைமையில் நாம் பணி செய்வது அல்லா நமக்களித்த பெரும் பாக்கியம் !

அல்ஹம்துலில்லாஹ் ! அல்லாஹு அக்பர் !

யா அல்லாஹ் ! பேராசிரியர் கே. எம்.காதிர் மொஹிதீன் அவர்களுக்கு நல்ல உள்ளவளமும், உடல் வளமும் கொடுத்து சமுதாயத்தை தலைமை தாங்கி நடத்திட அருள்புரிவாயாக !
தகவல் தந்தவர்கள்











Hassane Marecan





Skm Habibulla

Saturday, February 23, 2013

முடிகொண்டானிலிருந்து வந்து மயிலாடுதுறைக்கு மகுடம் சூட்டிய மருத்துவர் ராமமூர்த்தி

முடிகொண்டானிலிருந்து வந்து மயிலாடுதுறைக்கு மகுடம் சூட்டிய மருத்துவர் ராமமூர்த்தி Dr.V.Ramamurthi.M.B.B.S.,
                                                                                இந்த பட உதவி 

மயிலாடுதுறை சுற்று வட்டார மக்களுக்கு ராமமூர்த்தி டாக்டர் மிகவும் நேசமானவர்.
மருத்துவம் இவருக்கு ஒரு சேவையானது,
இவரது தந்தை S.வெங்கட்ராமன் S.Venkaetaraman
தாய் V. ராதை V.Rrathai
பிறப்பு :ஊர்- முடிகொண்டான்
மருத்துவர் ராமமூர்த்தி அவர்களுக்கு ஒரே மகனார் Dr.SRINIVASAN அவரும் ஒரு சிறந்த மருத்துவர் .
Dr.SRINIVASAN சிறுநீரக சிகிச்சை நிபுணர்( Dr.SRINIVASAN.M.S., DNB(GS),DNB.(URO) FRCS
CONSULTANT UROLOGIST
மருத்துவர் ராமமூர்த்தி மருமகளும் ஒரு மருத்துவர். தனது மகன் சென்னையோடு தன்னோடு இருக்கச் சொல்லியும் மயிலாடுதுறை மக்கள் நலம் நாடி தனது மனைவியோடு இருந்து தொடர்ந்து மருத்துவ சேவை  செய்து வருகின்றார். அவர் தான் பார்க்கும் நோயாளிகளிடமிருந்து பணம் கேட்பதே கிடையாது . நாமே விரும்பி அவரது மேஜையில் ஐந்து ,பத்து ,இருபது நம் விருப்பத்திற்கு நம் திருப்திக்கு வைத்து வர வேண்டியதுதான். சிலர் குறிப்பாக ஏழைகள் பணம் தருவதை அவர் விரும்புவதில்லை .'உங்களுக்காகவே இங்கு இருக்குறேன்  தனது மகன் சென்னையோடு தன்னோடு இருக்கச் சொல்லியும் போகாமல் இருக்கிறேன்' என்பார் .
அவர் வேண்டுதலுக்கு இணங்க அவர் மகனும் ஒரு மாதத்தில் இரண்டு நாட்கள் தன் தந்தையோடு இருந்து நீர் வியாதிக்கான வைத்தியம் பார்கிறார் .அவரும் அதிகமாக பணம் வாங்குவதில்லை.
 எங்கள் குடும்பத்தோடு மிகவும் நெருக்கமானவர் . அவரது தந்தை எனது பெரியப்பாவை மிகவும் நேசிப்பார் .ராமமூர்த்தி டாக்டர் அவர்களுக்கு கும்பகோணம் சிட்டி யூனியன் கணக்கு திறக்க எங்கள்  பெரியப்பா மயிலாடுதுறையில் பெரிய கடை வீதியில் அப்துற்  ரஹ்மான் சாஹிப் ('பெரிய முதலாளி ' என்று அழைப்பார்கள்) கையழுத்திட்டு தொடங்கி வைத்தார் என பெருமையாக விசுவாசமாகச்  சொல்வார் .இன்றும் சொன்னார்.

நீயா நானாவில் நடக்கும் நிகழ்ச்சி. சமூக அலசல் / அவலம்

இன்றைய இளையத் தலைமுறையின் அவலம்!
2020 இந்தியா வல்லரசாகும் என்ற கனவு காணும் வாழ்க்கை/கனவில் மிதந்துக்கொண்டிருக்கும் நம்மவர்கள் காண வேண்டிய ஒரு தகவல் / சூழ்நிலை. தற்போதைய கல்வித்திட்டங்களும்,கல்விக்கூடங்களும் உருவாக்கிக்கொண்டிருக்கும் தமிழக இளைய சமூகத்தின் சில சாட்சிகள்....  படைப்பாளிகளும், சமூக சிந்தனையாளர்களும், கல்வியாளர்களும், போராட்டவாதிகளும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் சொல்வதை கேளுங்கள். அடிப்படை அறிதல்  படிப்பதோடு முடிகிறதா? நீங்கள் சிந்தியுங்கள் 

'சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் .!!!!
M.A.தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவருக்கு பிடித்த தமிழ் எழுத்தாளர்?

1.மு.வ. 2. கோபிநாத்....சாரி..!

எங்களுக்கே தமிழ் வாசிக்கும் தன்மை குறைந்து விட்டது .' தொடர்ந்து காணொளியை காணுங்கள்

Friday, February 22, 2013

எங்கும் இருப்பவனே...

குர்ஆன் மற்றும் ஹதீதுகளும் அல்லாஹ் அர்ஷின் மீது தான் இருக்கின்றான் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹுவின் கூற்றுக்கள்:

1. அர்ரஹ்மான் அர்ஷின் மீது இருக்கின்றான். (அல்குர்ஆன் 20:5)

அதாவது, அல்லாஹ் உயர்வான இடத்தில் இருக்கின்றான் என்பதாக பல தாபிஈன்கள் இந்த ஆயத்திற்கு விளக்கமளிக்கின்றார்கள். இந்தச் செய்தி, புகாரியில் பதியப்பட்டிருக்கின்றது.

2. வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொருகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும். (அல்குர்ஆன் 67: 16)

அதாவது, வானத்தில் இருப்பவன் என்பதின் கருத்து, அல்லாஹ் என்பதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

3. அவர்கள் தங்களுடைய மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனை பயப்படுகிறார்கள்; இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள். (அல்குர்ஆன் 16:50)

இங்கு, அவர்கள் என்று கூறப்பட்டிருப்பது மலக்குகளாகும். அவர்கள் அவர்களுக்கு மேலிருப்பவனை பயப்படுகிறார்கள் என்றால், அந்த அல்லாஹ்வைத் தான் குறிக்கின்றது. இந்த வசனத்திலிருந்து அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பது தெளிவாகின்றது.

4. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4 :158)
அதாவது, வானத்திற்கு உயர்த்திவிட்டான். இந்த ஆயத்தும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

5. இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயகனாகிய) அல்லாஹ் உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான். இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (அல்குர்ஆன் 6: 3)

இமாம் இப்னு கஸீர்(ரஹ்) தமது நூலில் இந்த வசனத்திற்கான விளக்கத்தில் அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என “ஜஹ்மிய்யா” என்னும் வழிகெட்ட பிரிவினர் கூறுவது போல கூறமாட்டோம். மாறாக அல்லாஹ் அவர்கள் கூறுவதையெல்லாம் விட உயர்வான நிலையில் இருக்கிறான் என, குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுவதாக குறிப்பிடுகின்றனர்.

ஆயினும், நீங்கள் எங்கிருந்தாலும் அவன் (அல்லாஹ்) உங்களோடு உள்ளான். (அல்குர்ஆன் 57: 04) என்ற வசனத்தின் கருத்து என்னவெனில், நீங்கள் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் அவன் உங்களை கண்காணித்துக் கொண்டும் உங்களின் செயல்களை கவனித்துக் கொண்டும் இருக்கிறான். அனைத்துமே அவனது ஞானத்திற்கும் பார்வை மற்றும் செவிப்புலன்களுக்கும் உட்பட்டவைதாம் என்பதாகும். இதுபோன்று வரக்கூடிய மற்ற ஆயத்துகளின் கருத்துகளும் இதுவேயாகும்.

நபிமொழிகள்:

1. நபி(ஸல்) அவர்கள் இறைவனுடன் உரையாடுவதற்கு (மிஃராஜ்) விண்ணேற்றத்தின் போது வானத்திற்குச் சென்றார்கள். அப்போதுதான் ஐவேளை தொழுகை கடமையாக்கப்பட்டது. (புகாரி, முஸ்லிம்)

2. (மக்களே) என்னை நீங்கள் நம்பமாட்டீர்களா? நானோ வானத்திலிருப்பவ(னான இறைவ)னின் நம்பிக்கைக்கு உரியவனாவேன்! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

3. பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் இரக்கம் காட்டுங்கள். வானில் இருப்பவன் (அல்லாஹ்) உங்கள் மீது இரக்கம் காட்டுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

4. நபி(ஸல்) அவர்கள் ஓர் அடிமைப் பெண்ணிடத்தில் அல்லாஹ் எங்கே இருக்கிறான்? எனக் கேட்டபோது, அந்தப் பெண் வானில் இருக்கிறான் எனக் கூறினாள். நான் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்றாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இந்தப் பெண்ணை விடுதலை செய்து விடுங்கள். இவள் முஃமினான பெண்தான் எனக்கூறினார்கள். (முஸ்லிம்)

இந்த நபிமொழியிலும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பது தெளிவாகின்றது.

5. அர்ஷ் நீரின் மீது உள்ளது. அல்லாஹ்வோ அர்ஷின் மீது உள்ளான். அவன் நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

நபித்தோழர்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றுக்கள்:

1. நபி(ஸல்) அவர்கள் மரணித்த நாளில் அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள், ‘யார் அல்லாஹ்வை வணங்குகின்றீர்களோ, அவர்கள் அறிந்து கொள்ளுங்கள், அவன் வானில் இருக்கிறான், அவன் மரணிக்கமாட்டான். (தாரமி)

2. எங்களின் இரட்சகனை நாம் எப்படி தெரிந்து கொள்வது என அப்துல்லாஹ் இப்னுல் முபாரக்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது, அதற்கவர்கள், அவன் தனது படைப்பினங்களை விட்டும் தனித்து வானில் அர்ஷின் மீது உள்ளான் எனக்கூறினார்கள்.

இதனின் பொருள்: அல்லாஹ் அர்ஷின் மீது தன் படைப்பினங்களை விட்டும் தனித்திருக்கின்றான், அவன் படைப்பினங்களில் யாரும், அவனின் உயர்வுக்கு ஒப்பாக முடியாது.

3. நான்கு இமாம்களும் அல்லாஹ் அர்ஷுக்கு மேல் இருக்கிறான் என்ற விஷயத்தில் ஒற்ற கருத்தில் இருக்கின்றார்கள். படைப்பினங்களில் அவனுக்கு யாரும் ஒப்பாக முடியாது எனவும் கூறுகின்றார்கள்.

4. தொழுபவர்கள் ஸுஜூது செய்யும் போது (சுப்ஹான றப்பியல் அஃலா) ‘உயர்வான எனது இறைவன் தூய்மையானவன்’ என கூறுவதும், பிரார்த்தனை செய்பவர்களும் பிரார்த்தனை செய்யும் போது அவர்களின் இரு கரங்களையும் வானத்தின் பக்கம் உயர்த்துவதும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பதை காட்டுகின்றது.

Thursday, February 21, 2013

விஸ்வரூபம்பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான்

விஸ்வரூபம்பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி

நாவூறும் நறுங்கனி பாடல் தரும் நாகூர் பெருங்கவிஞர் சலீம்

சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஆண்டு ‘இசைமுரசு’ பாடல்களைப் பாடியது எனக்குப் பல இந்திய ரசிகர்களை ஈட்டிக்கொடுத்தது.

“சென்னை அதிர்ந்தது” என்று என்னைத் தழுவி உளமார பாராட்டியவர்களில் ஒருவர் பிரபல வர்த்தகர், கலைப் பித்தர் காயல் ஷேக்னா.

தமிழகத்தின் தலை சிறந்த மாபெரும் கவிஞரை காயல் ஷேக்னா அறிமுகம் செய்து வைத்தார்.

கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம்!

பிறப்பு 1936 பெப்ரவரி 21. பொருளாதார வளமுடைய கவிஞராக விளங்குகிறார்.

நாகூரிலும் பாப்பாவூரிலும் பாட கவிஞர் சலீம் என்னை அழைத்தார்.

‘கித்ராத்’ இசைக்கலைஞர் மொஹமட் ஸியாட் சகிதம் நாகூர் போய்ச் சேர்ந்தேன்.

மகத்தான வரவேற்பு: நா ஊறும் பகல் விருந்து முதல் சந்திப்பிலேயே நாகூர் சலீம் சொந்தக்காரர் ஆகிவிட்டார்.

சங்கீதக் குயில் எஸ். சரளா இங்கிதக் கவிஞர் சலீம் வீட்டில் நிகழ்ச்சிக்காகத் தங்கியிருந்தார்.

சரளாவின் குரலினிமை இன்றும் மாறாமல் இத்தனை வயதிலும் தித்திக்கின்றதே…….

கடலுக்கே உப்பா? நாகூரில் பாடகி சரளாவுடன் இணைந்து ‘இசைமுரசு’வின் பாடல்களைப் பாடினேன்.

“நாகூர் ஹனிபா – காயல் ஷேக் முஹம்மதுவுக்குப் பிறகு உச்ச ஸ்தாயியில் பாடல் கேட்கிறேன்” என்று உளமார பாராட்டினார் பாவலர் சலீம். எனது குரல் இறைவன் தந்த அருள் என்றேன்.

காரைக்கால் தாவூத், நாகூர் இ.எம். ஹனிபா, சங்கநாதச் செம்மல் காயல் ஷேக் முஹம்மது, நெல்லை எஸ்.எம். அபுல்பரகாத் உட்பட நூற்றி எழுபத்து ஐந்து பாடகர்களுக்குப் பாடல் இயற்றிய பெருமை நாகூர் சலீமுக்கு உண்டு.

அதிகமான பாடகர்களுக்கும், பெரும் எண்ணிக்கையான பாடல்களையும் எழுதி யுள்ள கவிஞர் சலீம் தமிழ்த் திரை உலகில் முறையாக உள்வாங்கப்பட்டிருந்தால, இன்னுமொரு கண்ணதாசனை இனங்கண் டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.

நீங்கள் இயற்றிப் பிரபலமான பாடல்கள் எவை? நாகூர் சலீம் வரிசையாய் வழங்கியதில் கவிப் பானைச் சோற்றிலிருந்து சில மணி பதமாக….

“அருள் மணக்குது அறம் மணக்குது அரபு நாட்டிலே” பாடியவர்: இ.எம். ஹனிபா

“அல்லாஹ்வின் பாதையிலே வாருங்கள், அண்ணல் நபி சொன்னபடி வாழுங்கள்” பாடியவர்: ஷேக் முஹம்மது.

ஈச்ச மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை – ஷேக்முஹம்மது.

“எல்லாமே நீதான் வல்லோனே அல்லாஹ்” – எஸ். சரளா

“உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர், உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்.” – இசைமுரசு

“வாழ வாழ நல்ல வழிகளுண்டு – நபி

வழங்கிய நெறிகளிலே

வாரி வாரித் தந்த வைரமுண்டு – அவர்

வாய் மலர் மொழிகளிலே” – இசைமுரசு – கே. ராணி

Wednesday, February 20, 2013

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்- SEASONS ALI சீசன்ஸ்அலி


அன்புடன்.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L.,
Nidur,
Mayiladuthurai,
Tamilnadu,India.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
In the name of Allah The most Gracious The most Merciful!
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.
Every mistake is from me, and any Truth is from Allah, The Enduring One, He is the Enduring One, I know nothing save that which He hath taught me.

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன.

மனிதன் பிறக்கும் போது ஒன்றும் அறியாத பாலகனாகவே பிறக்கிறான். நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் வளர்க்கப் படும் விதத்தினாலும் சூழ்நிலையாலும் மாற்றப்படுகிறான். .
இறைவன் மனிதனையும் படைத்து சைத்தானையும் படைத்துள்ளான். அந்த சைத்தானிடமிருந்து பாதுகாப்பு நாட இறைவனைத்தான் நாட வேண்டும்.

காலத்திற்கு ஏற்றதுபோல் மக்களை திருத்துவதற்கு நபிமார்களை அனுப்பி வைத்தான். நபிமார்களுக்கு வேதத்தையும் தந்து அவர்களது வாழ்கை முறையும் சிறப்பாக கொடுத்து நம்மை அவ்வழி நடக்கச் சொன்னான். சிலர் வேதத்தையே மாற்றி விட்டார்கள் .முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்த வேதமும் (குர்ஆனும்) அவர்களது வாழ்வின் முறையும் கதீஸாக இருந்து இன்னும் மாறாமல் மாற்றப்படாமல்  வழிகாட்டுகின்றது.

நம் கடமை அதன் வழி நடப்பது . சுவனமும் நரகமும் படைத்தவனுக்கு தெரியும் தவறான வழி நடப்பவர்களும் இருப்பார்கள் அல்லது உடன் வாழ்பவர்களால் ஆக்கப்படுவார்கள் என்று.
கல்வி ,ஞானம் மார்க்கம் பெற்றவர்களது கடமை மற்றவர்களை திருத்துவது. அவர்களே தவறு செய்ய முனைவது மிகவும் கொடுமை. குடியை வெறு ஆனால் குடிகாரனை வெறுக்காதே. அவனை நல்வழி படுத்துவது நமது கடமை அதனையே 'தாவா'என்று அழைக்கின்றனர். நல்லவர்கள்  கெட்டவர்களை கண்டு ஒதுங்குவது ஏன்!
அவரைக்கண்டு அவர்களது மனம் மாற முயற்சிக்காமல் ஓடி மறைவது ஏன்!

அற்புத துபாய் பிரயாணம் போக அணுக..!


 உலகளாவிய புதிய வலை மூலம் சுற்றுலா

உலகளாவிய புதிய வலை மூலம் சுற்றுலா
உலக சுற்றுலா மற்றும் டிராவல்ஸ்
அனைத்து டிக்கெட் தீர்வு ஒரு முற்றுப்புள்ளி

 
தயவு செய்து இங்கு க்ளிக் செய்த பாருங்கள்http://www.travelbyglobal.com/view/snapshot

 

Dears,

We are proud to introduce the Amazing Dubai Tour Pack for 6 Night / 7 Days . . .

Refer the attachments and feel free to contact us . .  .

--

M. MOHAMED SHAFI
Global Tours and Travels

Jinnah Complex
143 Pattamangala Street
Mayiladuthurai 609 001
Phone : 04364 226544
Cell  : 9486 336544



from:     global travels <travelbyglobal@gmail.com>

Tuesday, February 19, 2013

'தலைப்பற்ற தாய்நிலம்' தொகுப்பு வெளியீடு

கவிஞர் ஃபஹீமா ஜஹானும், நானும் இணைந்து மொழிபெயர்த்த கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் 'தலைப்பற்ற தாய்நிலம்' எனும் சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல், இவ் வருடத்தின் முதலாவது தொகுப்பாக தற்பொழுது வெளிவந்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.

எழுநா, நிகரி பதிப்பகங்களின் இணைந்த வெளியீடாக வெளிவந்திருக்கும் இத் தொகுப்பின் நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் மாதங்களில் கீழுள்ள நாடுகளில் நடைபெற உள்ளது.

ஏப்ரல், 2013 - லண்டன், நோர்வே
மே, 2013 - கனடா, ஸ்விட்ஸர்லாந்து

இலங்கை, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் வசிப்பவர்கள் கீழுள்ள முகவரியில் தொடர்பு கொள்வதன் மூலம், இத் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம்.

Discovery Book Palace (P)Ltd
No.6, Magavir Comlex, 1st Floor
Munusamy Salai, K K Nagar West
Chennai – 600078
Tamil Nadu, India.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

Sunday, February 10, 2013

ஞானம் வேண்டும்

எதுகை மோனை
எதுவும் வேண்டாம்
யாப்பின் கோப்பும் வேண்டாம்
யாம்  வேண்டுவது பண்டம்

பண்டம் கவிதையாகவோ
பண்டம் கருத்தாகவோ
பண்டம் கலையாகவோ இருக்கட்டும்
பண்டம் மூளையில் பதியட்டும்

புரியாத மொழி
அறியாத நடை
விளங்காத படைப்பு
இருக்காது மனதில்

மனிதனை திருத்த அவன் மொழி நாடு
நலிவினைப் போக்க நல் வழி நாடு
களிப்பினை வாங்க எக் கடை உண்டு
களிப்பினை போக்க    ஞானம் உண்டு

Saturday, February 9, 2013

'ஒதுங்கினால் மற்றவர்களால் சமுதாயத்தில் நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள்.'

 கதிரின் வீச்சு, வேலையினால் வந்த களைப்பு உடலுக்கும் மனதுக்கும் மாறுதல் இடம் நாடியது. வியர்வைத் துளிகள் உடலில் வழிய வீடு செல்லாமல் கடற்கரை சென்று வருவோம் என அங்கு சென்றேன். இருள் கவ்வவில்லை சூரிய ஒளியின் வேகம் குறையவில்லை. கடலின் ஊடே வந்த காற்று வெப்பத்தை தணித்தது உடலுக்கும் உள்ளத்துக்கும் மகிழ்வைத் தந்தது.
   அந்திமயங்கும் நேரம் நெருங்க என்னருகில் ஒரு பெண் குடைபிடித்துக் கொண்டு நடந்து சென்று சிறிது தொலைவில் அமர்ந்தாள். தாகம் வர அவளிடத்தில் சென்று அவள் வைத்திருந்த நீரைப் பருக கேட்டேன். அவள் எந்த தயக்கமும் மறுப்பும் சொல்லாமல் குடிநீர் கொடுத்தாள். நீரை நின்றுக் கொண்டே பருக 'நின்றவாறு குடிக்காதீர்கள் அமர்ந்து குடியுங்கள்' என சொல்ல அவ்வாரே செயல்பட்டேன்.  பேச்சினை அவள் தொடங்க நானும் அங்கேயே அமர்ந்து அவளோடு பேசிக்கொண்டிருக்கும் போது " கடற்கரையிலும் குடை பிடித்து வருவதனை இன்றுதான் நான் பார்த்தேன்" என்று சொல்ல

Thursday, February 7, 2013

தந்தை..... (கொச்சகக் கலிப்பா) by இராஜ. தியாகராஜன்

அன்னையின் அன்பென்னும் அருமருந்தே அரவணைத்து,

மன்னவனே இவரென்று மக்களையே மனமுருகி,

இன்னாளின் செல்வமென  எந்நாளும் காத்திருந்து,

தன்னலமே தான்மறந்து தாரணியில் வாழ்ந்திருக்கும்!



தாயவளின் உள்ளமது தவறுகின்ற தன்மகனின்

காயங்கள் மட்டுந்தான் காணுமன்றி வேறெங்கும்

சாயுதலே இன்மையினால் தந்தையின் பாசத்தை

நேயமுடன் நானிங்கு நெகிழ்கவிதை பாடவந்தேன்!


உன்னழகு உனை விட்டுப் பிரியுமென்ற பேதமை புத்தி பெற்றாய்!

வேர் வழி  நீர் மரத்தை வலுவூட்ட
தொப்புள் கொடி வரும் சத்து சிசுவை வளர்க்க
உண்ட உணவில் சத்தாய் வந்தடைய உருவாகி
வயிறை விட்டுப்  பிரிய தொப்புள் கொடி அறுபட்டது

உன்னுடலில் உருவாகும் பால் எனக்காக உருவாக
உருவாகும் பாலை  உயிர் வாழ உவகையுடன் தந்தாய்
உன்னழகு உனை விட்டுப் பிரியுமென்ற பேதமை புத்தி பெற்றாய்
உருவாகும் பாலை தருவதை நிறுத்தி பால்கட்டி நடுங்குகின்றாய்

உன்  பால் நான் குடிக்க உயர்வாய் இருப்பேன்
உன்பால் உயிராய் இருப்பேன்
உன் பால் உன்னிடமே இருக்க உன் மேனி கெடும்
உன்பாலை ஊர வைத்தவன் உனை வருத்துவான்

பாலைத் தந்தவன் ஒருவனிருக்க
பாசமிருந்தும் பாலைத் தர மறுப்பதேன்
ஈராண்டு பாலை கொடுத்து எனை வளர்த்தால்
ஈன்ற பால் எதிர் கொல்லி நாசினியாக இருந்து எனை வளர்க்கும்

உன்பாலைவிட உயர்வான பாலுண்டோ!
உவகையாய் எனைப் பெற்று உன்பால் உறிய இசைந்திடு
தாயாய் பெண்பாலாய் இருக்க
தாய்ப் பாலின் மகிமை அறியாததேன்!

தகப்பனை முன்னிறுத்தி பெயரிட
தாயின்  பெயரை முகமூடிட்டு மறைப்பதேன்
தகப்பன் அடித்தளமாக நின்றாலும்
தாயே கட்டிடமாகியது

Wednesday, February 6, 2013

கடுகளவு வருந்தவில்லை குற்றம் செய்த மனசு


குளத்துலே தண்ணியில்லே மீனுமில்லே கொக்குமில்லே
குளத்துலே தண்ணி வத்திப் போச்சு மீனும் செத்துப் போச்சு
குளத்துலே மீனுமில்லே கொக்கும் வரவுமில்லே
குளத்துலே தமாரையுமில்லே தமாரைப் பூவுமில்லே
குளத்துலே தமாரைப்பூ இருக்கையிலே மதிப்பாச்சு
குளத்துலே கண்ட தமாரை கொடிமேலே ஏறிப் போச்சு
கொடிமேலே ஏறிய தமாரை மக்களை பிரிக்கப் போச்சு

மழையைக் கண்டு நாளாகுது
மழையில் நனைந்து நாளாகுது
பிழையைக் காண சுலபமாகுது
பிழைக்க வழி காண கடினமாகுது

கடுகளவு குற்றம் காண கடுஞ்சிறை நெருக்கமாகுது
கடுகளவு நன்மை செய்ய நேரமாகுது
கடுகளவு வருந்தவில்லை குற்றம் செய்த மனசு
கடுமையான குற்றம் செய்தாலும் கண்டுகொள்ள மனிதரில்லை

வேண்டும் வேண்டும் மனித நேயம் by சேவியர்.

Prof. Dr. John Lee அவர்கள் தயாரித்த "UNITY in INDIA" ஆல்பத்துக்காக Joseph Xavier Dasaian எழுதிய பாடல்..

வேண்டும் வேண்டும்
மனித நேயம்

நெஞ்சில் கொண்டால்
வாழும் தேசம்

வேண்டும் வேண்டும்
மனித நேயம்

மனிதம் மனிதம்
நமது கீதம்

உண்பது நம் உயிர்வரை செல்லும்
பண்பது நம் உயர்வினைச் சொல்லும்
அன்பது இவ் உலகினை வெல்லுமே



அறியா மையினை
அழிக்கும் மழையாய்
அறிவிங்கே பொழியட்டுமே

கல்விப் பயிர்கள்
தேசம் முழுதும்
செழித்திங்கே வளரட்டுமே

கல்லாத ஆளில்லை என் றிங்கே ஆகட்டும்
சொல்லாமல் சோகங்கள் சாயட்டுமே
தேசத்தின் தேகத்தில் நேசங்கள் பாயட்டும்
அன்போடு கல்வியும் பூக்கட்டுமே

இணைவோம் கரம்தொடு
அறிவின் வரம் கொடு
இனிய இந்தியா இனியென்றும் ஒளிவிடுமே


Monday, February 4, 2013

Seasons Ali Video (English/தமிழ்)..!: பார்க்க வேண்டிய காணொளி - Worth a watch This is jus...

Seasons Ali Video (English/தமிழ்)..!: பார்க்க வேண்டிய காணொளி - Worth a watch This is jus...:  சமநிலையை கையாளும் சாதனை .அவசியம் பார்க்க வேண்டிய காணொளி ONE OF THE MOST INCREDIBLE HUMAN FEATS OF BALANCE AND CONCENTRATION THAT HAS EVER ...

விஸ்வரூபம் : அந்த ஏழு காட்சிகள்

விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கைக்கிணங்க ஏழு காட்சிகள் நீக்கப்படும் என்றும் சில இடங்களில் ஒலிநீக்கம் செய்யப்படும் என்றும் கமல் ஹாசன் அறிவித்திருந்தார் அல்லவா? அவை பற்றிய விவரம் வருமாறு:

'இது உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு' என்று பெயர்ப்பட்டியலுடன் போடப்படும் அறிவிப்பு அட்டை மாற்றப்பட்டு 'இது ஒரு புனைவே' என்று காட்டப்படுமாம். சரியாகச் சொன்னால், "இது இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ மற்ற சாதி-மதத்தினரின் கோட்பாடுகளுக்கு எதிராகவோ எடுக்கப்பட்ட படம் அல்ல, இது ஒரு கற்பனை கதை, என்று படத்தின் தொடக்கத்தில் எழுத்துவடிவில் காண்பிக்கப்படுமாம்

மேலும் நீக்கப்படும் காட்சிகள் :

1.திருக்குர்ஆன் வசனப் பின்னணியில் அமெரிக்கரின் தலை துண்டிக்கப்படும் காட்சிகளும், வசனமும் நீக்கப்படும்

தலையிலமர்ந்த துயர் வர வாடினேன்!

கலையிழந்த பிடிப்பு
தலையிழந்த தரம்
வலையில் சிக்கிய மீனாகி
தலையிலமர்ந்த துயர் வர வாடினேன்

பகைபோன்றது படம்
நகையிழந்தது முகம்
பரிவானது மனம்
சரியானது குணம்

நன்மீன் உண்ணவில்லை
நனிவாடிற்று உடம்பு
நலிவுற்றோர் மீன் பிடிப்போர்
கலமோட்ட காசில்லை கடல்செல்ல!

எரிவாயு எகிரி நிக்க இயந்திரக்  கலமியங்கவில்லை
இயங்கும் அரசு கண்டு கொள்ளவில்லை
இசைப் பாடி எள்ளி நகைக்கின்றனர்
அரசின் அவல நிலைக் கண்டு!
                         உன்னை நேசிக்கிறேன்!

Sunday, February 3, 2013

உன் நிலைக்கு நீயே காரணமானாய்

உனக்கு வருத்தத்தை உருவாக்கியது உன் செயல்
எனக்கு வருத்தத்தை உருவாக்கியது உன் நிலை
உன் நிலைக்கு நீயே காரணமானாய்
என் நிலைக்கும் நீயே காரணமானாய்

உனக்கு பணமும் புகழும் வேண்டும்
எனக்கு பணம் கொடுத்து உன்னைப் பார்க்க வேண்டும்
உனக்கு என்னை மகிழ்விக்க மனமில்லை
எனக்கு உன்னை வருந்த வைக்க மனமில்லை

உனக்கும் எனக்கும் விரோதமில்லை
உனக்கும் எனக்கும் விட்டுக் கொடுக்கும் மனமிருந்தால்
வந்துவிடு மனதோடு பேசுவோம்
வதந்திகளுக்கு இடம் தராமல் தவிர்ப்போம்

புதிய தலைமுறை டிவியில் பீஜே அவர்களுடனான நேர்காணல்

புதிய தலைமுறை டிவியில் TNTJ மாநில தலைவர் பீஜே அவர்களுடனான நேர்காணல்
 காயிதே மில்லத் அவர்கள் காந்தியின் அறிவிப்பை கேட்டு மேற்கல்வியை படிக்காமல் விட்டு வந்தார்.
தேசத்திற்காக இந்த கல்வியை புறக்கணித்திருக்கிறோம் இட ஒதுக்கீடு கொடுங்கள்
 முஸ்லிம் சகோதரர்கள் கல்விக்கூடம் நடத்துவது வியாபார நோக்கத்தோடு நடத்துகிறார்கள்
வெளிநாடு அனுப்புவது பொருளாதார தேவைக்காக அனுப்புகிறோம் .

கமலஹாசன் குரல்- உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது...

கமலஹாசன் குரல்

உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது தீவிரவாதம் பிறந்தே தீரும்
காலம் முடிவு செய்யட்டும் .
சுமூகமான முடிவு ஏற்பட்டிருக்குமானால் ஆயுதம் ஏந்திருக்க மாட்டார்கள்
எந்த குழ்ந்தை செத்தாலும் அது பெரிய சோகம்தான்
------------------------------------------------------------------------------------------------------
உலகப் பிரச்னை
இலங்கையும் மற்ற
ஆப்கானிஸ்தானும்,ஈராக்கும் சிந்தியுங்கள்

Saturday, February 2, 2013

காயப்பட்ட உணர்வுகளால் முதல் உதவி பெற மறுக்கும் நபர்

கமலது இந்த சைகை மூலம் கேலி செய்து  தனது உணர்வுகளை காயப்படுத்தி விட்டதாக இர்பான் கூறினார்
Read more http://www.blogadda.com/viewblog?url=www.fakingnews.com/2013/02/man-with-hurt-sentiments-refuses-first-aid/

Friday, February 1, 2013

ஒன்று இழந்து ஒன்று சேர்ப்பதுதான் நியதியானது

ருந்த இடம் இடிந்தாலும்
இருக்குமிடம் உயர்ந்தாலும்
இருந்த இடம் இதயத்தில்
இனிமையாய் நிலைத்து நிற்கும்

வந்த இடம் புதிமையானது
புதிய இடம் புகழைத் தந்தது
வந்தவர்கள் புகழை நாடி வந்தனர்
வந்தவர் வாயார வாழ்த்திச் சென்றனர்

வந்து போனவர் மனதில் உள்ளதனை நான் அறியேன்
வாழ்த்துச் சொன்னதில் உள்ளம் உவகைக் கொண்டது
வந்த இடத்தில இருக்க கூடி வாழ்ந்த மக்களில்லை
வசதி நாடி வகுத்த இடத்தில் இருக்க நேரமில்லை

வசதியாக கட்டிய இடத்தில சேர்க்க பொருட்கள் வேண்டும்
வசதியை உருவாக்க பணம் வேண்டும்
இருக்க வேண்டிய இடத்தில் இருக்க முடியாமல்
இல்லாளை விட்டு நிமிடமும் பிரிய மனமில்லாமல்
இல்லாளை வசதியாக கட்டிய வீட்டில் விட்டு
வேண்டிய பணம் சேர்க்க பயணம் ஓட வேண்டும்

பொருளும் பணமும் வசதியைத் தந்தது
பணம் வர வேண்டியவர் வந்தனர்
இருக்க வேண்டியோருடன் இருக்க நேரமில்லை 
ஒன்று இழந்து ஒன்று சேர்ப்பதுதான் நியதியானது

நம்மோடு நிலையாக நிற்பது நிலையானதில்லை
நம்மோடு சேர்த்து வைத்த பொருள் நம்மோடு வருவதில்லை
நம்மோடு வருவதும் நிலையாக நிற்பதும் இறைவனது வாக்கோடு
நம்மோடு வந்து சேரும் நன்மையை சேர்த்து வைத்தால்