Thursday, February 21, 2013

நாவூறும் நறுங்கனி பாடல் தரும் நாகூர் பெருங்கவிஞர் சலீம்

சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஆண்டு ‘இசைமுரசு’ பாடல்களைப் பாடியது எனக்குப் பல இந்திய ரசிகர்களை ஈட்டிக்கொடுத்தது.

“சென்னை அதிர்ந்தது” என்று என்னைத் தழுவி உளமார பாராட்டியவர்களில் ஒருவர் பிரபல வர்த்தகர், கலைப் பித்தர் காயல் ஷேக்னா.

தமிழகத்தின் தலை சிறந்த மாபெரும் கவிஞரை காயல் ஷேக்னா அறிமுகம் செய்து வைத்தார்.

கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம்!

பிறப்பு 1936 பெப்ரவரி 21. பொருளாதார வளமுடைய கவிஞராக விளங்குகிறார்.

நாகூரிலும் பாப்பாவூரிலும் பாட கவிஞர் சலீம் என்னை அழைத்தார்.

‘கித்ராத்’ இசைக்கலைஞர் மொஹமட் ஸியாட் சகிதம் நாகூர் போய்ச் சேர்ந்தேன்.

மகத்தான வரவேற்பு: நா ஊறும் பகல் விருந்து முதல் சந்திப்பிலேயே நாகூர் சலீம் சொந்தக்காரர் ஆகிவிட்டார்.

சங்கீதக் குயில் எஸ். சரளா இங்கிதக் கவிஞர் சலீம் வீட்டில் நிகழ்ச்சிக்காகத் தங்கியிருந்தார்.

சரளாவின் குரலினிமை இன்றும் மாறாமல் இத்தனை வயதிலும் தித்திக்கின்றதே…….

கடலுக்கே உப்பா? நாகூரில் பாடகி சரளாவுடன் இணைந்து ‘இசைமுரசு’வின் பாடல்களைப் பாடினேன்.

“நாகூர் ஹனிபா – காயல் ஷேக் முஹம்மதுவுக்குப் பிறகு உச்ச ஸ்தாயியில் பாடல் கேட்கிறேன்” என்று உளமார பாராட்டினார் பாவலர் சலீம். எனது குரல் இறைவன் தந்த அருள் என்றேன்.

காரைக்கால் தாவூத், நாகூர் இ.எம். ஹனிபா, சங்கநாதச் செம்மல் காயல் ஷேக் முஹம்மது, நெல்லை எஸ்.எம். அபுல்பரகாத் உட்பட நூற்றி எழுபத்து ஐந்து பாடகர்களுக்குப் பாடல் இயற்றிய பெருமை நாகூர் சலீமுக்கு உண்டு.

அதிகமான பாடகர்களுக்கும், பெரும் எண்ணிக்கையான பாடல்களையும் எழுதி யுள்ள கவிஞர் சலீம் தமிழ்த் திரை உலகில் முறையாக உள்வாங்கப்பட்டிருந்தால, இன்னுமொரு கண்ணதாசனை இனங்கண் டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.

நீங்கள் இயற்றிப் பிரபலமான பாடல்கள் எவை? நாகூர் சலீம் வரிசையாய் வழங்கியதில் கவிப் பானைச் சோற்றிலிருந்து சில மணி பதமாக….

“அருள் மணக்குது அறம் மணக்குது அரபு நாட்டிலே” பாடியவர்: இ.எம். ஹனிபா

“அல்லாஹ்வின் பாதையிலே வாருங்கள், அண்ணல் நபி சொன்னபடி வாழுங்கள்” பாடியவர்: ஷேக் முஹம்மது.

ஈச்ச மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை – ஷேக்முஹம்மது.

“எல்லாமே நீதான் வல்லோனே அல்லாஹ்” – எஸ். சரளா

“உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர், உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்.” – இசைமுரசு

“வாழ வாழ நல்ல வழிகளுண்டு – நபி

வழங்கிய நெறிகளிலே

வாரி வாரித் தந்த வைரமுண்டு – அவர்

வாய் மலர் மொழிகளிலே” – இசைமுரசு – கே. ராணி


“நபிநாதர் வாசலுக்குச் செல்லப்போறேன் – இங்கே நடக்கிற கொடுமைகளைச் சொல்லப்போறேன்”

ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக! – ஷேக் முஹம்மது.

இன்று வந்து நாளை போகும் நிலையிலே நிலையிலே என்ன செய்து வாழுகின்றாய் உலகிலே…. உலகிலே – இசைமுரசு

தீனோரே ஞாயமா? மாறலாமா? தூதர் நபி போதனையை மீறலாமா? உள்ளம் சோரலாமா? இசைமுரசு – கே. ராணி.

“மக்கா யாத்திரை மறுமை யாத்திரை இரண்டும் ஒன்றேதான்…”

“கப்பலுக்கு போன மச்சான்

கண்ணிறைஞ்ச ஆச மச்சான்

எப்பதான் வருவீங்க எதிர்பார்க்கிறேன் – நான்

இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்” – ஷேக் முஹம்மது

ஜனரஞ்சகமான பாடல்களின் நாயகனை, நாகூரில், சந்தித்த சந்தோஷ பூரிப்பில் புறப்படுகிறேன் ‘இசைமுரசு’ இல்லம் நோக்கி…..!

கலைக்கமல்

Source
நன்றி: http://nagoori.wordpress.com வாரி வாரித் தந்த வைரமுண்டு - அவர்
வாய் மலர் மொழிகளிலே"- நாகூர் சலீம்
இனிய குரலால் பாடல் பாடும் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கும், பாடல் எழுதிய கவிஞர் நாகூர் சலீம் அவர்களுக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
S.E.A. முஹம்மது அலி ஜின்னா. நீடூர்.
S.E.A.Mohamed Ali (Jinnah), Nidur,
Jazakkallahu Hairan நன்றி

No comments: