Saturday, February 23, 2013

முடிகொண்டானிலிருந்து வந்து மயிலாடுதுறைக்கு மகுடம் சூட்டிய மருத்துவர் ராமமூர்த்தி

முடிகொண்டானிலிருந்து வந்து மயிலாடுதுறைக்கு மகுடம் சூட்டிய மருத்துவர் ராமமூர்த்தி Dr.V.Ramamurthi.M.B.B.S.,
                                                                                இந்த பட உதவி 

மயிலாடுதுறை சுற்று வட்டார மக்களுக்கு ராமமூர்த்தி டாக்டர் மிகவும் நேசமானவர்.
மருத்துவம் இவருக்கு ஒரு சேவையானது,
இவரது தந்தை S.வெங்கட்ராமன் S.Venkaetaraman
தாய் V. ராதை V.Rrathai
பிறப்பு :ஊர்- முடிகொண்டான்
மருத்துவர் ராமமூர்த்தி அவர்களுக்கு ஒரே மகனார் Dr.SRINIVASAN அவரும் ஒரு சிறந்த மருத்துவர் .
Dr.SRINIVASAN சிறுநீரக சிகிச்சை நிபுணர்( Dr.SRINIVASAN.M.S., DNB(GS),DNB.(URO) FRCS
CONSULTANT UROLOGIST
மருத்துவர் ராமமூர்த்தி மருமகளும் ஒரு மருத்துவர். தனது மகன் சென்னையோடு தன்னோடு இருக்கச் சொல்லியும் மயிலாடுதுறை மக்கள் நலம் நாடி தனது மனைவியோடு இருந்து தொடர்ந்து மருத்துவ சேவை  செய்து வருகின்றார். அவர் தான் பார்க்கும் நோயாளிகளிடமிருந்து பணம் கேட்பதே கிடையாது . நாமே விரும்பி அவரது மேஜையில் ஐந்து ,பத்து ,இருபது நம் விருப்பத்திற்கு நம் திருப்திக்கு வைத்து வர வேண்டியதுதான். சிலர் குறிப்பாக ஏழைகள் பணம் தருவதை அவர் விரும்புவதில்லை .'உங்களுக்காகவே இங்கு இருக்குறேன்  தனது மகன் சென்னையோடு தன்னோடு இருக்கச் சொல்லியும் போகாமல் இருக்கிறேன்' என்பார் .
அவர் வேண்டுதலுக்கு இணங்க அவர் மகனும் ஒரு மாதத்தில் இரண்டு நாட்கள் தன் தந்தையோடு இருந்து நீர் வியாதிக்கான வைத்தியம் பார்கிறார் .அவரும் அதிகமாக பணம் வாங்குவதில்லை.
 எங்கள் குடும்பத்தோடு மிகவும் நெருக்கமானவர் . அவரது தந்தை எனது பெரியப்பாவை மிகவும் நேசிப்பார் .ராமமூர்த்தி டாக்டர் அவர்களுக்கு கும்பகோணம் சிட்டி யூனியன் கணக்கு திறக்க எங்கள்  பெரியப்பா மயிலாடுதுறையில் பெரிய கடை வீதியில் அப்துற்  ரஹ்மான் சாஹிப் ('பெரிய முதலாளி ' என்று அழைப்பார்கள்) கையழுத்திட்டு தொடங்கி வைத்தார் என பெருமையாக விசுவாசமாகச்  சொல்வார் .இன்றும் சொன்னார்.


புனிதமான மருத்துவத் தொழில் மயிலாடுதுறையில் ராமமூர்த்தி டாக்டரால் புனிதம் பெற்றது  அருகாமையிலுள்ள கிராமப்புறங்களில் இருந்தெல்லாம் மக்கள்  அவரிடம் வருவார்கள். அவர் பரிந்துரைக்கும் மருந்து கூட மிகக் கம்மியான விலை கொண்டதாகத்தான் இருக்கும்.

டாக்டர் ராமமூர்த்தி அவர்கள் குடும்பம் நீடித்து வாழ்ந்து சேவை செய்ய இறைவனை பிரார்த்திப்போம்
 அன்புடன்,
S.E.A. முஹம்மது அலி ஜின்னா.
நீடூர்.
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."






ராமமூர்த்தி டாக்டர்  தந்தை S.வெங்கட்ராமன் S.Venkaetaraman
ராமமூர்த்தி டாக்டர் தாய் V. ராதை V.Rrathai



 மருத்துவர் ராமமூர்த்தி அவர்களுக்கு ஒரே மகனார் Dr.SRINIVASAN அவரும் ஒரு சிறந்த மருத்துவர் .
Dr.SRINIVASANசிறுநீரக சிகிச்சை நிபுணர்( Dr.SRINIVASAN.M.S., DNB(GS),DNB.(URO) FRCS

CONSULTANT UROLOGIST

 ராமமூர்த்தி டாக்டர் அவர்களுடன் நான் (முகம்மது அலி ஜின்னா,நீடூர்)

ஒரு ரூபாய் மருத்துவர் ராமமூர்த்தி | இப்படிக்கு இவர்கள்

9 comments:

Anonymous said...

Dr Ramamurthy! World's best doctor! My favorite too! May Allah bless him!

சமூக விழிப்புணர்வு பக்கங்கள் said...

நட்புக்கு சிறந்த எடுத்துக்காட்டானப் பதிவு !

mohamedali jinnah said...

Mohamed Sirajudeen said
"Dr Ramamurthy is a honourable person and don't expect money from his patients. We can not see such a true gentle man in this money mad society. Long Live Dr Ramamurthy."

”தளிர் சுரேஷ்” said...

இது போன்ற மருத்துவர்களை காண்பது மிகவும் அரிதாகி வருகிறது! நல்ல பகிர்வு! நன்றி!

அ.மு.அன்வர் சதாத் said...

அற்புதமான மனிதர்.

எனது ஆரோக்கியம்,
வளம்,வளர்ச்சி நலனில்
மிகுந்த அக்கறை கொண்டவர்.

எல்லோரும் போற்றும்
அற்புத மருத்துவர்.

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

கிளியனூர் இஸ்மத் said...

சென்ற ஆண்டு தாயகம் வந்திருந்தபோது வயிற்று போக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டது அப்போது எனது உறவினர் டாக்டர் ராமமூர்த்தியிடம் அழைத்துச் சென்றனர்.
அவரை பார்த்ததுமே சோர்வாக இருந்த எனக்கு புத்துணர்ச்சி பெற்றதைப்போல இருந்தது.
காரணம் டாக்டர் என்னிடம் நல்ல பழக்கமானவரிடம் பேசுவதைப்போல என்னிடம் உரையாடியதும் அவர் செய்த வைத்தியத்திற்கு மிக சொற்ப தொகையை பெற்றதும் எனக்கு வியப்பை ஆழ்த்தியது.
இன்ஷாஅல்லாஹ் இந்த முறை விடுமுறையில் வரும்போது நட்புமுறையில் அவரை சந்திக்க வேண்டும் நான் மட்டும் தனியாக அல்ல.
மதிப்பிற்குரிய பதிவுலக மேதை அன்புச் சகோதரர் நீடுர் முஹம்மது அலி ஜின்னா அவர்களுடன் செல்வேன்..
டாக்டரைப் பற்றி புழகப்படத்துடன் எழுதிய தங்களுக்கு பாராட்டுக்கள்.

அன்புடன்
கிளியனூர் இஸ்மத்

mohamedali jinnah said...

Syed Rahman, அ.ஜ. அமீனுதீன், Mohamed Sirajudeen
Mohamed Marzuk He is a great Doctor..... forever....
Yesterday at 20:05 ·
Mujeeb Rahman medical students has to learn how to become good dr from our Dr.Ramamurthy.
20 hours ago ·
Mohamed Buhari Doctors in mayiladuthurai should take him as an Inspiration to serve the public and he is the true inspirator for the future Doctors.We as a professional even though working in other forms of work should follow his way of serving pepole.by and large he is the Gentle man par excellence with out any doubt.i am really thankful to Jinnah uncle to publish a wonderful flash back memories.
10 hours ago ·
Farook Ali I have been living in Dubai for the past 36 years and I always remember Dr.Ramamurthy.I have also got prescriptions from him from time to time.I would always praise him and his service.I am very proud of the fact that my Grandfather helped him open his first bank account.I wish him a very very long and healthy life. I very clearly remember two funny incidents where I went to him. 1. When i had gotten married,due to a lot of parties,I got stomach upset.When i went to himhe said-"Ennada Ambi,mamaiya veettule ore virundha? 2.Once when i had wheezing trouble i went to him and he checked with his Steth and said -" Ennada ambi,poonai kutti kathudhu."
3 hours ago

Mohamed Nabees Long Live Dr Ramamurthy
மரியாதைக்குரிய மருத்துவரைப் பற்றி நேசித்து பலர் ஃபேஸ் புக்கிலும் மின்னஞ்சல் வழியாகவும் வாழ்த்து அனுப்புகிறார்கள் .அனைவருக்கும் மிக்க நன்றி

நன்றி கிளியனூர் இஸ்மத், அ.மு.அன்வர் சதாத்,
s suresh,Sirajudeen

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நமது மயிலாடுதுறை சுற்றுப்புற மக்களுக்காக சிறந்த சேவையாற்றும் மருத்துவர் ஐயா அவர்களும் மருத்துவர் சின்ன ஐயா அவர்களும் பல்லாண்டு வாழ்ந்து சேவையைத் தொடர்ந்திட வாழ்த்துவோம்.
(மருத்துவர் ஐயா = Dr.ராமமூர்த்தி, மருத்துவர் சின்ன ஐயா = Dr.சீனிவாசன்.)

அ.ஹ.நஜீர் அகமது said...

மனிதனை மனிதனாக மதிக்க கூடிய ஒரு நல்ல மனிதர் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் தனது
மருத்துவ பணியைஎல்லாமக்களுக்கும் ஒரே மாதிரியாக

எல்லோரிடமும் அன்பாக ,பண்பாக பரிவோடு நலம் விசாரித்து
மருத்துவ பணி செய்யும் உயர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க இறைவனிடம் துவா செய்தவனாக .
ஒரு நல்ல மனிதரை யாராலும் அடையாளம் காண முடியாமல்
அவரின் பணியை மற்றும் அனுபவிக்கும் நம் சுற்று புற ஊர் வாசி
மக்களுக்கு அடையாளம் காட்டிய எங்களூர்(நீடூர் -நெய்வாசல்)
முகம்மது அலி ஜின்னா அவர்களின் பொது தொண்டையும் கண்டு
மெய் சிலிர்க்க செய்கிறது .
யாரையும் போற்றுதலுக்கு ஒரு மனம் வேண்டும் அது நீடூர்-நெய்வாசல்
ஜனாப் .முகம்மது அலி ஜின்னா அவர்களிடம் உள்ளது ,அல்ஹம்ந்து
-லில்லாஹ் .