
1.திருச்சி , விமான நிலையம் அருகில் தங்களுக்கு இருந்த சொந்த இடத்தை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கிய குடும்பத்தின் வாரிசு !
2. 14 ஆண்டுகள் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர்
3.நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் இலவசமாக உண்ண உணவும் , இருக்க இருப்பிடமும் அளித்து ,கல்வி கற்கச் செய்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி,இன்று உலகெங்கிலும் பெரும் மேதைகளாக , பெரும் பணக்காரர்களாக , பெரும் தொழில் அதிபர்களாக பரவி வாழ்வதற்கு தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர் .
4.சென்னை பல்கலைகழக முன்னாள் செனட் சபை உறுப்பினர் .
5.பாரதிதாசன் பல்கலைகழக முன்னாள் நிலைக்குழு உறுப்பினர்
6. எல்லா மாநில மாணவர்களும் , டெல்லி சென்று தங்கள் கல்விச் சான்றிதழ்களை அட்டஸ்டேசன் பண்ணனும் என்று நிலையில் ,ஏழை மாணவர்கள் படும் கஷ்டத்தை கண்டு வருந்தி ; அந்ததந்த மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரத்தை மத்திய அரசு வழங்க காரணமாகத் திகழ்ந்தவர் .
7. சச்சார் கமிஷன் , ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அமைய காரணமாக இருந்தவர் .
8.வேலூர் பாரளுமன்ற உறுப்பினராக இருந்தவர் .
9.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாணவர் அணி தலைவர் , மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ,மாநில கலாச்சாரப் பிரிவு செயலாளர் , மாநில அமைப்புச் செயலாளர் ,மாநில பொதுச்செயலாளர் , இன்று மாநில தலைவர் மற்றும் அகில இந்திய பொதுச்செயலாளர் என்று தன் உழைப்பால் படிபடியாக உயர்ந்தவர்
நம் இனமானப் பெருந்தலைவர் , முனிருல் மில்லத் ,பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் !
ஸ்டார் விடுதிகளில் தங்கிக்குக் கொண்டு , சின்னத் திரை பேட்டிகளுக்கு ஆள்கள் மூலம் தங்களை வரவழைக்கச் செய்து , மேக்கப் பண்ணிக் கொண்டு சமுதாயத் தலைவர்கள் என்று பவனி வருபவர்கள் மத்தியில் , எம்பெருமானார் காட்டிய வழியில் அரசியல் நடத்திய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களை தன் அரசியல் தலைவராக ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய சமுதாயத்தின் மானம் ,மரியாதையை ,இச்ஷத்தை காப்பாற்ற பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைமகன் பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்கள் தலைமையில் நாம் பணி செய்வது அல்லா நமக்களித்த பெரும் பாக்கியம் !
அல்ஹம்துலில்லாஹ் ! அல்லாஹு அக்பர் !
யா அல்லாஹ் ! பேராசிரியர் கே. எம்.காதிர் மொஹிதீன் அவர்களுக்கு நல்ல உள்ளவளமும், உடல் வளமும் கொடுத்து சமுதாயத்தை தலைமை தாங்கி நடத்திட அருள்புரிவாயாக !
தகவல் தந்தவர்கள்
Hassane Marecan
Skm Habibulla
3 comments:
பதிவை வாசிக்க நெகிழ்ச்சியாக இருந்தது.
யா அல்லாஹ் ! பேராசிரியர் கே. எம்.காதிர் மொஹிதீன் அவர்களுக்கு நல்ல உள்ளவளமும், உடல் வளமும் கொடுத்து சமுதாயத்தை தலைமை தாங்கி நடத்திட அருள்புரிவாயாக !// ஆமீன்!!
இந்தக்காலத்திலும் இப்படி ஒருத் தலைவரா? உண்மையில் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நல்லவர்களும் இருப்பதால தான் முஸ்லிம் லீகை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியவில்லை. வாழ்க முஸ்லிம் லீக் தலைவர் வளர்க அந்த கட்சி. நீடூர் அன்சாரி - துபாய்.
இன்றும் இப்படிப்பட்டவர்கள் வாழ்வதால்தால் நாட்டில் சுபிட்சம் கொஞ்சமாகவது நிலவுகிறது! நல்ல நபரை பகிர்ந்தமைக்கு நன்றி!
Post a Comment