Wednesday, February 20, 2013

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன.

மனிதன் பிறக்கும் போது ஒன்றும் அறியாத பாலகனாகவே பிறக்கிறான். நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் வளர்க்கப் படும் விதத்தினாலும் சூழ்நிலையாலும் மாற்றப்படுகிறான். .
இறைவன் மனிதனையும் படைத்து சைத்தானையும் படைத்துள்ளான். அந்த சைத்தானிடமிருந்து பாதுகாப்பு நாட இறைவனைத்தான் நாட வேண்டும்.

காலத்திற்கு ஏற்றதுபோல் மக்களை திருத்துவதற்கு நபிமார்களை அனுப்பி வைத்தான். நபிமார்களுக்கு வேதத்தையும் தந்து அவர்களது வாழ்கை முறையும் சிறப்பாக கொடுத்து நம்மை அவ்வழி நடக்கச் சொன்னான். சிலர் வேதத்தையே மாற்றி விட்டார்கள் .முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்த வேதமும் (குர்ஆனும்) அவர்களது வாழ்வின் முறையும் கதீஸாக இருந்து இன்னும் மாறாமல் மாற்றப்படாமல்  வழிகாட்டுகின்றது.

நம் கடமை அதன் வழி நடப்பது . சுவனமும் நரகமும் படைத்தவனுக்கு தெரியும் தவறான வழி நடப்பவர்களும் இருப்பார்கள் அல்லது உடன் வாழ்பவர்களால் ஆக்கப்படுவார்கள் என்று.
கல்வி ,ஞானம் மார்க்கம் பெற்றவர்களது கடமை மற்றவர்களை திருத்துவது. அவர்களே தவறு செய்ய முனைவது மிகவும் கொடுமை. குடியை வெறு ஆனால் குடிகாரனை வெறுக்காதே. அவனை நல்வழி படுத்துவது நமது கடமை அதனையே 'தாவா'என்று அழைக்கின்றனர். நல்லவர்கள்  கெட்டவர்களை கண்டு ஒதுங்குவது ஏன்!
அவரைக்கண்டு அவர்களது மனம் மாற முயற்சிக்காமல் ஓடி மறைவது ஏன்!

Power corrupts; absolute power corrupts absolutely
இப்பொழுது முடியாட்சி இல்லை ஆனால் சர்வாதிகார ஆட்சி வேறு உருவத்தில் வந்துள்ளது.அனைத்து அதிகாரமும் தனக்குள் வைத்துக் கொண்டு மிக தவறான செயல்களை செய்து வருகின்றது. பிற நாடு தன் வசம் வர அல்லது தன் கொள்கைகளுக்கு ஒத்துப் போகவில்லை யென்றால் அந்த நாட்டையே அழிக்க பல்வேறு வழிகளை நாடுகின்றது.

உடலில் ஒரு முக்கியமான  சதைப் பிண்டம் உள்ளது அது (இதயம்)கெட்டால் அனைத்தும் கெட்டுவிடும், ஆரோக்கியமும் கேடும் மனதும் கெடும்

நோக்கம்
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள். -ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்.

தீவிரவாதம் பலவகையில் பரவ வழி வகுத்தவர் யார்! எந்த மார்க்கமும் தீவிரவாதம் பற்றி சொல்லவே இல்லை. அதற்கு வித்திட்டவர்கள் நாடாசை,பதவி ஆசை பண ஆசை மற்றும் பேராசை கொண்டவர்களே . அதற்கு முக்கிய இடம் அமெரிக்காவையே சாரும் அடுத்து படம் அது சம்பந்தமாக படம் .எடுப்பவர்களை சாரும் .

('இஸ்லாம் அமைதியைப் போதிக்கும் அற்புத மார்க்கம்.
ஒரு மனிதரைச் சந்திக்கும்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்ல வேண்டும். அதாவது "அன்பும் அமைதியும் நிறைக" என்று அதற்குப் பொருள். பிறகு மனிதர்களோடு சண்டையிட முடியுமா?
இஸ்லாத்தின் வேத நூலான குர்-ஆனைத் தொட்டால் அதன் முதல் வாசகத்தை ஓத வேண்டும். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அதாவது "அளவற்ற கருணையும் நிகரற்ற அன்பும் உடைய இறைவனின் பெயரால் தொடங்குகிறேன்"-    அன்புடன் புகாரி )

 பின் ஏன்  தீவிரவாதம் என்றாலே  முஸ்லிம்களை காட்டுகின்றனர். தனி மனிதன் அல்லது சில மனிதர் செய்யும்  தவறுதலுக்கு ஒரு மார்க்கத்தையே சிந்தித்து சிதைக்க வைக்க அமெரிக்காவின் சிலரால் உண்டாக்கும் செயலுக்கு உடன் போவது அறிவுடையாகுமா!
ஒருவரின் வளர்ச்சியையும் ஒரு மார்க்கத்தின் வளர்ச்சியையும் யாராலும் தடை போடா முடியாது .இறைவன் முற்றும் அறிந்தவன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அழகிய முன்மாதிரி!

Muhammad (SAW) Peace be Upon his Soul
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.

 إِنَّ اللَّهَ وَمَلَـئِكَـتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِىِّ يأَيُّهَا الَّذِينَ ءَامَنُواْ صَلُّواْ عَلَيْهِ وَسَلِّمُواْ تَسْلِيماً
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் 33:56)

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails