Wednesday, August 1, 2012

திருட்டா? காணவில்லையா? ஓட்டமா ! முடிவுக்கு வாருங்கள்.

 காணவில்லை! கண்டு பிடித்து கொடுப்பவருக்கு அன்பளிப்பு வழங்கப்படும். இது அக்காலத்தில் குழந்தை  காணாமல் போனால் வரும் செய்தி. அதை வைத்து 'மாக்கான் பிடிச்சிட்டு போய்டுவான்' என்று அச்சமூட்டுவோம். அக்காலத்தில் வாசலில் தொங்கும் பல்பு திருட்டு போகும் . காலம் மாறிவிட்டது இப்பொழுது சிறிய திருட்டுக்கு யாரும் ஆசைப்படுவதில்லை அதேபோல் குழந்தைகளை  தூக்குவதற்கும்  விரும்புவதில்லை. நாகரீக திருட்டு நடைபெருகின்றது. வீட்டில் புகுந்த திருடன் நகைகள் மற்றும் பணத்தினைத் தவிர மட்ற  பொருட்களை திருடுவதில்லை.
அந்த கதிதான் பெண்களுக்கும் வந்துவிட்டது.
திருட்டானால் அல்லது காணாமல் போனால் அரசிடம் முறையிட வேண்டும்.
  இதனை கிளிக் செய்து படியுங்கள்   கையூட்டை கலைவது கைக்கூடுமா!
ஓடிப்போனால் இறைவனிடம்தான்  முறையிட வேண்டும்.நாமும் அதற்கு காரணமாக இருந்தால்  இறைவனிடம் பாவ மன்னிப்பு நாடி இனி அவ்விதம் நடக்காமல் இருக்க வழி தேடிக்கொள்ள வேண்டும் . 
  இதனை கிளிக் செய்து படியுங்கள்   ஓடிப்போவது ஏன்? எதற்காக?  

தவறுகள் ஆணிடமில்லை பெண்ணிடமில்லை. இது  காலத்தின் மாற்றம்,
நாம் வாழும் காலம் மறுமலர்ச்சி காலம், இங்கு என்ன புரட்சியா  நடந்துவிட்டது? எகிப்தில் கமால் பாட்சா புரட்சி வழி கொண்டு  பெண்களுக்கு உரிமை கொடுத்து மாற்றம் கொடுத்தார் . இஸ்லாம் அனைத்து உரிமையும்  பெண்களுக்கு தந்திருந்தபோதும் அதனை முறையே பயன்படுத்தாமல் ஒரு சில முல்லாக்களின்  தவறான பிரசங்கத்தினால் பெண்களை கல்வி கற்க விடாமல் செய்து வீட்டிற்குள் முடக்கி விட்டோம். தற்பொழுது  அந்த நிலையில் மாற்றம் வர பெண்களும் உயர் கல்வி பெற்று வருகின்றனர். கல்வி பெற கல்லூரி   சென்றால் கெட்டுவிடுவார்கள் என்ற தவறான பிடிவாதத்திலிருந்து இப்பொழுதுதான் மீண்டு வருகின்றோம். மறுமலர்ச்சி காலத்தில் ஒரு சில தவறு நடக்கத்தான் செய்யும் அதற்காக அனைத்துமே தவறாகி விடும் என்ற முடிவுக்கு வருவது  மூடத்தனம்.காக்காய் அனைத்துமே கருப்பல்ல    பல நாடுகளில் வெள்ளை காக்கைகள் உண்டு. ஒரு சிலர் பாடசாலைக்கு வரும்போது தர்ணாவில் ஆரம்பிக்க அது அனைவருக்குமே உடந்தையானது என்ற  முடிவுக்கு வர வேண்டாம்.
இலட்சத்தில் ஒரு பெண் ஓடிபோனால் அதற்காக அனைத்துப் பெண்களும் ஓடிப்போவார்கள் என்ற முடிவுக்கு வந்தால் ஒருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடியாது . உலகமே நிலை தடுமாறி விடும் .(மேற்கோள்களும் பழமொழிகளும்  கொடுத்தால் கட்டுரை இன்னும் நீண்டுவிடும்)

3 comments:

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் அய்யா...

பயன்தரும் பதிவு அய்யா....

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

salaam,

மாஷா அல்லாஹ் நல்ல கட்டுரை ...இஸ்லாம் சொல்வதை கேட்போம்,நபிவழி நடப்போம் இன்ஷா அல்லாஹ் ....என் தளத்தில் நீங்கள் இன்னும் உறுபினராகவில்லையா?

உங்களுக்கு ஒரு தனிப்பட்ட வேண்டுகோள்:எனது தளத்தில் பைத்துல்மால் பற்றிய கட்டுரையை படித்திருப்பீர்கள் அதற்கு தங்களால் ஆன உதவியை செய்ய முன்வரலாமே ...


புதிய வரவு:

விஜய் டி.விக்கு புகாரை உடனடியாக அனுப்புங்கள்

read more-http://tvpmuslim.blogspot.in/2012/08/ban-vijay-tv-program-cinema.html

HOTLINKSIN.COM திரட்டி said...

சிந்திக்க வைக்கும் விஷயங்கள்...