Sunday, July 29, 2012

ஃபேஸ்புக் நண்பருக்கு அன்பு மடல்

அன்பு நண்பா,
தங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். பேஸ்புக் நமக்காக நல்ல மனதோடு ஓர் இடம் தந்துள்ளது (ஃபேஸ்புக் பணம் ஈட்டுவது அதன் தொழில்) அந்த இடத்தை நேரம் கிடக்கும்போதேல்லாம் உள்ளத்தின் உணர்வுகள் உந்தப்பட்டு மனதில் உள்ளதைக் கொட்டி இதய பாரத்தைக் குறைக்க முற்படுகின்றோம்.நேரில் பேசும்போது வாக்குவாதம் வந்துவிடும் அதனால் ஃபேஸ்புக்கில்   பேசலாமென்றால் இங்கும் எனக்காக உள்ள  இடத்தில்   நீ மனதை புண்படுத்தும் படியாக எதாவது உன் மனம் போன போக்கில்  எழுதி வைத்து உனது கருத்தை வெளிப்படுத்துகின்றாய். நண்பன் என்றால்  உதவிக் கரம் கொடுப்பவர்,உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும். நான் எழுதுவது உன் கருத்துக்கு உடன்பாடாக இருக்க வேண்டிய அவசியமில்லை. விரும்பினால் ஒரு 'லைக்' போடு அல்லது மனம் புண்படாமல் உன் கருத்தை எழுதிவிடுவதுதான் சிறப்பு, அதை விடுத்து  என் மனதை நோகச் செய்ய முற்படாதே! உன் இடத்தில போய் நீ விரும்பியதை எழுதிவிட்டுப் போக உனக்கு அனைத்து உரிமையும் உனக்கு உண்டு. உன் உரிமை என் உரிமையை பாதிக்காமல் பார்த்துக்கொள். உனக்கு குடை பிடித்துப் போக உரிமையுண்டு ஆனால் அது என் மூக்கில் குத்தாமல் பார்த்துக் கொள்வது உன் கடமை .  நட்புக் கரம் நீ நீட்டும்போது உன்னை நான் நண்பனாக ஏற்று கொண்டேன் . நட்பை மறுப்பது கூடாது என்பதுதான் அடிப்படைக் காரணம் . உன்னை எந்த விதத்திலும்  தனிப்பட்ட முறையில் நான் எதையும் எழுதுவதில்லை என்பதனை நீ அறிவாய் . மற்ற எனது கருத்துகள் உனது கருத்தோடு ஒன்றிப்போக வேண்டிய அவசியமும் இல்லை அதனை நீ அவ்விதம் எதிர்பார்ப்பதும்  முறையல்ல என்பதனை நீ அறிய வேண்டும்.
நாளாகும் நட்பை வளர்க்க நிமிடம் போதும் நறுக்க.
என்றும் உன் நலம் நாடும் நண்பன், 

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

 குறள் 788:

    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு.
  
Translation:
As hand of him whose vesture slips away,
    Friendship at once the coming grief will stay.

Explanation:

    (True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).

Source : http://www.thirukkural.com/2009/02/blog-post_24.html

S.E.A. முஹம்மது அலி ஜின்னா
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி

3 comments:

ஸாதிகா said...

நாளாகும் நட்பை வளர்க்க நிமிடம் போதும் நறுக்க.//அருமையான இடுகை.அருமையான தத்துவம்.

mohamedali jinnah said...

சகோதரி ஸாதிகாவின் பாராட்டுதல் மகிழ்வைத் தருகின்றது

HOTLINKSIN.com திரட்டி said...

அப்படிப்பட்ட நண்பர்கள் இந்த மடலைப் படித்தால் நிச்சயம் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வார்கள்...